Tuesday, October 31, 2017

ஆசன வாய் சுத்தம்: கவிஞர் தணிகை

ஆசன வாய் சுத்தம்: கவிஞர் தணிகை

Image result for indian method of toilets


நேற்று வாய் சுத்தம் பற்றி எழுதிய பதிவை பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள், பயன் அடைவீர் என நம்புகிறேன்.

இன்று ஆசன வாய் சுத்தம் பற்றிய பதிவும் அது போல மிகவும் பயனுடைய பதிவு. ஏன் எனில் ஆசன வாய் என்பது பத்மாசனம் போல சம்மணமிட்டு ஒரு தாமரை வடிவ பூ போல அமர்வது, பத்மம் என்றால் தாமரை. அப்போது நமது குதம் மலத்தை வெளியேற்றும் பகுதி சுருங்கி இருக்கும் ஆனால் சூடாகி விடும் அதிக நேரம் அமர்ந்த நிலையிலேயே இருப்பார்க்கு. அதன் சுருங்கி விரியும் தன்மை தானாக இயல்பாக நடப்பது. அது நன்றாக பணி செய்யும் வரை அந்த உறுப்புக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை எனப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அதில் ஏதாவது வலி ஏற்பட்டாலோ,புண், வெடிப்பு, சிறு சிராய்ப்பு போன்றவை ஏற்பட்டாலும் அது மரண அவஸ்தை விளைவிக்கும் நாம் மலம் கழிக்கும்போது. ஒவ்வொரு உயிருள்ள ஜீவனும் தாம் உண்ட உணவை செரித்து தமது உடலுக்கு தேவையான சக்தியை எடுத்த பிறகு எச்சத்தை அனுதினமும் வெளியேற்றியே தீரவேண்டும் அப்படி இல்லாவிட்டால் அது மிகபெரும் விஷத்தன்மையாக மாறி உடலுக்கு ஊறு விளைவிக்கும்.

அதுவும் நமது தமிழ் மருத்துவ முறைப்படி தினம் செய்ய வேண்டிய வேலையாக மலம் கழித்தலை இருமுறை செய்தால்தான் உடல் நல்ல நலமாக இருக்கும் என்றும் இருக்கிறது.

மேலை நாட்டார் அல்லது வெள்ளை மற்றும் இதர பிற இனங்களில் எல்லாம் மலம் கழித்தபிறகு தண்ணீர் விட்டு கழுவும் முறைகள் இல்லை. டிஷ்யூ பேப்பர் கலாச்சாரம் என்பார்களே அதன் படி துடைத்து எறியும் பழக்கமே இருக்கிறது. அவர்கள் உணவு முறை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அப்படிச் செய்வது தவறான சுகாதாரமின்மைக்கு வழிகூட்டுகிறது.

எனவே அந்தக் கற்காலத்தில் வாழ்வது போல சில மனிதர்கள் மலம் கழித்தபிறகு கற்களை, இலையை, எடுத்து துடைத்து எறியும் பழக்கம் எல்லாம் உடையவராய் இருந்தனர் ஆனால் அவை எல்லாம் மிகவும் கிருமிகளை உண்டாக்கி உடல் நோய்க்கு வழிகாட்டுவதாகவே இருந்தன.

 மூன்று கல் எடுத்து துடைத்தால் முழங்கால் அளவு தண்ணீரில் கால் கழுவியது போல என்று ஒரு பழமொழியே இருந்தது இருக்கிறது என்றால் அவற்றை எப்படிச் சொல்வது?

தண்ணீர் விட்டு மட்டுமல்ல குளியல் சோப் போட்டு அந்த ஆசன வாயைக் கழுவிக் கொள்ளுதலும், கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ளுதலுமே முறையான அணுகுமுறையாகும்.

மேலும் அது மட்டுமல்ல, ஆசன வாயுள் இடது கையின் நடு விரலை செலுத்தி மலக்குடலை சுத்தம் செய்து அங்கு ஏதாவது அசுத்தம் இருந்தால் அவற்றை எல்லாம் சுத்தமாக வழித்து எடுத்து விட்டு சோப் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, தமிழ் நாடி வைத்திய முறைப்படி பார்க்கப் போனால், உடலில் மலச்சிக்கலே இருக்கக் கூடாது. மலச் சிக்கல் இருந்தால் அது உடலுக்கு பெரும் கேடு விளைக்கும், எனவே அதற்கேற்ற மலச்சிக்கல் ஏற்படாத உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும். அதாவது காய்கறிகள்,.பழங்கள், கீரை வகைகள், இரசம், போன்றா மலமிளக்கி பொருட்களை உண்பார்க்கு இந்த மலச்சிக்கல் என்றுமே தோன்றாது

