Monday, June 26, 2017

ரம்ஜான் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை

ரம்ஜான் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை


Related image

திரு நாள் விடுமுறை இந்தியாவில். பாகிஸ்தானில் பெட்ரோல் டேங்கர் வெடித்து 150 பேர் கருகி மரணம், 117 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மிகப் பெரும் சோகத்தில் பாகிஸ்தான் இரம்ஜான் தினம். மோடி அமெரிக்காவில் பாகிஸ்தானின் தீவிரவாதம் பற்றி  தாக்கிப் பேசி உள்ளார். அங்குள்ள பெரும் நிறுவன தலைவர்களை எல்லாம் இந்தியாவில் தொழில் துவங்க வருமாறு அழைத்துள்ளார் ஆனால் இவருக்கு விசா வழங்க அமெரிக்காவில் மதவெறியர் என அமெரிக்காவுள் நுழைய தடை இருந்ததை எல்லாம் நாம் மறந்து போவோமாக...

எனக்குத் தெரிந்த ஆரிப் முகமது என்ற முகமதிய நண்பர் ஒருவர் நாங்கள் எல்லாம் இந்த நோன்பு , உண்ணாமை எல்லாம் கடைப்பிடிப்பதில்லை, இதெலாம் ஒரு ஏமாற்று நாங்கள் எல்லா மனிதர்களுடனுமே கலந்து பழகுகிறோம் சேர்ந்து உண்ணுவோம் என்றதுடன், அவரின் பக்கத்து வீட்டில் ஒரு இளைய ஏழை தம்பதியர் இந்த நோன்பை கடைப்பிடித்து கணவர் வெளியே சென்றிருந்தபோது மனவி மயக்கம் அடைந்து நிலை வெகுவாக கவலைக்கிடமாகி சீரியஸ் என்றால்தான் அனைவருக்கும் புரிகிறது...கணவருக்குத் தெரிவித்து விட்டு அண்டை வீட்டுக்காரர் எல்லாம் ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் அனுமதித்து குளுக்கோஸ் எல்லாம் ஏற்றிய பிறகு மருத்துவர்...டாக்டர் சொன்னது: வெறும் வயிறு, கொலைப்பட்டினி முதலில் இவரை சாப்பிடச் சொல்லுங்கள் ஏதாவது இட்லி போன்ற எளிதில் செரிக்கும் உணவை வாங்கிக் கொடுங்கள் என்றாராம்.

நான் கூட மருத்துவம் படிக்கும் பல மாணவியரைப் பார்த்தேன் எல்லாம் சோர்ந்து போய் வாடி வதங்கிக் கொண்டிருந்தனர். மதம் என்ற பேரால் இது போன்ற நீண்ட உண்ணா நோன்பு தேவையா என்றால் மதத்தில் மூழ்கியோர் எல்லாம் ஆட்சேபணை தெரிவிப்பார்கள்.

எண்ணெய் வள நாடு ஒன்றில் எனது தியான வழிச் சீடர் ஒருவர் பணி புரிகிறார் அங்குள்ளோர் எந்த மதத்தினராயிருந்தாலும் பொது இடத்தில் வந்து
எச்சில் விழுங்கினாலோ, நீர் பருகினாலோ கூட இராஜ தண்டனை, அரசாங்கக் குற்றம் என அவர்களுக்கு பெரும் தண்டனை பொறுக்க முடியாத தண்டனை வழங்கப்படுமாம் அந்தப் பகல் நாட்கள் மிகவும் கொடூரமானைவை. இரம்ஜான் தினம் வரும் வரை. நல்ல வேளை இரம்ஜான் தினம் வந்து விட்டது நோன்பு எல்லாம் முடிந்து விட்டது.

மதம் என்ற பேரில் அது சொன்னது என்றால் அது இப்படித்தான் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியுமா? செய்யக் கூடுமா? செய்யலாமா? மனித அறிவை பயன்படுத்த வேண்டாமா என்று கேட்பது நானல்ல அந்த முகமதிய நண்பர். அவர் ஒரு அ.இ.அ.தி.மு.க கவுன்சிலராக இருந்த கட்சி விஸ்வாசி.

எல்லா மதங்களிலும் சில நல்ல கருத்துகள் அடங்கியுள்ளன. பெரும்பாலும் பொருளற்ற தீயக் கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றைப்பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு அவற்றை கற்றுக் கொண்டு அவற்றிலிருந்து எல்லாம் மீளத்தெரிந்து கொள்ள் வேண்டியதுதான் மனிதம். அப்போதுதான் மனித குலம் தழைக்கும். அல்லது மதம் என்பது கலாம், தெரஸா, காந்தி போன்றோர் கடைப்பிடித்த சொந்த தனிப்பட்ட கொள்கையாக இருக்கலாம் ஆனால் பொதுவுக்கு அவை வரவழைக்கப்பட்டு நிர்பந்தங்கள் ஏற்படுத்தலாகாது.

என்னிடம் பைபிள், குரான், கீதை, புத்தம், ஜைனம் போன்ற எல்லாவிதக்கருத்துகளுக்கும் இடம் உண்டு. ஏன் என்னிடம் பைபிள், குரான், கீதை போன்ற புத்தகங்கள் உண்டு. அவற்றில் உள்ள நல்ல கருத்துகளையும் என்னால் சுட்டிக் காட்ட முடியும், தீயவை பற்றியும் பறை சாற்றவும் முடியும்.

பேராசை காரணமாகவே பெட்ரோல் டேங்கர் சாய்ந்து வெடித்துச் சிதறுகையில் பெட்ரோல் பிடிக்க ஓடிய 150க்கு மேற்பட்ட‌ பேரும் கருகி இருக்கின்றனர். 117 பேரும் படுகாயம் தீக்கிரையாகி தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர் பாகிஸ்தானில் Bahawalpur  என்னும் ஊரின் மசூதி இந்த லாரி கவிழ்ந்தைப் பற்றி அறிவிப்பு செய்ததால்தான் அதிகம் மக்கள் அங்கு சென்று பெட்ரோல் பிடிக்க முயன்றுள்ளனர் தங்களது பாட்டில் மற்றும் பாத்திரங்களில் என்கிறது அங்கு முதலில் சென்று சேர்ந்த காவலர் அறித்த செய்தியில்.

மதம் என்னவெல்லாம் எப்படி எல்லாம் செய்கிறது பாருங்கள். எல்லா மதங்களிலுமே பேராசை பெரு நஷ்டம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு எதுவுமே விலக்கல்ல..

பெண்களின் பர்தா, தலாக் மூன்று முறை சொல்லி விவாக ரத்து, ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி, பல தார விவாகம், நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளல் இப்படி நிறைய வியாகூலங்கள் உள்ள மதம் இதுதான் கடைசியில் தோன்றிய மதமாக இளைய மதமாக இருக்கிறது. நிலா என்னும் துணைக்  கோளைக் கொண்டே புனித நாட்கள், மாத நாட்களை கணக்கில் கொள்கின்றனர்...அரேபிய நாடுகளில் நேற்றே ரம்ஜான் முடிந்து விட்டது, பாகிஸ்தான் இந்திய நாடுகளுக்கு நேற்று 3ஆம் பிறை இன்று ரம்ஜான்... உண்ணா நோன்பு இருந்து வரும் ஒரு படித்த பெண்ணிடம் வஹி என்றால் தெரியுமா அம்மா அதற்காகவே குரானை நான் தேடி வாங்கினேன் என்றேன். வஹி என்றால் அந்த பெண்ணுக்குத் தெரியவில்லை..அரபி தமிழ் மொழிபெயர்ப்புடன் உள்ள குரான் தர்ஜமா என்னிடம் உள்ளது பற்றி சொல்லி வஹி என்றால் முகமது நபிக்கு கிடைத்த இறையின் வாக்கு... அதன் தொகுப்புதானே குரான்... நிறைய முகமதியர்கள் உடலால் வயிற்றுப் பிழைப்புக்கு உழைத்து வரும் தோழர்களிடம் குரான் முக்கியமானவை சென்றடையவில்லை ஆனால் தேவையில்லாத மதமாச்சரியங்கள் எல்லாம் சென்று சேர்ந்திருக்கின்றன.

ஆனால் பாருங்கள் கரூரில் ரிஃபாத் என்னும் முகமதிய இளைய மைந்தரின் தலைமையில்தான் 64 கிராம் எடையுள்ள செயற்கைக் கோள் உருவாகி நாசாவால் விண்ணுக்கு அனுப்பப் பட்டிருக்கிறது... அவர் தந்தை ஒரு விஞ்ஞானியாம் அவர் இப்போது இல்லையாம். தாய் தம் மகனைப் பற்றி உருகியிருக்கிறார். இந்த மாணவர் ப்ளஸ் டூ தேர்வில் 1200க்கு 750 மதிப்பெண் பெற்றவரே...

எமது அரிய ரம்ஜான் வாழ்த்துகள் ரிஃபாத்துக்கும் அவரின் அந்த அறிவியல் நண்பர்களான: தேடித் தேடிப் பார்க்க வேண்டியதாகிறது அந்த மற்ற 6 பேரின்  பேரையும் அவர்கள் யாவருக்கும் எம் வாழ்த்துகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

8 comments:

 1. உண்மையை உள்ளதை தெரிவிக்கும் மிகவும் அருமையான பதிவு.
  உங்க நேர்மைக்கு ஒரு சலூட்.
  நீர் கூட அருந்தாம வேலதளத்தில் இயக்கமில்லாம சுருண்டு கிடப்பார்கள் என்று நண்பர்கள் தெரிவித்தனர்.

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback on this post and your sharing of your thoughts...veka nariyar..yaar?

   Delete
 2. அருமையான பதிவு. நன்றி.
  ரம்ஜான் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. thanks for your concern about this post sir. vanakkam

   Delete
 3. அருமை
  ரம்லான்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அருமையான பதிவு,ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்/

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback on this post Vimalan...

   Delete