Thursday, October 19, 2017

கமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு வரவேற்கத் தக்கதே: கவிஞர் தணிகை.

கமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு வரவேற்கத் தக்கதே: கவிஞர் தணிகை.
Related imageImage result for kamalhasan sorry abot demonitation


மோடியின் டி மானிட்டேசன் தவறு என்று நாங்கள் ரகுராம் ராஜன் எல்லாம் சொல்லியபோது ரஜினி, கமல் இன்ன பிற நடப்பறியா நடிகர் கூட்டம் ஏன் நல்ல நிர்வாகத் திறமை உள்ளார் எல்லாம் கூட வரவேற்றனர். ஆனால் கமல் என்ற பிரபலம் அதற்காக இப்போது பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது அவரது மாண்பைக் காண்பிக்கிறது. அவரும் மனிதர்தானே!

அவரிடம் உள்ள குறையை அவர் ஏற்றுக் கொள்கிறார் என்னும்போதே அவர் சிறப்பானவர் என்ற தகுதியைப் பெற்று விடுகிறார். ரஜினியை வேண்டாம் அரசியலுக்கு வேண்டாம் எனத் தடுத்த அவர் மனைவி லதாவோ இப்போது அவர் அரசியலுக்கு வந்தால் நல்லதை செய்வார் என்கிறார்.  ஆக சினிமாத்துறைக் கலைஞர்களில் இந்த இருவருக்கும் அரசியலில் வர ஒரு ஈர்ப்பு.

நான் ஆளும் பதவிக்கு வராவிட்டாலும் நல்லபடியாக  அந்த வாய்ப்புள்ள நல்லோர்க்கு ஏவல் செய்வேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளதையும் கவனிக்கத்தான் வேண்டும்.

சாருஹாசன் இவர்கள் இருவர் பற்றியும் மிக நிதர்சனமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். அதுதான் உண்மையாக நமது நாட்டில் இருக்கும் நடப்பு என்றே நாமும் நமது கருத்துகளை பதிந்திருக்கிறோம்.

கமலிடம் குறை என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிப்புகளில் தவறுகள் இருப்பதை அவரே ஏற்றுக் கொள்வது ஒரு நல்ல மரபு. அவர் கூட கலை உலக ஞானி என்று பாராட்டப் பட்டாலும், அழுகாதீங்க, என்றே கற்றுக் கொண்டிருக்கிறார் அழாதீங்க, அழுவாதீங்க என்று பேசுவதற்கு மாறாக காய்கறிகள் அழுகுவதை சொல்வார்களே அது போல, இன்னும் பிரபலங்கள் பலருக்கும் கூட பிரயோஜனம் என்று சொல்லத் தெரியாது, பிரோஜன்ம் என்றே சொல்வார்கள், சொல்கிறார்கள், முப்பது, முப்பத்து என்பதற்கு நுப்பது என்றே பலரும் சொல்கிறார்கள். எனவே தமிழ் அப்படி சின்னா பின்னப்படும் நிலையில் நல்லவேளை பிக்பாஸில் கவிஞர் சிநேகனுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் இல்லை, மனோன்மணியம் பெ.சுந்தரனார் என்பதை கமல் தெளிவு படுத்தியது பற்றி மகிழலாம்.

அதே போல கமலை மற்றும் ஒரு முறை ஊடக அன்பர்கள் சூழ்ந்து கொண்டு ஏதோ ஒரு நெருக்கடியான கேள்வியைக் கேட்டதற்கு, அவர் தலைக்கனத்தில் அதற்கு பதில் சொல்லாமல் இறுமாப்பில் அதை மறுத்து வார்த்தையாடியதையும் கவனித்தேன் அப்போது அது தலைமை பண்புக்குக்கு  பொருத்தமான அழகு இல்லை என்பதையும் நினைத்துக் கொண்டேன்.


 கமல்ஹாசன் நிலவேம்புக் குடி நீர் பற்றி தமது இளைஞர் இயக்கத்தாரிடம் அதைப்பற்றி இரு வேறு கருத்துகள் உலவுகின்றன எனவே உண்மை என்ன என உறுதிப்படுத்தும்வரை நீங்கள் அதை பயன்படுத்தச் சொல்லி அறிவுரை செய்யாதீர்கள் என்ற கருத்துடன் தாம் சொல்லி உள்ளார். அது சரியானதே. என் சொந்த அனுபவத்தில் கூட நிலவேம்பு டெங்கு காய்ச்சல் இல்லாதார் சாப்பிட வேண்டுமெனில் யோசித்தே சாப்பிட வேண்டும் தேவை கருதி என்பதே சரியான கருத்து என நினைக்கிறேன். ஆண்மைக் குறைவு தற்காலிகமானதே என அதைப் பயன்படுத்தச் சொல்வாரும் சொல்வது கவனத்துக்குரியது.

