Saturday, October 7, 2017

ரகுராம் ராஜன் நோபெல் பரிசு பெற வாழ்த்துகள்: கவிஞர் தணிகை.

முன்னால் ரிசர்வ் பாங்க் கவர்னர் ரகுராம் ராஜன் நோபெல் பரிசு பெற வாழ்த்துகள்: கவிஞர் தணிகை.

நேற்று முதலாம் ராம்நாத் கோயாங்கா லெக்சரை ரகுராம் ராஜன் ஆற்றுவதை சுமார் 50 நிமிடம் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை மிகத் தெளிவாக அனைவர்க்கும் புரியும் வண்ணம் மிக எளிமையாக இருந்தது . இது 2016ல் மார்ச் மாதம் பேசியதாம்.கவனித்தேன். பார்த்தேன் கேட்டேன்.

ரகுராம் ராஜனுக்கு நோபெல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள். அதுவும் இந்த ஆண்டு கிடைக்க வாய்ப்பு என்றும் கூறப்படுகிற நிலையில் நோபெல் கமிட்டி நாளை அதாவது திங்கள் கிழமை அதன் அறிவிப்பை செய்தல் கூடும். அப்படி இல்லை என்றாலும் முன் வரும் ஓரிரு வருடங்களில் அவருக்கு கிடைத்தே தீரும் என்று கருத்து உறுதிப்படுத்துகிறது.


நோபெல் பரிசுக்காக நியமிக்கப்பட்டுள்ள 6 பேர் பட்டியலில் ரகுராம் ராஜன் பெயர் இடம்பெற்றுள்ளது.உலகத்தின் 6 அறிவார்ந்த வல்லுனர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார் என்பதும் நோபெல் பெற்று விட்டால் இந்த ஆண்டின் தலை சிறந்த முதலாம் பொருளாதார மேதை என்பதெல்லாம் நாம் கொண்டாட வேண்டிய விடயங்கள்தான்.இவர் மோடி சொன்ன டிமானிட்டேஷன் வேண்டாம் என்று தமது பழைய பணிகளுக்கே திரும்புகிறேன் என இந்திய ரிசர்வ் பாங்க் பணியை உதறி வெளியேறியவர் மட்டுமல்ல போபாலில் நம் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் இவரது தந்தை ஆர். கோவிந்தராஜன் ஒரு ஐ.பி.எஸ் 1953 ஆன் ஆண்டில் டாப்பர். இவர் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகியவற்றில் படித்து முக்கியமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எம்.ஐ.டி. ஸ்லோவன் பிசினஸ் மேனஜ்மென்ட் ஸ்கூலில் பி.ஹெச்.டி முடித்தவர். இளமைப்பருவத்திலேயே தந்தையின் றா ரிசர்ச் அன்ட் அனைலைசிங் விங்க் பணியின் காரணமாக பெல்ஜியம், இலங்கை என்று சென்று இந்தியாவில் படித்து சில மாதங்கள் டாட்டா கல்வி நிறுவனத்திலும் பயிற்சிக்காலத்தில் இருந்தவர்.

ஒரு மேதையை இந்தியா தமது சேவையில் தக்க வைக்காமல் இழந்திருக்க உலகு தக்க வைத்துக் கொண்டுள்ளது தமத் அங்கீகரிப்பால். அவர் நோபெல் பரிசு பெற வாழ்த்துகள். அவர் தமது 54 வயதிலேயே இந்த ஏணிப்படியில் ஏறி இருப்பது பெறும் சாதனை.

ஒரு தமிழர் பொருளாதாரத்தில் நோபெல் பரிசு பெறுகிறார் என்பதில் நாம் உள்ளபடியே பெருமிதம் கொள்ளலாம்.

ரகுராம் ராஜன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற வாய்ப்பு - அமெரிக்க நிறுவனம் தகவல்
வாஷிங்டன்:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'கிளாரிவேட் அனலிடிக்ஸ்' நிறுவனம், அறிவியல், கல்வி, காப்புரிமை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், நடப்பாண்டில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை தயாரித்துள்ளது. இதில், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் பெயர் இடம்பெற்றுள்ளது.

2008-ம் ஆண்டில் அமெரிக்கா பங்குச்சந்தைகள் பேரழிவை சந்திக்கும் என முன்கூட்டியே கணித்துச் சொன்னவர், ரகுராம் ராஜன். அவர் கணிப்புப்படி, அந்த ஆண்டில் அமெரிக்கா, பொருளாதார ரீதியில் பலத்த பின்னடைவை சந்தித்ததோடு, அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது.

பொருளாதாரம் தொடர்பாக புகழ்பெற்ற பல புத்தகங்களை ரகுராம் ராஜன் எழுதியுள்ளார். அவர், பொருளாதாரத் துறைக்கு, அரிய பணிகள் ஆற்றியுள்ளதாக கிளாரிவேட் நிறுவனம் கருதுகிறது.

இந்தாண்டில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் வாய்ப்புள்ளதாக கிளாரிவேட் அனலிடிக்ஸ் தயாரித்துள்ள பட்டியலில் ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் ரகுராம் ராஜன் பெயரும் இடம்பெற்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில், கிளாரி வேட் நிறுவனம் தயாரித்த பட்டியல்களில் இடம்பெற்றவர்களில், 45 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
thanks: malai malar.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

 1. Replies
  1. thanks for your greetings with my hand.vanakkam

   Delete
 2. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. thanks to join with my hand sir. vanakkam.

   Delete