Wednesday, April 12, 2017

அடிசனல் டி.எஸ்.பி(ADSP) பாண்டியராஜனை பணி நீக்கம் செய்வதே சரி: கவிஞர் தணிகை.

அடிசனல் டி.எஸ்.பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்வதே சரி: கவிஞர் தணிகை.

Image result for adsp pandiarajan

ஈஸ்வரி என்ற 45 வயதுப் பெண்ணை, மதுவிற்கு எதிராக போராடுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அடித்த கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணி நீக்கம் செய்வது மட்டுமே தக்க தண்டனையாக இருக்கும். அங்கு மதுக்கடை திறக்க மாட்டோம் என இப்போது சொல்லும் தமிழக அரசு நாட்டில் ஸ்டேட்டில், மாநிலத்தில் ஒழுக்கம் நிலவ அவரை பணி நீக்கம் செய்தே ஆக வேண்டும் ஆம் அதை செய்தே ஆக வேண்டும்.

திருப்பூர் சாமளாபுரம் இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இது தேசிய செய்தியில் இடம்  பெற்றபிறகு.
மக்களுக்கு கடையடைப்பு நடத்துமளவு சொரணை வந்தது பற்றியும், மனித உரிமை ஆணையம் அந்த காட்டுமிராண்டி மேல் விசாரித்தும், நீதிமன்றத்திடம் தமிழக அரசு கடை இல்லை என்ற வாக்களித்தும், மேலும் சில வாரங்களுக்குள் இது பற்றிய விசாரணை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்பதெல்லாம் மேம்போக்கான வாடிக்கையாக நடைபெறும் விஷயங்களே.

ஓரு பெண்ணின் மேல் ஆண் போலீஸ் கை வைக்க சட்டத்தில் இடம் இல்லை என்பதற்கு அந்த முட்டாள் மாறாக செயல் செய்து விட்டான்.எனவே அவன் இந்திய காவல்துறைச் சட்டத்தை மீறிய குற்றவாளியாகிறான். சாட்சியாக நிரூபணமாக அந்த வீடியோ பதிவே இருக்கிறது எனவே அவன் பணி இடை நீக்கமல்ல, பணி நீக்கம் செய்யப் பட்டேயாக வேண்டும். பணி நீக்கம் செய்யப் படுவதுதான் சரியானது.

எடப்பாடி முதல்வர் அவரது சக மந்திரியான விஜய பாஸ்கரை மந்திரி பதவியிலிருந்து நீக்குவதை விட இது முக்கியமானது மக்களது பார்வையில்.

இது மற்ற போலீஸ்காரர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டிய நடவடிக்கைகளாக இருக்க வேண்டும்.

காவல்துறை நண்பனா?
மதுவிற்கு எதிராக மதுக்கடைக்கு எதிராக போராடிய அந்தப் பெண் மனித குலத்திற்கு ஊறு செய்தவளா?

அவளை துன்புறுத்திய ஒரே காரணம் போதும் இந்த அரசு அரசாங்கம் நடத்த அருகதையற்றதன்று காட்ட...இதே போல சென்னையில் ம.க.இ.க பெண்களையும் கல்லூரி மாணவர்களையும் ஒரு முறை கடுமையாக தாக்கியது நினைவிருக்கும். அதுவும் மதுவிற்கு எதிராக போராடியதால்தான்...

பிரச்சார வழியில் மதுவுக்கு எதிராக போராட தொகை ஒதுக்கும் ஒரு பக்கம் அரசு இன்னொருபக்கம் பிரச்சாரத்தை கையில் எடுப்பாரை அடித்து ஒடுக்குமா முடக்குமா ,சசிபெருமாள் போன்றவரின் போராட்டத்திற்கும், மரணத்திற்கும் இப்ப்போதுதான் தமிழகம் அறுவடை செய்ய ஆரம்பித்து இருக்கிறது.

எங்கள் ஊரில் சாலையோரம் இருந்த மதுக்கடை சுடுகாட்டு அருகே ஆரம்பிக்கப்பட்டு அங்கேயும் கூட்டம் வழிகிறது...அங்கேயே சுடுகாட்டுள் குழி வெட்டி அப்படியே பிணமாக படுத்துக் கொள்ளலாம் என்று...

இப்படி எல்லா ஊர்களிலுமே கடை மாற்றம் இடமாற்றத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் விளைவாக போராட்டம் இருக்கிறது...தமிழக அரசு இராதா கிருஷ்ணன் நகரில் ஆர் கே நகரில் செய்த வாக்குக்கு பணம் பரிமாறிய வழக்கிலிருந்தே ஈடேறமுடியாமல் இதில் எல்லாம் எங்கே கவனம் செலுத்தப் போகிறது என எண்ணாமல் நல்ல சொரணையோடு சாமளாபுரத்தில் கடை திறக்க மாட்டோம் என பதில் சொல்லி தப்பிக்க பார்க்கிறது.


Image result for adsp pandiarajan

மறுபடியும் பூக்கும்

கவிஞர் தணிகை.

5 comments:

 1. Replies
  1. yes sir. thanks for your concern over the incident.vanakkam.Happy Thamil New year.

   Delete
 2. பணி நீக்கம் செய்யப்பட்டே ஆக வேண்டும் நண்பரே
  (எழுத்துப் பிழை காரணமாக, முதற் கருத்தை நீக்கிவிட்டேன்)

  ReplyDelete
  Replies
  1. what is use for I.A.S and I.P.S,that is to do people service,but here to do harass...

   Delete