அடுத்து தாஜ்மஹால் இந்தியாவின் அழகுச் சின்னம் இந்துக் கோவில் மேல் கட்டப்பட்டுள்ளது, அதை இடிக்கச் சொல்ல மாட்டோம், ஆனால் ....என வினய் கத்தியார் என்ற ஒரு பி.ஜே.பி எம்.பி பேச அதை மற்றொரு பெண்  பா.ஜ.க தலைவர் வழி மொழிந்து பேசி சரித்திரத்தை திருப்பி எழுத முற்பட்டிருக்கிறார்கள்.

மோடி பிரதமரான பின் தான் வெளி நாட்டினர்க்கு இந்தியாவின் அடையாளப் பரிசாக தாஜ்மஹால் உருவத்திற்கு மாறாக கீதை போன்ற புத்தகங்கள் கொடுக்கப்படுவதாகவும் பேசி இருக்கின்றனர். சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆம் உண்மைதான் தாஜ்மஹால் மனைவிக்காக கட்டப்பட்ட சமாதிதான், அதைக் கட்டிய ஷாஜஹானை அவரின் மகன் ஔரங்க சீப் சிறையில் அடைத்து ஏனைய சகோதரர்களைக் கொன்றுதான் அரியணை ஏறினார், அதே ஔரங்க சீப் இந்துக்களை வேறுபாடாக நினைத்து போருக்குப் போகாத இந்துக்கள் மேல் ஜிஸ்யா என்ற தலைவரியை விதித்தார், முகமதியர் அல்லாத் இந்து வியாபாரிகளுக்கும் அதிக வரி கட்ட வேண்டி நிர்பந்தித்தார் என்ற சரித்திரம் எல்லாம் உண்மைதாம் நாமும் கூடப் படித்ததுதான்.

ஆனால் அதற்காக அதை எல்லாம் தோண்டி எடுத்து புதிதாக கிளப்பி வருவது ஏழமையில் பட்டினியில், இந்தியர்கள் செத்து வருவதை மறைப்பதற்காகவா? இந்தியா என்னும் நாட்டு வறுமப் பிடியின் பட்டியலில் 119 உலக நாடுகளில் 100வதாக இடம் பெற்றிருப்பதக் குரலை சாகடிக்கவா?

இன்னும் முழுதும் ஓராண்டு கூட மக்களாட்சித் தேர்தலுக்கு கால வரையறை இல்லாத நிலையில் பி.ஜே.பியின் முகத்திரை கிழிந்து விடுமே என்று புதிய புதிய கதைகளை கையில் எடுக்கிறார்களோ?

அப்படியே சரித்திரம் இன்னும் பின்னோக்கிப் போனால் மனிதர்கள் ஆடையின்றி இலை தழை அணிந்து கொண்டு மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்து வந்தனர், தாய் வழிச் சமுதாயம் என்று பெண்ணை மையப்படுத்திய கூட்டங்களே இருந்து வந்தன என்ற மனித குல வரலாற்றைக் கூட எடுத்துக் கொண்டு அந்த சரித்திரத்தையும் திருப்பலாமே?

நாடாள சாத்திரம் செய்வதை விட்டு விட்டு டி மானிட்டேசசன், அந்நிய நாட்டு கணக்கில் வராத பணத்தை கொணர்ந்து பங்கிட்டுக் கொடுப்போம் என்று சொல்லி விட்டு அரசாளப் பதவியேற்ற அரசு இப்போது மனிதர் உண்ணும் உணவுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்கும், தொடர்பு வழி சாதனங்களுக்கும் கூட ஜி.எஸ்.டி .என்னும் சரக்கு சேவை வரிகளைப் போட்டு அரசாளும் இந்த அரசு இன்னும் எதை மூடி மோடி மறைக்கப் போகிறது? சத்ரபதி சிவாஜிக்கும் சர்தார் படேலுக்கும் உலகிலேயே உயர சிலை வைத்தால் ஆயிற்றா ஏழை வயிறு நம்பிடுமா? வேலையில்லா இளைஞர்க்கு வேலை கிடைத்திடுமா? ரேசன் கிடைக்காமல் ஆறு மாதம் இருந்து இறந்த சிறுமியின் உயிர் திரும்பி வந்திடவா போகிறது?

Image result for kamalhasan sorry abot demonitation


ஆயிரம் ரூபாய் இந்தியப்பணத்துக்கு மாறாக அதை செல்லாது என்று சொல்லி விட்டு 200 ரூபாய் நோட்டும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் சொல்லத் தரமில்லா 50 ரூபாய் நோட்டும் அச்சடித்துக் கொண்டதும் அதில் காந்தி படத்துக்கு பதிலாக அவர் படமும் ஆப்பில் அவர் பேசியது வெளியிட்டதும் அவரது சாதனைதான்...இதற்காக மட்டுமே நடந்திருக்குமோ டி மானிட்டேஷேன்...


சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கப் பார்க்கிறார்கள், இந்துவுக்கும் முகமதியர்க்கும் கலகம் உண்டு பண்ணி, பாகிஸ்தான் வீரர்களும் இந்திய எல்லை வீரர்களும் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக் கொண்டதையும், நிரமலா சீதாராமன் சீனருக்கு நமஸ்தே சொல்லிக் கொடுப்பதையும் விடியோக்களில் பார்த்தேன். நல்ல அறிகுறிகள் அடையாளங்கள் அண்டை அயலாருடன் நல்லுறவு நிலவுவது.

ஆனால் அதே சமயம் உள் நாட்டில் கலகம் ஏற்படுத்துவது என்ன நியாயம்? உடனே ஒரு முகமதிய பிரபலம் பேசுகிறார் தாஜ்மஹால் மட்டுமல்ல பாராளுமன்றம், செங்கோட்டை எல்லாமே இடித்துத் தரை மட்டமாக்கப்பட வேண்டியதுதானே அதுவும் பின்னோக்கிப் பார்த்தால் எவர் எவரோ கட்டியதது தானே. குதுப்மினார் யார் கட்டியது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே...

உத்திரப் பிரதேச சுற்றுலாத்தலங்களில் தாஜ்மஹால் இடம் பெறவில்லையாம் அடுத்த ஆண்டு காலண்டரில் ஜுலை மாதத்தில் இடம் பெற்றுள்ளதாம் அந்தப் படம்...உலக அதிசயங்களில் ஒன்றான கலை கட்டடக்கலைக்கு என இந்தியாவில் உள்ளதை உலக அரங்கும் சரித்திரமும் ஏற்றுக் கொண்ட ஒரு சின்னத்திற்கு இப்போது புதுப் புது பொருளை திரித்துப் பேசி சிதைக்கப் பார்க்கிறார்கள், ஏற்கெனவே அது மாசடைந்து சிதைந்து வருகிற நிலையில்...


Image result for kamalhasan sorry abot demonitation


கேரளாவில் வேலை ஆகவில்லை, தமிழ்நாட்டிலும் வேலை ஆகாது, எனவே மறுபடியும் வடநாட்டிலேயே வேலையை ஆரம்பிக்க நினைக்கிறார்கள் மதம் நிறம் என்ற பேரில்... அனேகமாக பதவி ஏற்ற ஓரிரு ஆண்டுகள் அமைதியாக சாயம் பூசிக் கொண்டு காட்டாமல் ஆண்ட கட்சி இப்போது அதிகம் வர்ணத்தைக் காட்ட ஆரம்பித்து இருக்கிறது. அடுத்த முறையும் இதே கட்சி பதவிக்கு வரும் நிலை இந்தியாவில் நீடித்தால் எல்லாமே நடக்கும், இந்தியா ஒரு செக்யூலர் கன்ட்ரி, மத சார்பற்ற நாடு என்ற அடையாளத்தை இழக்கும். பாரதமாக பெயர் மாற்றப்பட்டு பாரதர்கள் எங்கும் கோலோச்சுவார்கள்...

கமல் போன்றவர்கள் அவரவர் துறைகளில் வல்லவர்கள்தாம். ஆனால் இந்தத் துறையில் எம் போன்ற வல்லவர்கள் எல்லாம் கூட அவரை விட முன்னணியில் உள்ளவரக்ளாகத் தெரிகிறோம், நாட்டின் நடப்பை, மக்களின் தேவையை, அரசுக் கட்சிகளின் நிலைப்பாட்டை முன் கூட்டியே கணிப்பதில்.

