Saturday, April 1, 2017

3400 தமிழக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வழி செய்த வழக்கறிஞர் பாலு மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி: கவிஞர் தணிகை

3400 தமிழக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வழி செய்த வழக்கறிஞர் பாலு மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி: கவிஞர் தணிகை

குடி மிருகமே குடி
உன் மனைவி மக்களை
கிழித்தெறிந்து
வழிந்தோடும்
இரத்தத்தை
நக்கி நக்கிக் குடி..
   ‍‍‍==கவிஞர் தணிகை.Image result for apex court of india and advocate Balu fought against TN tasmac

அரசால், அரசியல்வாதிகளால், சசிபெருமாள் போன்ற மதுவிலக்குப் போராளிகளால் செய்ய முடியாத இந்த நல்ல விஷயத்தை முன்னால் நீதியரசர் இந்நாள் சமூக சேவகர் சந்துரு சொன்னபடி சட்டத்தால் பொது நல வழக்கால் உச்ச நீதிமன்றத்தில் ஆணை பெற்று ஒரே நாளில் தமிழகத்தின் மதுக்கடைகளில் சுமார் 3400 கடைகளை மூடிய வழக்கறிஞர் கே.பாலு  and Arrive Safe voluntary organisation அவர்களுக்கு இந்த தமிழக மக்களின் சார்பாக கோடான கோடி நன்றியை இந்தப் பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

போதனையால் பிரச்சாரத்தால் ஏன் தேர்தல் வாக்குறுதியால் கூட மாறாத இந்தியக் குடிமகன்கள் இந்த மாற்றத்தை ஆணையாகக் கொண்டு வந்து பிறகு என்ன செய்ய முடியும்? 500 மீட்டர் தொலைவுக்கு அப்புறப் படுத்தச் சொல்லி இருக்கிறார்கள் சாலையிலிருந்து, தொழுகைக் கூடங்களிலிருந்து, பள்ளிகளிலிருந்து ஏன் இதை பொது இடத்தில் இருந்தே அப்புறப்படுத்தி புதைகுழிக்கருகே கொண்டு சென்று வைத்து குடித்து விட்டு வருவாரை அப்படியே புதை குழிக்குள் படுத்து மண்ணை மூடிப் போட்டு விட வேண்டும்..என்னும் வசதியுடன் செய்யப் பட வேண்டும்.

Related image


இத்தனை ஆண்டுகளில் வேறு எந்த வடிவத்திலும் எதிர்த்தாலும் சளைக்காத அரக்கர்கள் இப்போது செவி சாய்த்திருக்கிறார் வேறு வழியின்றி. அதுவும் தள்ளி வைக்கச் சொன்னதற்கே இவ்வளவு நீலிக்கண்ணீர். புறநகர் பகுதிகளில் 200 மீட்டர் தள்ளி இருக்கலாமாம்...சுமார் 10 இலட்சம் ஊழியர்கள் பணி இழப்பார்களாம், மாற்றி வைக்கையில் அங்கேயும் இவர்களுக்கு வேலை கிடைக்கும் தானே...அப்புறம் ஏன் இந்தக் கவலை இவர்களுக்கு...நினைத்த இடத்தில் வேலை கிடைக்காதே...மறுபடியும் அரசியல் குறுக்கீடு, மாறுதல் செலவு இலஞ்சங்கள்...இப்படி எல்லாம் போகுமே.. இதனால் இப்போது சரக்கு எக்கச் சக்க விலையாம், எக்ஸ்ட்ரா விலையாம்

கள்ள மது பெருகும் என்ற வாதம் ஒன்று இருக்கிறது , அரசு என்ற ஒன்று நல்லபடியாக இயங்கினால் காவல்துறை சரியாக இருந்தால் அதெல்லாம் வரமுடியாது.

Image result for sasiperumal and kovan

முக்கியமாக தேர்தல் முறைகளில் நாடு ஈடுபடும்போது எல்லாக் கடைகளுமே மூடப்பட வேண்டும். இதையெல்லாம் விட்டு விட்டு இராதா கிருஷ்ணன் நகர் தேர்தலில் எப்படி எல்லாமோ பிரச்சாரம்...வேடிக்கை...வியாபரம்

இது நிரந்தர முதல்வர் ஜெவின் அரசாட்சிக்கு, அவர்கள் சார்பான ஆட்சியாளர்க்கு மேலும் ஒரு பின்னடைவு. நமக்கெல்லாம் பெரு மகிழ்வு.

இனியாவது தாய்மார்கள் நல்லபடியாக உறங்கட்டும்...பொது இடத்தில் குடிக்காத நல்ல மக்கள் அமைதியாக போக்குவரவு செய்யட்டும்.

என்ன இதை எல்லாம் நிரந்தரமாக மூட வில்லை எனினும், இது எல்லாம் தற்காலிக வெற்றிதான்.என்றாலும் இதை செய்யவே இந்த நாட்டில் ஆள் இல்லாதபோது பாலு வழக்கறிஞருக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் .இவர் மாதிரி எல்லாம் நானும் நாமும் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதுண்டு. புலைத்தனத்துக்கு எதிராக சட்டபூர்வமாக போர்க்கோலம் ஏந்தவேண்டுமென்று...
Harban Sithu 47.He is also a reason to close down the highway liquor shops in TN and India.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.3 comments:

  1. நீதி மன்றத்திற்கு நன்றி கூறுவோம்

    ReplyDelete
  2. thanks for your feedback on this post.vanakkam

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete