Saturday, April 1, 2017

கவண்:‍ கவிஞர் தணிகை

கவண்:‍ கவிஞர் தணிகை


Related image


Related image

விஜய் சேதுபதி என்னும் நடிகர் இயக்குனர் என்னும் குயவன் கைகளில் எப்படி வேண்டுமானாலும் வனைந்து கொள்ளும் களி மண் பாத்திரமாய் நடித்து அழகு செய்கிறார் எனவேதான் அவரை இயக்குனர் நடிகர் என்றே சொல்லும்படி இந்தப் படத்திலும்...அனைவரும் விரயமாகிடுமோ பொருள் நேரம் என எண்ணாமல் துணிச்சலுடன் சென்று பார்க்கலாம் இந்த கவண் படத்தை.

எனக்கே சிறிது காலமாக தாவீது என்னும் ஆட்டிடையச் சிறுவன் கோலியாது என்னும் மாமலையை கவண் கல் கொண்டு வீழ்த்தியது பற்றிய ஒரு நினைவு நிழாலாடியபடியே இருந்தது சொந்த வாழ்வில்.

கடுகு: மஹாபாரதக் கதையில் திரௌபதியை வீதியில் முடியைப் பிடித்து துச்சாதனன் இழுத்துச் செல்லும் கதைக்கரு. கவண் பைபிள் படி தாவீது என்னும் ஆடு மேய்க்கும் இளைஞர் ஒருவர் கோலியாது என்னும் சதைமலையை எவராலும் வீழ்த்த முடியாது என எல்லாம் நினைத்திருக்கும் போது தமது பறவையை விரட்டப் பயன்படும், மிருகங்களை விரட்டப் பயன்படும் கவணில் கல்லை வைத்து இருவருக்கும் சண்டை அரம்பிக்கும் முன்பே நெற்றிப் பொட்டில் குறி வைத்து அடித்து அந்த சதைமலையை சதைப்பிணமாக பிண்டமாக மாற்றி விடுகிறான் என்கிற கதை. வள்ளி முருகன் கதையில் வள்ளி கவண் கல் விசிறி பறவைகளை துரத்துவாள்...இப்படி பல சமயங்களில் கவண் பற்றி நாம் அறியலாம். ஏன் சிலர் சிறுவயதில் கேட்வில் வரும் முன் கவைக்குச்சியில் லெதர் வைத்து கல் வைத்து பறவையை குறி வைத்து அடிக்கும் முன் இந்த கவண் தாம் பயன்படுத்தினர்

இப்படிப் பார்த்தால் எல்லாக் கதையும் எப்போதாவது சொல்லப்பட்டிருப்பதுதான், எல்லா சொல்லும் பேசப்பட்டிருப்பதுதான், கேட்டிருப்பதுதான். ஆனாலும் இந்தப் படத்தில் ஊடகத்தின் நாரசத்தை தோலுரித்துக் காட்டியிருப்பதால் கே.வி. ஆனந்த் இயக்குனருக்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும், கொஞ்சம் கோ, கொஞ்சம் முதல்வன், கொஞ்சம் நண்பன், கொஞ்சம் ஊமை விழிகள், இப்படி நாம் பார்த்த படங்களை நினைவூட்டினாலும் படம் நல்ல முயற்சியுடன் ஆக்கப் பட்டிருக்கிறது. பொதுவாகவே ஒரு திரைக்கதை ஆக்கபூர்வமாக சமூக பிரச்சனை அல்லது ப்ரக்ஞையுடன் சொல்ல்ப்படும்போது அது வெற்றியடைகிறது. இது கடுகுக்கு அடுத்த ஒரு வெற்றிப் பட வரவு.

ட்டி. ராஜேந்திருக்கு இது ஒரு மறுப் பிரவேசம். நல்லாதான் இருக்கு, அதிலும் பாண்டியராஜ் போன்றோரும் அடக்கி வாசித்துள்ளனர். நன்றாக அந்த பழைய நடிகர்களுக்கு எல்லாம் பங்கம் வராமல் செய்திருக்கிறார்கள்.

மலர் என்னும் மடோன்னா செபாஸ்டியன் தமிழுக்கு தமிழ் சினிமாவுக்கு மற்றும் ஒரு இயல்பான நல்ல‌ நடிகை.மற்றும் எல்லா நடிகர் நடிகைகளுமே அவரவர் பாத்திரத்தில் நன்றாகவே கிடைத்திருப்பதும் செய்திருப்பதும் இந்தப் படத்திற்கு ஒரு மெருகு.

Image result for kavaN


ஊடகத்தின் புலைத்தனத்தை நன்றாக காட்டியிருக்கிறார்கள்...வில்லன் பாத்திரம் நன்றாக பொருத்தமாக இருக்கிறது. டி.ஆர்.பிதான் வசூல்தான் பணம்தான் பிரதானம் அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்பது நடப்பு உண்மை.இப்போது நமது டி.விக்களில் வரும் ஷோ டைம்களில் நடத்தப்படும் தில்லுமுல்லுகளை அந்த டி.வியின் இரண்டாம் நிலையில் உள்ள பெண் அந்த நன்றாக ஆடிய சிறுவனை கன்னத்தில் அறைந்து அழவைத்து காமிரா முன் காட்டும் வரை, காமிரா முன் இருப்பாரை பின் இருந்து இயர் போன் கொண்டு இயக்குவது எல்லாம் நன்றாக மீடியாவின் வேஷத்தை புலப்படுத்துவதாக உள்ளது.

நல்ல லொகேஷன், கடைசியில் காட்டில் நடக்கும் கதையாக, தீவிரவாதம் என்கவுண்டர் போலீஸ் ஸ்டோரியாக, இரசாயனக் கழிவின் கேடாக இப்படி நிறைய பின்னப்பட்டிருந்தாலும் கதை விரைவாக நகர்வதால் 160 நிமிடம் போவதே தெரியவில்லை...நாம் பார்த்தது 155 நிமிடம் அதாவது 2 மணி 35 நிமிடத்தில்

பொதுவாக பாஸிடிவ் அப்ரோச்சில் எடுக்கப்படும் எல்லாமே நன்றாகவே மக்களால் பார்வையாளர்களால், இரசிகர்களால் எடுத்துக் கொள்ளப்படும் இதுவும் நன்றாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை. எனக்கு நன்றாக இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது பிரமாதம் என்ற சொல்லை விமர்சனக் குறிப்பாய் சொல்ல முடியாவிட்டாலும்.

நூற்றுக்கு 50 மதிப்பெண் தாராளமாகத் தரலாம். பெறலாம் , பார்க்கலாம், பிறரையும் பார்க்கச் சொல்லலாம்.நன்றி கேவி ஆனந்த் அகோரம் தயாரிப்பு, ஹிப் ஹாப் தமிழனின் ஹேப்பி நியூ இயர் பாடல் கமலின் சகலகலா வல்லவன் ஹேப்பி நியூ இயர் பாடலை பின்னுக்குத் தள்ளும் என நம்பலாம்.

ஜெகனும் நண்பர்கள் குழுவும் வழக்கம்போல நண்பர்கள் படம் போல ...பைவ் ஸ்டார் கிருஷ்ணா நன்றாக குறிப்பிடும்படி செய்திருக்கிறார். பயன்படுத்தி இருக்கிறார்கள் வில்லனாகவே நடிக்க தகுதி இருப்பது போலத் தெரிகிறது.

Image result for kavaN


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment