Wednesday, November 7, 2018

சர்கார்: கவிஞர் தணிகை

சர்கார்: கவிஞர் தணிகை

Image result for sarkar wiki

எனது தந்தையின் காலத் தலைமுறையில் அல்லது ஆங்கிலேய ஆட்சி நடைபெற்று வரும்போதும் அதன் தாக்கம் இருந்த போதும் இந்த சர்கார் என்ற வார்த்தை அரசாங்கம், ஆட்சி என்பவற்றிற்கு அதிகம் பயன்படுத்தப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்திப் படங்களிலும் அதிகம் புழக்கத்தில் உண்டு. ஹொசூர் அல்லது சர்கார் என்று எஜமானர்களையும் அழைப்பதுண்டு.

படம் பேசுகிறது. எனவே அதைப்பற்றிப் பேசத்தான் வேண்டும். சிகர் வாயில் பெண்கள் புடை சூழ ஆரம்பத்தில் கார்ப்ரேட் கிரிமினல் என்ற பேருடன் சுந்தர் ராமசாமி தனது வாக்கை செலுத்த வருகிறார். அவருடைய வாக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாக்கு கள்ள வாக்களிக்கப்பட்டிருப்பதைப் போல முன் கூட்டியே அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே அது முதல் கதை ஆரம்ப‌ம் என்று சொல்ல‌லாம்.

எனக்கும் ஒரு புளிய மரத்தின் கதை மற்றும் ஜெ.ஜெ. சில குறிப்புகள் எழுதிய சுந்தர ராமசாமிக்கும் (மறைந்த) கடிதத் தொடர்பு இருந்தது. ஆனால் இந்த சுந்தர் ராமசாமி வேறு. ஜெயமோகன் வசனம் எழுதி முருகதாஸ் கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் அனைவரும் கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையைக் குறிப்பிட்டுள்ளதாக கதையில் சொல்கிறார்க்ள்...ஆனால் அப்படி எல்லாம் இல்லை.

கமல், ரஜினி, விஜய்,அஜித், இப்படி யார் நடித்திருந்தாலும் ஒரு நல்ல கதை வலுவாக கருப்பொருளாக  அமைந்திருந்தால் மட்டுமே அது நல்ல சினிமாவாக உருப்பெற அமையும் நம்மாலும் சலிக்காமல் பார்க்க முடியும். ஏன் எனில் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் ஒரு இடத்தில் அமர்ந்து பார்க்க ருசியாக இல்லை எனில் நேர விரயம் என்றே கருதப்படும்.

முருகதாஸ் வருண் ராஜேந்திரன் என்பவர் எழுதிய செங்கோல் என்ற கதையை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது என்று ஏற்றுக் கொண்டு டைட்டில் கார்டிலும் பேர் போடுவதாகவும், நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துக் கொண்டு வெளியிட்ட படம் தேறிவிடும் போல் தான் இருக்கிறது.

முதலில் 49 ஒ பற்றி 49 பி பற்றி எல்லாம் சொல்கிறார்கள், நல்ல தடத்தில் கதை செல்ல, பழ கருப்பையாவும் இராதாரவியும் கொஞ்சம் காய் நகர்த்திவிட வரலட்சுமி சரத்குமார்(காஞ்சனா) வந்த பிறகு வழக்கமான சினிமாக் கதையில் செல்ல ஆரம்பித்து விடுகிறது அரசியல் நாடகத்தனமாக.

கீர்த்தி சுரேஷ் நாயகி என்ற பேர் அதிகம் வேலையில்லை. லிவிங்ஸ்டன் அவர் இவர் என்று நடிகர்கள் பட்டாளம், ஏகக் கூட்டம் ....எதிரியின் மாநாடு நடக்கும் இடத்துக்கு பைக்கில் கூட்டம் செல்வது, போன்ற காட்சிகள் ஒட்டவில்லை. இராதாரவி விஜய் டிவி பேட்டிக் காட்சிகள் முதல்வன் படக் காட்சிகளை ரகுவரன் வெர்ஸஸ் அர்ஜின் போல நினைக்கத் தோன்றுகிறது.