மகாத்மா காந்தி அந்தக் காலத்தில் அதை மலஜலம் கழிப்பது என்பார். மலமானது கெட்டியாக இல்லாமல் இளகி, நீர்மப் பொருளாக வெளியேறுவது சரியானது என்பார், அதற்காக வய்ற்றுப் போக்கு என்று சொல்லுமளவு நீர்மமாக இருக்கக் கூடாது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

அரை வயிறு உணவு,கால் வயிறு நீர், கால் வயிறு வெற்றிடம் அல்லது காற்று இருப்பார்க்கு எந்த வித செரிமான பிரச்சனைகளுமே ஏற்பட வழியில்லை.

நிறைய நீர் குடித்துப் பழக வேண்டியதவசியம்.\

அதாவது காலையில் கழிக்கும் மலம் துர்நாற்றம் எடுப்பதாக இருந்தாலே நீங்கள் உங்கள் முன் நாளில் உண்ட உணவு சரியில்லை என்று பொருள் கொள்ள வேண்டும். சாப்பிடும் உணவுக்கும் மலம் வெளியேறுதலுக்கும் ஒன்றுக்கொன்று நேர்விகிதம்.

சுஜாதா கூட சொல்லியிருப்பார் தமது 70 வயதில் காலையில் எழுந்ததும் மலம் கழித்தல் சுலபமாக இருந்தாலே அது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும் என்கிறார்.

எனவே நடுவிரல் ,கொண்டு உள்ளே கெட்டிப் பட்டிருந்தாலும், கைக்கு எட்டும் வரை அந்த உடலுள் சேர்ந்த கழிவை வெளியே எடுத்துவிட்டு குளியல் சோப் இட்டு கைகளையும் ஆசனவாயையும் கழுவதே சுகாதாரமானது.

எனவே நாம் உண்ணும் உணவை நன்கு தேர்வு செய்து உண்பதுடன் நாம் கழிக்கும் மலம் நல்ல எருவாக பயன்படுவதுடன் துர்நாற்றமில்லாமல் இருக்கும்படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியதவசியம். எனவேதான் அந்தக் காலத்தில் காடு கழனிகளில் எல்லாம் ஒரு குழி பறித்து அதில் கழித்து அதை நன்கு ஈ மொய்க்காதாவாறு மூடி வைப்பார்கள் மண்ணால்.

ஆனால் இப்போது இவை எல்லாம் நவயுகமாக அறிவியலாக மாறி குந்தி இருக்கும் முறை எல்லாம் மாறி தவறான முறையில் அமர்ந்திருப்பதே நாகரீகம் என்றுகருதப்பட்டு உடல் நலம் கெடுக்கப்படுகிறது. இந்திய முறையில் அமர்ந்து மலம் கழிக்கும் வழியே சிறந்தது என்றும் உலகு ஏற்றுக் கொண்டுள்ளது.மிக முக்கியமானது மலம் கழிக்கும் குதம் மிகவும் மென்மையான சதையால் ஆனது நகம் எல்லாம் வளர்த்துவோர் அப்படி எல்லாம் குதத்தின் உள்ளே விரலை விட்டு சுத்தம் செய்யவும் கூடாது, முடியாது. ஏன் எனில் அந்த நகக் கீற்றுகள் கெடுதல் செய்து சதை எங்காவது கிழிபட்டால் அதுவே நன்மை செய்வதற்கு மாறாக பெரும் தீங்காக முடிய தோற்றுவாயாக அமைந்துவிடும்.

அது மட்டுமல்ல நகக் கண்களில் இந்த மலம் ஒட்டிக் கொண்டு துல்லியமாக சோப்பினால் கழுவ முடியாமல் போகுமானால் அதுவே வியாதி பரவ காரணமாகிவிடும் எனவே நகம் வளர்ப்பது எந்த வகையில் பார்த்தாலும் மோசமான தீமை விளைக்கும் பழக்கம். உடல் ஓம்பும் முறைக்கு ஒவ்வாதது.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

 1. மிகவும் பயனுள்ளபதிவு நண்பரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. thanks for your appreciation of this post sir vanakkam.

   Delete
 2. ஆசன வாய் சுத்தம்: கவிஞர் தணிகை - அருமையான, பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Tanigai Ezhilan Maniam

  ReplyDelete
 3. thanks for you being always behind me to focus on light sir by the way of sharing my post and for your feedback and well wishes.

  ReplyDelete