Sunday, April 30, 2017

அமரேந்திர பாஹுபலி மகேந்திர பாஹுபலி சூ மந்திரக் காளி: கவிஞர் தணிகை

அமரேந்திர பாஹுபலி மகேந்திர பாஹுபலி சூ மந்திரக் காளி: கவிஞர் தணிகை


Image result for baahubali 2

பாஹுபலி என்ற மகாவீரரின் சிரவணபெலகொலா, தர்மஸ்தலாவில் உள்ள சிலை ஜைன மத போதகரை வழிகாட்டியைக்குறிக்கும் அது நடந்த கதை.அது ஒரு சரித்திரம். வரலாறு. அவர் நிர்வாணக் கோலத்தில் இருப்பார். எதுவும் இந்த உலகத்தில் தேவையில்லை என இடையில் கட்டியிருந்த பட்டு வேட்டியைக் கூட ஒருவர் கேட்டார் என உருவிக் கொடுத்து விட்டு அப்படியே தவக் கோலத்தில் நிற்பார், காலங்கள் மாறும் அந்த உருவத்தில் மேல் கொடிகள் ஏறும், கரையான் புற்றுமாய் மாறும் இப்படி காலத்தை நின்று தமது தவத்தால் வென்றதால் அவர் புத்தரை விட பெரு நெறியாளர் என போற்றப்பட்டு கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டவர், இவர் அண்ணன் மஹாவீரராய் இருந்து உலகையெலாம் வென்று முடித்து கடைசியில் தர்ம ஆட்சியாய் தமது ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த பக்கத்து இராஜ்ஜியம் தமது தந்தையால் பிரித்துக் கொடுக்கப்பட்டு ஆண்டு வரும் தம்பியையும் வெல்ல மண்ணாசையால் போருக்கு அழைக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக பெரும் வீரரான‌ அண்ணன் வீழ்கிறார். தம்பி வெல்கிறார்.

Related imageImage result for shravanabelagola

ஆனால் தம்பி  பாஹுபலி அண்ணன் கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பேனே? என்னிடம் சண்டையிடத் தான் வேண்டுமா? அதுவும் தமது சொந்த மூத்த சகோதரனே என வெறுத்து வாழ்விலிருந்தே விலகுவதுதான் பாஹுபலியின் வாழ்க்கைச் சுருக்கம். எனவே அவர்தான் மஹாவீரரான பாஹுபலி.அந்தக் கதையல்ல இது.ஆனால் அந்தக் கதை போன்றதுதான் இதுவும்.

இதில் உலகை வெல்வதை விட தன்னை வெல்வதே வீரம். என இந்த மஹாவீரர் பாஹுபலி அனைவருக்கும் வாழ்ந்து சொன்ன சேதிதான் அவர் வாழ்க்கை வரலாறு. இது அவர் பற்றி அறிந்த அனைவருக்கும் முக்கியமாக் ஜைன மதத்தினருக்கும் தெரியும். எனவே அந்த ட்ராக் வேறு அது சொல்வது தியாகம் மனித வழிகாட்டுதல் நெறியாள்கை எல்லாமே.

இந்த வரலாறை கொஞ்சம் கதையாக பெரும்பாலும் முடிவுகளை திரைக்கதையாக மாற்றி, ராஜ மௌளி குடும்பத்தார், மாமன், மனைவி, மகன்,மாமனார், இப்படி ஒரு பெரும் குடும்பம் படமாக ‍பாஹுபலி  முதல் பாகம், இரண்டாம் பாகம் என எடுத்து நிறைய பொருட் செலவு செய்து இப்போது இலாபத்தை வசூலில் அள்ளிக் குவித்து வருகின்றனர்.

ஜகன்மோகினி என்ற பேய் படத்தை எடுத்து விட்டலாச்சாரியா போன்ற தெலுங்கு இயக்குனர்களும் பந்த்லு(நல்ல இயக்குனர்தான் இவர் படஙக்ள் பல பெரும் வெற்றிப் படஙக்ள் தமிழிலும்) போன்ற இயக்குனர்களும் செய்த அதே வேலை இப்போது ராஜ மௌலி என்ற இயக்குனரால் இரண்டு பாஹுபலி பட பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.

இதில் மஹாபாரதத்தில் வரும் பங்காளி சண்டை போல, ஆனால் இதில் தம்பி நல்லவர் மக்கள் செல்வாக்கு பெற்றவர் கர்ணன் போல ஆனால் நிஜ பாஹுபலி போல....

மகிழ்மதி நாடு, கோட்டை, எல்லாம் கிராபிக்ஸ் பலி,கட்டப்பா,சண்டை பல்வாழ்தேவன் , பிங்கள தேவன் அல்லது பிஜ்ஜிலி தேவன் எல்லாம் நாடகபாணியில் வழக்கம் போல...கொஞ்சம் கிளேடியேட்டர், கொஞ்சம் ஹாரி பாட்டர், இப்படி எல்லாம் கலந்த கலவைதான் இந்த இந்தியாவின் மாபெரும் படமாக பேசப்பட்ட இரண்டு பாஹுபலிக்களும்.

 இராமாயண கைகேயி பாத்திரம் தான் இந்த இராஜமாதா ரம்யா கிருஷ்ணனின் ரம்யாதேவி கேரக்டர், இந்த இரண்டாம் பாகத்தில் தமன்னாவைக் காணவில்லை. படம் முழுதும் அனுஷ்காவும் அமரேந்திரபூபதி என்னும் பிரபாசும், ராணாவுக்கும் முடிவில் கொஞ்சம் வலு சேர்த்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் பிங்கள தேவன் நாசரும், கட்டப்பா சத்யராஜும் இல்லாமல் படம் இல்லை எனவேதான் கர்நாடக வாட்டாள் நாகராஜ் சத்யராஜுக்கு எதிரான குரலை எழுப்பி 8 ஆண்டுக்கும் முன் பேசிய பேச்சுக்கு கர்நாடகமாய் கெடு விதித்து வணிகத்துக்கு ஒரு தடையை ஏற்படுத்தியது. புத்திசாலித்தனமாக சத்யராஜ் கட்டப்பாவை வாழ வைத்து விட்டார்.

மொத்தத்தில் இது போன்ற பிரம்மாண்டமான படங்களை ஊக்குவிக்கக் கூடாது. இது மற்றும் 2.0 படங்களை பார்ப்பதை விட கடுகு, எட்டுத் தோட்டாக்கள், கடம்பன் ஜோக்கர் போன்ற படங்கள் வரவேற்கத் தக்கவை. வெறும் கற்பனை, பொழுது போக்கு என்ற சாரம்சத்தை விட சமூக பிரச்சனை சார்ந்த படத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். இன்று இந்தியா இருக்கும் நிலையில்.

ஆங்கிலம், வேற்று மொழிப்படங்களானால் இரசிப்பீர் நமது நாட்டில் அப்படி எடுத்தால் ஏன் இப்படி விமர்சனம் செய்கிறீர், அல்லது இரசிக்க மாட்டீரா என்னும் கேள்விக்கு எனது பதில்: மக்கள் எழுச்சிக்காக எதையவது செய்வதை விட்டு விட்டு சினிமாக்கலையை வீணடிக்க இப்படி செய்வதும், மக்களை சுயநல இலாபத்துக்காக மழுங்கடிப்பதும் ஏற்க முடியாதவை. இன்னும் என்ன கத்தி, வாள், கேடயம், கதை என ஆய்தங்கள் அவரவர் இரசாயன குண்டுகளை, ஏவுகணைகளை, அணுகுண்டுகளை ஏவ தயாராயிருக்கும்போது இன்னும் பழைய காலத்துக்கு மக்களை கொண்டு செல்வது நம்மை திரும்பிப் பார்க்க வேண்டுமானால் வைக்க உதவும் .அதிலும் இந்த பாஹுபலியில் எல்லாம்  சுட்ட கதை. புதிதாக ஏதுமே இல்லை.

பொதுவாகவே இதை தியேட்டரில் வந்து பார்க்கச் சொல்வது 2000 அல்லது 3000 டிக்கட் என்பது இவை எல்லாம் தேவையில்லாதவை. ஒரு கற்பனைச் சினிமாவுக்கு இவ்வளவு செலவு எல்லாம் செய்யத் தேவையில்லை.

அதுவும் 3 ஆம் உலகப் போர் மூண்டுவிடுமோ என்ற காலக் கட்டத்தில் உலகே நடுங்கிக் கிடக்கும்போது,இந்தியாவில் மோடியாட்சி தலைவிரித்தக் கோலத்தில் நடந்து கொண்டிருக்கும்போது தமிழகத்தில் பன்னீர் தான் ரொம்ப சுத்தம் எடப்பாடி ரொம்ப அசுத்தம் என சாத்தான்கள் வேதம் ஓதிக் கொண்டிரும்போது மக்கள் சொந்தப் பிரச்சனையை விடுத்து சினிமாவில் மூழ்குவது அவசியமில்லாதது. மேலும் கத்தி சண்டை, வில், வாள், கட்டாரி, இராஜா, மந்திரி, இராஜ குரு, இராஜ மாதா சூழ்ச்சி, தந்திரம், சாணக்ய தந்திரம் , இராஜ தந்திரம் என்றெல்லாம் சொல்லித்தான் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் வந்து நாட்டைக் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கிவிட்டார்கள்.

இன்று மதுவுக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு கடைகளை சூறையாட தாய்மார்கள் எங்கும் தயாராகி விட்டார்கள். இப்போது கடையை எடுத்து விட்டால் எடப்பாடிக்கு நல்ல பேர் கிடைக்கும்.

பேசாமால் இந்த அமரேந்திர பாஹுபலி கட்டப்பாவால் முதுகில் குத்தப்பட்டு இராஜாங்க கடமையை நிறைவேற்றி விட்டு அவர் குழந்தைக்கு வாழ்க்கையை கொடுத்த கட்டப்பாவை மாநிலத்தில், மகேந்திர  பாஹுபலியை மத்தியில் ஆள ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கலாம், மோடிக்கும் தமிழக அரசியலார்க்கும் அது பேதி கொடுக்கும்.

Related image


தியேட்டரில் தான் சென்று படம் பார்க்க வேண்டும் எனச் சொல்ல அரசுக்கோ, இந்த திரையுலகை சார்ந்தார்க்கோ எந்த தகுதியுமே இல்லை.

எனக்குத் தோன்றியதை சொல்லி விட்டேன்/
மற்றபடி உங்கள் விருப்பம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

மற்றபடி படம் நன்றாக வர பிரம்மாண்டமாக அமைய நிறைய உழைத்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. கதை வெறும் காதில் பூ சுற்றும் இராமாயண மஹாபாரதக் கதைதான்.

இராஜ்ஜியத்திற்காக எடப்பாடியும் பன்னீரும் மோதுவது போல இதுவும் ஒரு பங்காளி மோதல்.

4 comments: