Friday, June 23, 2017

டென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை

டென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை
Related image



டென்மார்க் பற்றி ஒரு பதிவை சில நாளுக்கும் முன் எமது வலைப்பூவில் பூக்க வைத்திருந்தேன். அது ஒரு சிறு பதிவுதான். அதில் விடுபட்டுப் போன செய்தி ஒன்று ஆனால் அதுவே உலகிற்கு முக்கியமான ஒன்றும் கூட. எனவே இன்று பதிவு செய்ய மறந்ததை பதிவு செய்ய இந்தப் பதிவு

அங்கு குடும்பக் கட்டமைவு இல்லை. ஆணும் பெண்ணும் விரும்பும் வரை சேர்ந்து வாழலாம், கருத்து வேறுபட்டுப் போனால் பிரிந்து விடலாம். தடையில்லை. மறுபடியும் வேறு நபர்களுடன் இணைந்து வாழலாம். இதுதானே மேலை நாடெங்கும் விரிந்திருக்கும் கலாச்சாரம். இதில் என்ன புதிமை அல்லது சொல்ல இருக்கிறது என்கிறீர்களா? இப்படி இல்லாமல் இருந்தால் தான் அதைப் பற்றி சொல்ல வேண்டும்.

எனவே சிறுவர் சிறுமியாய் அதாவது 12 வயது 13 வயதில் இருக்கும்போதே பிள்ளைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறார்கள். தாய் தந்தையின் அரவணைப்பே அதற்கும் பின் அவர்களுக்கு இல்லை. ஏன் எனில் பொருளாதார பின்புலத்தை, ஒத்துழைப்பைத்தான் அரசாங்கம் தந்து விடுகிறதே எனவே அப்போதே இணை ஜோடிகளைத் தேடிக் கொண்டு வாழ்வை ரசிக்கிறேன், ருசிக்கிறேன் என அனுபவித்து குடும்ப உறவுகளுக்குள் வேண்டி விரும்பியே சிக்கிக் கொள்கின்றனர்.

அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு. இது நம் நாட்டில் மலை வாழ் மக்களிடம் இள வயது திருமணம் இன்னும் உள்ளதை நினைவு படுத்துகிறது. ஆனால் இவை எல்லாம் பாலியல் உறவில் வெவ்வேறு தளங்களுக்குள் இவர்களை எல்லாம் இட்டுச் சென்று நிம்மதியின்மையை ஏற்படுத்தி விடுகிறது.

அதைப் பொறுத்த வரை இன்னும் இந்தியா மேலை நாடுகளுக்கு முன் மாதிரியாக வழிகாட்டியாக தாய் தந்தையர் அரவணைப்பில் பணிக்கு செல்லும் வரை குறைந்த பட்சம் மணமுடியும் வரை அல்லது 20 அல்லது 25 வயது வரையிலாவது குடும்ப அரவணைப்பில் வாழ்வது பாராட்டத் தக்கதே.

ஆனால் உறவுச் சீரழிவுகள் இப்படி இருந்தபோதும் அந்த நாடுகளில் ஆட்சி முறைகள் நல்ல முறையில் இருப்பதால் அந்த நாடுகள் முன்னேறிய நாடுகளாக பொருளாதார நிலையில் உள்ளன. பிரதானமான காரணமாக நேரந்தவறாமை, கடின உழைப்பு, பொய், களவு, சூது, கபடம், வஞ்சகம் இவை இல்லாமையால் என்றும் சொல்லலாம்.

மேலும் அவர்கள் நாட்டில் அவர்கள் மொழியறிவே உள்ளது, ஆங்கிலம் போன்ற பிறமொழியின் ஆதிக்கம் அங்கு நிலவே வழி இல்லை என்பதும் அனைவரும் கவனிக்க வேண்டிய செய்தி. தாய்மொழிக்கல்வியில் பலமாக இருக்கும், சீனா,ஜப்பான், ஜெர்மனி, போன்ற நாடுகளிலும் இதே மொழி பாதிப்புகள் தான் நிலவி வருகின்றன . இந்தியாவில் மட்டும் ஏகப்பட்ட மொழிகளும், பிரிவுகளும் அதில் இந்தி மொழியை எப்படி புகுத்துவது என இப்போது பாஸ்போர்ட்டில் வைக்கப் போவதாக சுஸ்மா சுவராஜின் அறிக்கை...

மறுபடியும் பூக்கும் வரை:
கவிஞர் தணிகை.

எனது காலடி ஓசை மட்டுமே கேட்கும்
எனக்கு விருப்பமான அமைதியுடன்
பறவைகளின் கீச்சொலி சங்கீதம்
என்றும் எனக்கு கிடைக்க தினம் நடையரசனாக‌
இயற்கையே எனக்கு அருள் செய்வாயாக!


2 comments: