Sunday, June 4, 2017

குளித்து விட்டு வரச் சொல்வது சரிதான் ஆனால்...கவிஞர் தணிகை

குளித்து விட்டு வரச் சொல்வது சரிதான் ஆனால்...கவிஞர் தணிகை

Image result for narendra modi priyanka chopra


யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச தலைமைச் செயலகத்துக்கு வரும்போது பொது ஏழை எளிய மக்களை குளித்து விட்டு வரச் சொன்னது சரிதான் ஆனால் சரியில்லை, வரும் ஆனா வராது என்பது போல...நீங்க குளிக்க, குடிக்க நீர் ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர்களை குளித்து வரச் சொல்வது நியாயம்தான். கால் கழுவாமல் மலம் கழித்து விட்டு டிஸ்யூ பேப்பரில் துடைத்துக் கொண்டு வரும் வெள்ளைக்காரத் துறைமார்களிடமும், துரைசானிகளிடமும் அதை சொல்ல வேண்டியதுதானே மோடி...ப்ரியங்கா சோப்ரா கால் மேல் போட்டு தொடை தெரிய உட்கார்ந்து மோடியை திக்கு முக்காட விட்டிருக்கிறார் நீ ராஜா ஆனாலும் நான் கவர்ச்சி ராணி நீ எனக்கு அடிமை என விவரம் எல்லாம் தெரிந்து, இவர்கள் பொங்கலுக்கு எல்லாம் அந்த ராணி அலட்டிக் கொள்ளவே இல்லை.

இருக்கும் நீர்வளத்தை நிலவளத்தை எல்லாம் தனியாருக்கும் அந்நிய நாட்டு சக்திகளுக்கும் விற்று விட்டு நியாயம் பேசினால் யார் மணத்துக் கொள்வார்கள்.

ரகுராம் ராஜன் போன்ற நல்ல மனிதரே சொல்லிவிட்டார், மோடி டீ விற்றாரோ இல்லையோ நாட்டை விற்று விட்டார் என...

ஜி.எஸ்.டி எனப்படும் கூட்ஸ் சேல்ஸ் டேக்ஸ் ஜுலை முதல் அமலாகிறது என்ற பெரும் செய்தியை அடக்க மாட்டுக்கறி அலையும் அதன் பின் நாங்கள் ஒன்றும் அப்படி சொல்லவில்லை என்ற பின் வாங்கும் மறுதளிப்பும்

சர்வதேச நாணய நிதியம் என்னும் ஐ.எம்.எப் இந்தியாவை வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளின் வரிசையில் இல்லை என்று ஜனவரி 2017ல் அடையாளப்படுத்தி விட்டது.  இது மோடியின் டி மானிட்டேசன் செயலுக்கு பெரும் பின்னடைவு. 7 சதம் முதல் 8 சதவீதத்திற்கு போகும் என எதிர்பார்த்த மொத்த உள் நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்து 77 நாடுகள் பட்டியலில் 60 வது நாடாக சீனா, பங்களாதேஷ் , இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் கேடாக பின் நிற்கிறது.

இந்த பணப்பரிவர்த்தனை பழைய திட்டத்தை ஒழித்து மகுடம் கட்டப் போகிறேன் என்னும் இந்த மத்திய அரசின் மோடித்திட்டம் ஒரு வரலாற்றுப் பிழை என்கிறார் மன்மோகன் சிங்க்.

சாதாரண மனிதராய் எந்த வித பொருளாதார நிர்வாகவியல் அறிவும் பெரிதாக இல்லாத எம் போன்றோரே எழுதினோம், இந்த நாசமாப் போற நாட்டை மேலும் நாசமாக்கி விட்டார் இந்த ஆட்சியாளர் என, ஆயிரம் ரூபாய் நோட்டை இல்லாமல் செய்து இருந்த காந்தி படத்தை எல்லாம் பணத்தில் இருந்து நீக்கி இரண்டாயிரம் நோட்டை உள் விட்டு அதில் ஆப் வைத்து இவர் படத்தை பேச்சை ஒலி, ஒளிபரப்பிக் கொண்டதுதான் இவர்கள் இதில் அடைந்த இலாபம்.