ஆரம்பத்தில் யோசனை செய்ய முடியா அளவு கதை நகர்ந்த போதும் சிறிது நேரத்தில் வழக்கமான சினிமா பாணிக்கு விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் முகமாக பாட்டு, சண்டை, என மாறி விடுகிறது. பழ கருப்பையாவை அவர் மகள் வரலட்சுமி சரத்குமார் மாத்திரை கொடுத்து கொல்வதும் அவரும் அந்த சாவை இன்முகத்துடன் ஏற்பதும் சற்று வேறுபாடான காட்சி அமைப்பு. அரசியலில் எதுவும் நடக்கும்யா என்பது போல..

அரசியல் ஜோடனையில் எதிரியை வீழ்த்த எத்தனை பொய்களை வேண்டுமனாலும் ஜோடித்து வீசலாம் என் வரலட்சுமி செய்கிறார். அதிலிருந்து சுந்தர் எப்படி மீள்கிறார் என்பதும்

ஃப்யூஸ் மானுஸ், இன்ன பிற சேவையாளர்கள் ஒரு காட்சி அமைப்புக்கு சேர்க்கப்பட்டிருப்பதும், வேறு பெயரில் சகாயம் ஐ.ஏ.எஸ் நினைவு கூரப்படுவதும் சில எண்ணத் தெறிப்புகள்

ஆனால் இவர் போல பெரிய வழக்கறிஞர்கள் வைத்து வாதாட முடியுமா வாக்களிக்க முடியாதார், மேலும் தேர்தல் ஆணையம்  நீதிமன்றங்கள் இப்படி வழக்குகளை நேர்மையாக எதிர்கொண்டு பதவியேற்பை நிறுத்துமா, தேர்தலை வாக்கு எண்ணிக்கையை தள்ளிப் போடுமா என்பதெல்லாம் கேட்கக் கூடாது.

கன்டெய்னர் லாரியில் கரன்ஸி, ஸ்டிக்கர் கலாச்சாரம் போன்றவை கடந்த ஜெ ஆட்சியை நினைவுபடுத்துகின்றன...ஒரே நாளில் தனி மனிதர் சரித்திரமாகமுடியும், சாதனை புரியுமளவு பெரும் மக்கள் கூட்டத்தை அணி திரட்ட முடியும் என்றெல்லாம் நம்பிக்கை கனவுகள் விதைக்கப்படுகின்றன. தலைவர் பிராண்டை சிதைத்துக் காட்டுகிறேன் என்ற சவாலுக்கு சரியான உத்தி சேர்க்கப்படவில்லை. சமூக தளங்கள் பெரிதும் தேர்தலை பாதிக்கும் என்ற சொல்லப்படுகிறது.

கதைதானே, சினிமாதானே என்று விட்டு விடக் கூடாது என அவர்கள் இரசிகர்கள் தங்களது நாயகனையும் ஒரு கட்சி ஆரம்பிக்க அழைப்பது வெளியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் மூலம் நன்கு தெரிகிறது.

சர்கார் விலக்க முடியாத படம். ஒரு முறை பார்க்கலாம் .முன் பாதி விறுவிறுப்பு. பின் பாதி யூகித்தறிய முடியுமளவு....கதை நகர்தல்கள்...

நிறைய கூட்டமாக நடிகர்கள் ஆனால் சுந்தர் ராமசாமி மட்டுமே நிற்கிறார். மேலும் வரலட்சுமி வில்லியாக சண்டைக்கோழிக்கும் பிறகு இதிலும்...பார்க்க முடிகிறது...

சன்பிக்ஸர்ஸ் கலநிதி மாறன் குரூப்புக்கு பணம் பண்ணத் தெரிந்திருக்கிறது 120 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட படம் முதல் நாளிலேயே வசூல் 70 கோடி ஈட்டி விட்டதாக செய்திகள்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை அப்படி ஒன்றும் புயலை எல்லாம் கிளப்ப முடியவில்லை

முற்பாதி அமர்க்களம் பிற்பாதி சராசரி..இரசிகர்க்கு விருந்து. நூற்றுக்கு 45 கொடுக்கலாம் சமுதாய தாக்கம் அரசியல் என்று பேசுவதற்காக..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Tuesday, November 6, 2018

தீபாவளி பற்றிய எனது நினைவலைகள்: கவிஞர் தணிகை

தீபாவளி பற்றிய எனது நினைவலைகள்: கவிஞர் தணிகை

Related image

காஞ்சி ஜெயேந்திரர் டி.வியில் பேசுவார், அவரைக் காணோம் அவர் இருக்கும்போதே காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கையும் ஒன்றும் இல்லாமல் செய்தார்கள் நீதி சரியான ஆதாரம் இல்லை என்று அந்தக் குடும்பத்தின் தலைவர் மறைந்ததை மிகவும் துச்சமாகத் தூக்கிப் போட்டுவிட்டது...அந்த குடும்பத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது பற்றி  எவருமே அதன் பின் பேசியதாகத் தெரியவில்லை..

அந்த ஜெயேந்திர சங்கராச்சாரியாரைப் பிடித்து ஜெ முதல்வராக இருக்கும்போது பிடித்து உள்ளே வைத்தார். அவரையும் காணோம். நிரந்தர முதல்வர் என்றார்கள்...

எனக்குத் தெரிந்த அனுராதா ரமணன் என்ற இரட்டை நாடிப் பெண் எழுத்தாளர் இவர் சொந்த ஊர் மேட்டூர், இவருடைய தந்தை பாலசுப்ரமணியம் எம்.ஜி.ஆர் காலத்தில் அவருடன் எல்லாம் சேர்ந்து நடித்தவர் ..அவர் இவர் எல்லாம் ஒரு காலத்தில் இங்கு மேட்டூரில் கெமிகல் காலனிக் ஃகுவார்ட்டர்ஸில் குடி இருந்தவர்கள் அனுராதா ரமணன் அவளும் வள்ளல்தான் என்ற ஒரு சிறு கதையின் மூலம் மார் மூடாத சினிமா போஸ்டர் பெண்ணுக்கு தனது தாவணியை எடுத்து மூடி மறைத்த பெண் பற்றி எழுதி பரிசு வாங்கி எழுத்து உலகில் நுழைந்த எழுத்தாளர்.
Related image
இவரை ஜெயேந்திரர் சீண்டியதாக அவரே தமது சொந்த பேட்டியில் சொல்லி எழுதி இருக்கிறார். அப்போதெல்லாம் எந்த மீ டூ வும் இல்லை...இருவரும் ஒரே இனம் வேறு.

இப்போது இந்த இருவருமே இல்லாத போதும் அந்த தீபாவளி நிகழ்வு பற்றிய நினைவு என்னுள் ...ஜெயேந்திரர் டி.வியில் எண்ணெய் ஸ்நானம் பற்றி ஸ்வீட் பற்றி, பட்டாசு பற்றி எல்லாம் பேசியது நினைவில் இன்னும் மறையவில்லை..

ஜக்கி இப்போது பேசுகிறார் இனி வாழ்வெங்கும் மனம் எங்கும் ஒளி பரவட்டும் அதுதான் இந்த தீபாவளி என்னும் தீபங்களின் வரிசை என்பது பற்றி...

தமிழர்களுக்கு என்றுமே பரந்த மனது...மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், இந்திக்காரர்கள், மார்வாடிகள் , பஞ்சாபிகள் இப்படி இனம் எல்லாம் பார்க்க மாட்டார்கள்...எல்லாரையுமே மனிதர்களாகவே பார்ப்பார்க்ள...அவர்களின் பொருளாதார தரம், அறிவின் மொழி, நிறம் இதை எல்லாம் பார்க்காமல் அவர்களின் குணத்தை மற்றுமே கொள்வார்கள்...

அப்படி எல்லா இனங்களுமே தம்மை மனித இனம் ஒன்று எனப் பார்த்தால் மற்ற உயிரினங்க்ள் யாவுமே அழிவிலிருந்து மீளும்..இராமலிங்க வள்ளலார், சித்தர்களின் பார்வை எல்லாமே அதுதான்...அது போன்ற பார்வையை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற தத்துவ மேதைகள்...இவர் ஒரு சீடரைக்கூட தமக்காக வைத்துக் கொள்ளாதவர், தமது தமக்கான அவையை கலைத்துவிட்ட பிறகும் தமது எண்ணங்களை உலகெங்கும் கேட்பார்க்கு பரப்பிச் சென்றவர்.
Related image
கலாம் கூட கணியன் பூங்குன்றனாரின்: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல் வரிகளை உலகெங்கும் கொண்டு செலுத்த ஐக்கிய நாடுகள் சபையில் எல்லம் பேசினார்...