அப்துல்கலாம், விவேகனந்தா ஆகியோர் சொல்லியபடி எங்களுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது என்று பார்க்கும்போது இவர்களை எல்லாம் விடத் தகுதி அதிகமாக இருக்கிறது என்ற ஒன்றே போதுமானத் தகுதியாகத் தெரிகிறது. இன்ஃபினிட் எனர்ஜி, லோ எய்ம் ஈஸ் கிரம் என்றெல்லாம் பார்க்கப் போனால் இந்த இந்திய நாட்டை,  எம் போன்றோர் கரங்களில் கொடுத்து வலுப்படுத்தினால் இந்த நாட்டை ஒரு நல்லரசாக மாற்றிக் காட்ட முடியும் என்றே தோன்றுகிறது, நதிகளை எல்லாம் கூட இணைத்துக் காட்டுவோம்.

முதலில் எமது பயிற்சிகளில் வளர்ந்த நண்பர் சசிபெருமாள் மதுவிற்கு எதிராக போராடியபோது அவை செய்திகளாக மட்டும் இருந்தன, காலில் எல்லாம் விழுந்தார் குடிகாரர் காலில் எல்லாம், பிச்சை எடுத்து அரசுக்கு அனுப்புவதாக எல்லாம் தொடர் வண்டி நிலையத்தில் செய்தியானார் எமது கட்டுப்பாட்டையும் எச்சரிக்கையும் மீறி...அப்போது செய்தியாக இருந்தது அவரது தியாகம், கோவனின் சீற்றமிகு பாடல் எல்லாம் தெறிக்க...இன்று மக்களிடையே எழுச்சியாக மாறி ஆங்காங்கே பொதுமக்களிடை முக்கியமாக பெண்களிடம் கனலாக, தணலாக,

 நாங்கள் சொல்லியபோது, பிரச்சாரம் செய்த போது, எதிராக பேசியபோது, எழுதியபோது எல்லாம் ஏளனமாக வேடிக்கைப் பார்த்த இதே சமுதாயம் இப்போது தம் தேவையாக அதைக் கைக் கொண்டிருக்கிறது...இது எங்களுக்கு உரிய நேரத்தில் பெருமை சேர்க்காமல் போனாலும் இன்றைய நிலைக்கு நாங்கள் முன்னோடி எனப் பெருமை பாராட்டிக் கொள்ளும் வண்ணம்,

ஹோகேனக்கல் கூட்டுக் குடி நீர்த் திட்டத்திற்கும் இப்படித்தான் எங்கள் தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற அமைப்புதான் முன்னோடி எம் பெண்கள் காசாம்பு  மற்றும் பெயர் மறந்த எம் பெண்டிர் எல்லாம் சிறைக்கு சென்றார்கள் குடிநீர் கேட்டு அதன் பின் அதுவும் பலித்து விட்டது எம் இயக்கப் பேர் வெளி வராமல் போனாலும் அதை பா.ம.கவும் தி.மு.கவும் கையில் எடுத்துக் கொண்டனர்.
Image result for kamalhasan sorry abot demonitation


 அதே போல வங்கத்து ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் என்ற எம் பாட்டன் பாரதி வழியில் நதி நீர் இணைக்க இன்றும் என்றும் நாமிருக்கும் வரை கருத்துரையை, செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்வோம், வாய்ப்பு கொடுத்தால் நாங்களே கூட அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள் ஆவோம், இல்லையேல் மதுவிலக்கு, குடிநீர்த்திட்டம் போல எம் பேர் பதியாவிட்டாலும் அது நடந்தே தீரும். இந்தநாட்டில் எந்த முகமூடிகளாய் இருந்தாலும் அவர் முகத் திரை கிழிந்தே தீரும்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

 P.S:-சொல்ல மறந்து விட்டேனே, இன்று மஹாவிர் நிர்மான் தினமாம், இறைச்சி விற்பனை இல்லையாம், ஆனால் மது விற்க தீபாவளி இலக்கு 150 கோடியாம் எட்டிவிடும் எனத் தமிழக ஆட்சி மகிழ்வாய் இருக்கிறது
2 comments:

  1. தமிழகத்தின் இன்றைய நிலை வருந்தத் தக்கதே

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam.

    ReplyDelete