அதற்கு பாமரனை பாமா மக்களை பாடாய் படுத்து தமது உழைத்த காசுக்கே நாயாய் பிச்சைக்காரராய் அலைய வைத்த மோடி அரசுக்கு வடக்கே எல்லாம் வாக்களித்து விட்டனர் என்றனர் அவர்கள் எல்லாமே எப்போதுமே அறிவு கெட்டவர்கள் தானே...கேரளா, தமிழகம், மே.வங்கம் போன்ற அறிவில் சற்று முன்னேறியவர்களிடையே இவங்க பப்பு வேகாது என்றுதான் அந்த பிழி பிழிந்து விவசாயிகளை திரும்பிப் பார்க்காமல் வறட்சி பற்றி துளியும் அக்கறையின்றி, காவிரியில் நீர் விடாமல், அ.இ.அ.தி.மு.கவை பொம்மலாட்ட கயிற்றுள் நுழைத்து ஆடவைத்துக் கொண்டு நாசப்படுத்தி வருகின்றனர் இதில் ராஜா தமிழிசை ராணி இராமன் கிருஷ்ணன் கணேசன் என எகத்தாளப் பேச்சு வேறு...

லலித் மோடி, விஜய் மல்லையா, வெளிநாட்டில் இருந்து இந்தியர் பணத்தை கொண்டு வருவதாகச் சொன்னது பற்றி எல்லாம் 3ஆண்டு சாதனைப் பட்டியலில் ஒன்றைக் கூடக் காணோமே...எங்கள் ஊரில் ஒருவன் எல்லாரையும் சேர்த்துக் கொண்டு ஒரு கோவில் கட்டினான் பொதுமக்களை குளித்து விட்டு வரச்சொன்னான் கோவிலுக்கு ஆனால் அந்த ஊருக்கு செல்ல வேண்டிய குடி நீரை எல்லாம் ஆட்சியாளரை கட்சிக்காரரை எல்லாம் கைக்குள் போட்டுக் கொண்டு தாம் கட்டிய கோயிலுக்கும் தாம் நடத்தும் கெமிகல் கம்பெனிக்கும் பெரிய நீர்க் குழாய்கள் பூமிக்கடியில் பதித்து பயன்படுத்திக் கொண்டு, இரசாயன புகையை அனுப்பி காற்றை , இரசாயன நீரை வெளி அனுப்பி நிலத்தை எல்லாம் மாசு படுத்திக் கொண்டு ஒரு புறம் கோவில் , சாமி, காவி, மேலாடை  அணிவதில்லை, சித்து, தியானம், என வேடிக்கை காட்டிக் கொண்டு மறுபுறம் தம் பிறவிச் சுபாவம் மாறாமல் நீசத்தனம் நிறைய கெமிகல் கம்பெனி முதலாளியாகவே இருக்கிறான். அவனைப் போலவே இந்த  மத்திய அரசு.

இவர்கள் முதலில் மக்களுக்கான கடமையை உரிமையை ஒழுங்காக செய்யட்டும் தாமாக சுத்தம், சுகாதாரம், வளர்ச்சி எல்லாமே நிகழும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

 1. ஜி.எஸ்.டி எனப்படும் கூட்ஸ் சேல்ஸ் டேக்ஸ் ஜுலை முதல் அமலாகிறது என்ற பெரும் செய்தியை அடக்க மாட்டுக்கறி அலையும் அதன் பின் நாங்கள் ஒன்றும் அப்படி சொல்லவில்லை என்ற பின் வாங்கும் மறுதளிப்பும் - நிஜம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback on this post sir. vanakkam.

   Delete
 2. வர்கள் முதலில் மக்களுக்கான கடமையை உரிமையை ஒழுங்காக செய்யட்டும் தாமாக சுத்தம், சுகாதாரம், வளர்ச்சி எல்லாமே நிகழும்.
  உண்மை

  ReplyDelete
 3. thanks for your feedback on this post vanakkam.

  ReplyDelete