Sunday, March 12, 2017

இதுதான் இந்தியா: அந்த 90 பேரை வாழ்த்தி வணங்குகிறோம். கவிஞர் தணிகை

இதுதான்  இந்தியா: அந்த 90 பேரை வாழ்த்தி வணங்குகிறோம். கவிஞர் தணிகை

இந்த நாட்டில் தியாகத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதற்கு இந்த இரோம் சர்மிளாவின் தேர்தலில் பெற்ற வாக்குகள் ஒரு அடையாளம், மேலும் சசிபெருமா ள் மது விலக்குப் போராளியின் மூத்த இயக்க நண்பர் சின்ன பையன் நமது சேலம்  வடக்குத்  தொகுதியில் பெற்ற வாக்குகள் நல் அடையாளம். சின்ன பையனும் சசிபெருமாளும் நம்மிடையே இல்லை. இந்த இரோம் சர்மிளா இருக்கிறார்.

சின்னபையனுக்காவது எமது இயக்க பிரச்சாரங்கள் சுமார் 860க்கும் மேலான வாக்குகள் பெற்றுத் தந்தன.ஆனால் இந்த இரோம் 16 வருடம் நல் கோரிக்கைக்காக உண்ணா நோன்பிருந்து வெறும் 90 வாக்குகள் பெற்று இனி அரசியலில் கலந்து கொள்ள மாட்டேன் என விலகுவது இந்தியாவின் நிலையை தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. சேவைக்கும் நல் கொள்கைக்கும் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. அந்த 90 பேரை வாழ்த்துவோம். வணங்குகிறோம்.



news follows:

90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி: அரசியலில் இருந்து விலகுவதாக இரோம் ஷர்மிளா அறிவிப்பு

irom


மணிப்பூர் பேரவைத் தேர்தலில் வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்த சமூக சேவகி இரோம் ஷர்மிளா, அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நடைமுறைகளைக் கண்டு தாம் விரக்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் இரோம் ஷர்மிளா.
இதையடுத்து, அவர் மீது தற்கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அண்மையில் அறிவித்த இரோம் ஷர்மிளா தீவிர அரசியலில் இறங்கினார். மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய அவர், மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் மாநில முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து தெளபால் தொகுதியில் போட்டியிட்டார்.
மாநிலப் பேரவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தத் தொகுதியில், வெறும் 90 வாக்குகளை மட்டுமே பெற்று இரோம் ஷர்மிளா படுதோல்வியடைந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவர், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, இம்பாலில் செய்தியாளர்களிடம் இரோம் ஷர்மிளா சனிக்கிழமை கூறியதாவது:
தற்போது உள்ள அரசியல் நடைமுறைகள் மனவிரக்தியைத் தருகின்றன. இதன் காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அரசியல் ரீதியாக தோல்வியடைந்தாலும், சமூக சேவகராக எனது பணிகள் தொடரும்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யும் வரை எனது போராட்டம் முடிவடையாது. தற்போது எனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவில் இருந்து மீண்டு வரவும், மன நிம்மதிக்காகவும், சில நாள்களுக்கு தென்னிந்தியாவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கோவாவில்தான் அதிகமான நோட்டா ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கோவாவில் 1.2 சதவிகித ஓட்டுகள், நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. உத்தரகாண்டில் 1 சதவிகிதம், உத்தரப் பிரதேசத்தில் 0.9 சதவிகிதம், பஞ்சாபில் 0.7 சதவிகிதம், மணிப்பூரில் 0.5 சதவிகித ஓட்டுகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.

உ.பி தேர்தல் ... சிறையில் இருந்த படியே வென்ற கொலை குற்றவாளி

உத்தரப்பிரதேசத்தில் மனைவியை கொன்ற வழக்கில் கைதானவர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


சுயேட்சை வேட்பாளராக நவுடன்வா தொகுதிகளில் அமன்மணி திரிபாதி என்பவர் போட்டியிட்டு 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தம்மை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் குன்வர் கவுசல் கிஷோர் சிங்கை தோற்கடித்துள்ளார். அமன்மணி திரிபாதிக்கு முதலில் சமாஜ்வாதி கட்சியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் அகிலேஷ் யாதவ் அமன்மணி திரிபாதிக்கு கொடுத்த வாய்ப்பை பறித்துவிட்டார். இதனிடையே மனைவியை கொன்று நாடகமாடிய வழக்கில் அமன்மணி சிக்கினார். அவர் சிறையில் இருந்தபடியே தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். தற்போது பிரசாரம் செய்யாமலேயே அமன்மணி வென்றிருப்பதும் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக அகிலேஷ் யாதவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

OUR VOTING SYSTEM PROVED AS CORRUPT.




மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

நன்றி: தினமணி.

10 comments:

  1. thanks for your feedback on this post sir. vanakkam. please keep contact

    ReplyDelete
  2. //// இந்தியாவின் நிலையை தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. சேவைக்கும் நல் கொள்கைக்கும் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. ////

    வேதனை வேதனை . இதுதான் இந்தியா

    ReplyDelete
    Replies
    1. exactly my dear syedabthayar721.thanks for your feedback on this post. vanakkam

      Delete
  3. #தென்னிந்தியாவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.#
    தமிழ் நாட்டுக்கு வந்தால் உள்ள நிம்மதியும் போய்விடும் :)

    ReplyDelete
    Replies
    1. did you think like that? Travel may gain many and various types of experiences. thanks for your feedback on this post Bagawanjee KA

      Delete
  4. //இதுதான் இந்தியா.
    சேவைக்கும் நல் கொள்கைக்கும் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது.//
    முற்றிலும் சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post .vanakka. please keep contact

      Delete
  5. வேதனை நண்பரே
    மக்கள் சிந்திப்பதே இல்லை

    ReplyDelete