இந்த தீப ஒளித் திருநாளில் அது போன்ற மாமேதைகளின் ஒளி மிக்க வார்த்தை பின் உள்ள பொருள் காண்போம்.

இருள் என்பது இயல்பான புவியின் ஒளி
வெளிச்சம் என்பது  புவியின் மேல் வீழும் கதிரின் எரிதழல் வெப்ப வீச்சு...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


Monday, November 5, 2018

இராட்சசன்: சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை

இராட்சசன்: சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை

Image result for raatchasan

 இந்தப் படத்தை ஆங்கிலத்தில் எடுக்கலாம் இந்தப் படம் தமிழில் வந்திருக்க வேண்டாம். குடும்பத்துடன் பார்க்க முடியாத படம். ஏன் எனில் ஒரு ஆசிரியர் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார் பள்ளி மாணவிகளிடம் என்பதை மிகவும் நாசூக்காக ஆனால் கொடூரமாக  வக்ரமாக வெளிப்படுத்தியதிலிருந்தே இந்தப் படம் எனது அன்றைய தூக்கத்தைக் கெடுக்கும் படமாக அமையப்போகிறது என நான் நினைக்காத போதும் ஆனால் அப்படித்தான் அது தான் நடந்தது.

அதன் பின் கொலையாளியைத் தேடி விஷ்ணு விசால் செல்லச் செல்ல நாமும் செல்ல வேண்டி நேரிடுகிறது விஷ்ணுவிசாலின் அண்ணன் மகள் பற்றி நம்மால் முன் கூட்டியே இவர் பலியாவார் என்பதையும், அவள் பியோனோ வாசிக்கும் மேஜிக் செய்யும் கொலைகாரியாக இருக்க முடியாது என்றும் முன் கூட்டியே தீர்மானத்துக்கு வர முடிகிறது.

விஷ்ணு விசாலைப் பாராட்டத்தான் வேண்டும். வெண்ணிலாக் கபாடிக் குழுவின் ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய இடத்தை தேர்வு செய்து தக்க வைத்து வருகிறார்.

ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை ஒரு காதல் குற்றப் பின்ணனி உள்ள படம். அந்தக் காலத்தில் அது சக்கைப் போடு போட்டது ஒரு பேய்க்கதையோ என்று பார்க்குமளவு...மறு ஜென்ம நினைவுகளுடன்.

அதன் பின் பாரதிராஜா செக்ஸ் பின்ணணியுடன் சிவப்பு ரோஜாக்கள் போன்ற குற்றப் பின்ணனி படங்களைத் தர அதன் பின் அவரது உதவியாளராக வசன கர்த்தாவான மணிவண்ணன் நூறாவது நாள் போன்ற படங்கள் தந்தார்.

ஆனால் இதனிடையே ஊமை விழிகள் என்ற குற்றப் பின்ணினிப் படத்தை ஆதாரங்களுடன் அரிய பாடல்களுடன் ஆபாவாணன் தந்தார்...மேலும் பேய்க்கதை நாய்க்கதை குரங்குக் கதை, பாம்புக் கதை என எல்லா மிருகக் கதைகளையும் தேவரும், இராமநாராயணன் போன்றோரும் தந்தனர். ஏன் விட்டலாச்சாரியார் ஜெயமோகினிப் படங்களையும் தந்தார்.

இந்தப் படம் இதன் இயக்குனர் ராம் குமார், விஷ்ணு விசால், அமலா பால், சரவணன் , இராதாரவி போன்ற அனைவர்க்குமே ஏன் ராமதாஸ் மிகவும் நன்றாக செய்திருக்கிறார்....இவர்கள் அனைவர்க்குமே ஒரு குறிப்பிட்ட படமாக அமைந்துள்ளது Image result for raatchasan

ராட்சசனை வீழ்த்தும் விஷ்ணுவிஷாலுக்கே இந்தப் படம் ஒரு நல்ல இடத்தைத் தந்துள்ளது. நான் பெண்களை , குடும்பத்தாரை, குழந்தைகளை இந்தப் படத்தை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்னும் முறையில் மிகவும் கொடூரமாக படம் விளங்குகிறது...அவ்வளவு இயல்பாக தத்ரூபமாக உண்மையாக நடந்த கதையாகவே இல்லை நடந்த நடப்பாகவே படம் நமக்கு தரப்பட்டுள்ளது... எனவே இது படத்துக்கு வெற்றி, படம் வெற்றி...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, November 2, 2018

சினிமா இயக்குனர் சங்கரின் தெனாவெட்டும் சிவகுமாரின் பெருமையும்: கவிஞர் தணிகை

சினிமா இயக்குனர் சங்கரின் தெனாவெட்டும் சிவகுமாரின் பெருமையும்: கவிஞர் தணிகை

Image result for sivakumar,kamalhasan,rajinikanth,sankar


கமல்ஹாசன் முதல்வராகும் கருத்துக் கணிப்பில் ரஜினியை முந்தி வாக்கு சதவீதம் வாங்கியுள்ள நிலையில் 2.0 வில் ஆர்னால்டை கூப்பிட்டேன்,கமலைக் கூப்பிட்டேன்,ஜாக்கிஜானைக் கூப்பிட்டேன்சில்வஸ்டர் ஸ்டால்லொனைக் கூப்பிட்டேன்,பென் கிங்ஸ்லீயைக் கூப்பிட்டேன், பெட்ரோல் டீசலைக் கூப்பிட்டேன்   ரஜினிக்கு வில்லனாக நடிக்க என்ற செய்திகளை எல்லாம் வரவைக்கிறார்கள்.

ரஜினியிடம் அப்படி என்னதான் கண்டாரோ இந்த சங்கர்....கையைக் காலைக் கூட ஆட்டாமலே, எந்திரத்தனமாக நடிக்கிறேன் என்ற பேரில் வெட்டி பந்தா,உதார் விட்டபடி நடித்தும் நடிக்காமல், படம் ஓடியும் ஓடாமல் இருந்தாலும் வெறும் விளம்பரத்தை வைத்தே காலம் தள்ளி, ஒரு காலத்தில் கமலுக்கு வில்லனாக நடித்த அதே நடிகருக்கு வில்லனாக நடிக்க வைக்கலாம் என்று கேட்டபோது நல்லவேளை சிவகுமார் செய்த தப்பை புவனா ஒரு கேள்விக்குறி மூலம் விட்டுக் கொடுத்த வாய்ப்பை கமல் செய்யவில்லை.

கமலும் வில்லனாக நடித்து வளர்ந்தவர்தான், மேலும் அதை எல்லாம் விட குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியாரிடமிருந்து நடிப்புக்கு சம்பளமாக காரையே பரிசாக வாங்கியவர், சினிமாத்துறையில் ரஜினிக்கு சீனியர், 50 ஆண்டுக்கும் மேல் நடித்து வரும் கலை ஞானி... அதெல்லாம் வேறு...


கிறுக்குத்தனம்,கிக்கிரித்தனம், வெறும் உதார் பேர்வழிகளை தூக்கிக் கொண்டாட என்று இருக்கும் கூட்டத்தையே நம்பி இன்னும் சங்கர் எத்தனை காலம்தாம் வண்டி ஓட்டப்போகிறார் என்றுதான் பார்ப்போமே...
Image result for sivakumar,kamalhasan,rajinikanth,sankar
காசுதானே, நடிப்புதானே, என சங்கரின் காசுக்கு பணிந்து அந்த ரோலை ஏற்று செய்திருந்தால் இன்று அவரின் Kamal இமேஜ் பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைந்திருக்கும்

நடக்கும் இதை எல்லாம் பார்க்கும்போது பாரதிய ஜனதாவின் ஒவ்வொரு நகர்வும் எல்லா தளங்களிலும் கணக்கிடப்பட்டு காய் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

சிவகுமார் நல்ல மனிதராக தட்டிவிட்ட செல்பேசியை 21 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கிக் கொடுத்து, பொதுவில் வருத்தமும், மன்னிப்பும் கோரி இருப்பது அவருக்கு பெருமைதான் சிறுமையில்லை. மேலும் அவரது நிலையை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மனிதர்க்கு தவறு செய்தல் இயல்பே...அதிலிருந்து மீளும் முறைகளில்தான் மறுபடியும் அவர்களுக்கு முத்திரை கிடைக்கிறது.
Image result for sivakumar,kamalhasan,rajinikanth,sankar
அந்த வகையில் சிவகுமார் தாம் ஒரு மிக நல்ல மனிதர் என்பதை நிரூபித்து விட்டார்  சங்கர் ஏதோ பெரிதாக செய்வதாகச் சொல்லி சிறுமையடையப்போகிறார்...

மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.

Monday, October 29, 2018

29 10.18 இன்றைய கல்லூரி ஃபேர்வெல்லில் எனது எண்ண அலைகள்: .கவிஞர் தணிகை

29 10.18 இன்றைய கல்லூரி ஃபேர்வெல்லில் எனது எண்ண அலைகள்:  கவிஞர் தணிகை



இனி நாம் எவருமே தாயின் கர்ப்பப் பைக்குள் புக முடியாது, தொப்பூள் கொடியை அவரிடமிருந்து துண்டித்து நாம் தனியே அவர் தனியே எனப் பிரிந்ததே ஃபர்ஸ்ட் ஃபேர்வெல்

தாய்ப்பால் குடி மறந்தபோது இரண்டாம் ஃபேர்வெல் நடந்தது.

பெற்றோரை விட்டு பள்ளிக்குள் புகுந்ததும் மூன்றாம் ஃபேர்வெல்

ஒவ்வொரு வகுப்பைத் தாண்டும்போதும் ஒரு ஃபேர்வெல்

பிரிவோம் சந்திப்போம் என்ற அந்த ஃபேர்வெல் இன்று உங்களை டாக்டர்களாக்கி நீங்கள் டாக்டர்களாகி பிரியும்போது வந்திருக்கிறது...

நாம் எவருமே தனித்தனியல்ல... நீ என்ற உனக்குள் எப்போதும் பிரியாமல்
உன் பெற்றோர், ஆசிரியர்,நட்பு, யவுமே இருக்கின்றன...விதைகளாக, சதையாய் எலும்பாய் நாம் சிறிதிலிருந்து பெரிதாகும் வரை இது போல் நிறைய ஃபேர்வெல்கள் வரும் போகும்...இங்கு நீ எனக் குறிப்பிட்டது மரியாதையைக் குறைக்க அல்ல...ஒருமையைக் குறிப்பதற்கே...

நமது அனைவர்க்கும் ஒரு நிரந்தரமான ஃபேர்வெல் உண்டு. அதைச் சொல்ல  சந்திக்க பயப்படத்தேவையில்லை. அது பற்றி பேசவும் கூச்சப்படவும் தேவவையில்லி..ஆனால் அதற்குள் நம்மை நாம் நிலை நாட்டிக் கொள்ள என்ன செய்யப்போகிறோம்? என்ன செய்திருக்கிறோம்? அதைப் பொறுத்துத்தான் நமது பெயர் விளங்கும். நமக்கான ஃபேர்வெல் இருக்கும்

ஒவ்வொருவருக்கும் சாதனை செய்ய ஒவ்வொரு தனித்தனியான முகம் இருக்கிறது...வாழ்த்துகள், ஆசிகள் என்றென்றும்..,

பாலமலை தூய்மை பாரதத் திட்டத்தின்  பயிற்சியில் வெற்றி பெற்ற இந்த இருபது பேரைப்பற்றி நிறைய சொல்லலாம்...ஆனால் ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்:
Image may contain: 2 people, people smiling, people standing
இந்த திட்டத்துக்கு நோடல் ஆபிசராக என்னை நியமித்த முதல்வர் பேராசிரியர் டாக்டர் பேபிஜான் தற்போதைய இந்திய உபகண்டத்தின் சிறுவர் பல் மருத்துவத்துறையின் தலைவராக உயர்ந்திருக்கிறார் இப்போது மாநில அளவில் இந்திய பல் மருத்துவக் கழகத்தின் முதல் மாநாடாக வரும் நவம்பர் 10 11 ஆம் தேதிகளில்  ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்து  எங்கள் கல்லூரி சார்பாக நடத்துகிறார் அவருக்கே முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்...
Image may contain: 4 people, people smiling, selfie, mountain, outdoor and nature
டாக்டர்    கவித்ரா முகாமின் பெயிண்டிங் பணி இவரால் முன்னெடுக்கப்பட்டது.
டாக்டர் ஆனந்த் ப்ரகாஷ்: நல்ல களப்பணியாளர் மற்றும் தலைவர்
டாக்டர் பீட்டர் ஸ்டீபன்சன்: சமூக அக்கறையுள்ள மருத்துவர்
டாக்டர் சோபியா: வார்த்தை மாறா பணி அர்ப்பணிப்பாளர்.
டாக்டர் ப்ரவின்குமார்: துன்பம் பொருட்படுத்தாமல் சேவைக்கு வந்தவர்
டாக்டர் ஜெயபால்: சேவை மனப்பக்குவமுள்ள பம்பரக் கால்கள்
டாக்டர் சினுமோல் சாஜன்: மிகவும் சுறுசுறுப்பான ஒத்துழைப்பாளர்
டாக்டர் அருண் விக்னேஷ்: ஆக்கபூர்வமான உழைப்பாளி
டாக்டர் ரஞ்சித்: எதற்கும் தயாரான முகாம் உறுதுணை
டாக்டர் சி.பி.நந்தினி: எதற்கும் தயார்
டாக்டர் இலக்யா: முகாம் முழுதும் பாலமலையில் தங்க ரெடி என்றவ்ர்
டாக்டர் ஏ. ஆசிக்கா: மத நல்லிணக்கத்தின் அடையாளம்
டாக்டர் வெங்கடேஷ்: சலியாத மனம்
டாக்டர் கார்த்தி: தொழில் நுட்பம் அறிந்த முகாமுக்கு பிள்ளையார் சுழி
டாக்டர் சுஜிதா: விளையாட்டாகவே வினை செய்பவர்
டாக்டர் கிருஷ்ணகுமார்: குறி தவறாதவர்
டாக்டர் ஸ்ரீ ஹரிணி: குடும்பப் பாங்கு
டாக்டர் விக்னேஷ்வரி: தோழமையில் பிடிவாதம்
டாக்டர் கௌதம்: மண்ணின் மைந்தர்
டாக்டர் ஆர்.ஜி.ஆர்: சித்தார்த்: நுட்பமான அறிவுடைய முதல் பதிவாளர்

அத்துடன் ஒர் விபத்திலிருந்து எமைக் காத்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் மலை அடிவாரத்தில் காத்திருந்த பாலமுருகன் போன்ற கல்லூரி ஓட்டுனர்கள் அனைவர்க்கும் இந்தப் பதிவின் மூலம் நன்றி நவிலலை உரித்தாக்கி ஃபேர்வெல் பாரட்டும் என்றென்றும் அன்புடைய...

மறுபடியும்பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Saturday, October 27, 2018

தமிழக முதல்வர் குடி இருக்கும் பகுதிகளிலேயே சேலத்தில் இரவு நேர‌ வழிப்பறிக் கொள்ளைகள் : கவிஞர் தணிகை

தமிழக முதல்வர் குடி இருக்கும் பகுதிகளிலேயே சேலத்தில் இரவு நேர‌ வழிப்பறிக் கொள்ளைகள்  : கவிஞர் தணிகை

Image result for salem city night dacoits 2018


நன்றி: காலைக்கதிர் 26.10.18.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊர் எடப்பாடி என்றாலும் கூட இவரது முக்கியமான தங்கும் இடம் சேலத்தில் நெடுஞ்சாலை நகர் இருப்பிடம். சென்னையிலிருந்து அடிக்கடி வந்து செல்வார். இவரது பிம்பம் இந்த 18 எம்.எல்.ஏக்கள் வழக்கிலும் வெற்றி பெற்றதால் பெரிதாக வளர்வது போன்று இவரது கட்சியில் தோற்றம்..

கடந்த சில நாட்களில் மட்டும் தீபாவளி ஸ்பெசலாக 76 செல்பேசி, மற்றும் ரொக்கம் வழிப்பறித் திருட்டாக இரவு நேரங்களில் கொள்ளை அடிக்கும் கும்பலால் நடத்தப்பட்டிருக்கின்றன என்று சேலம் காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளன, என்று அதன் செய்தியை காலைக்கதிர் நாளிதழ் வெளியிட்டிருப்பதைக் கண்டேன். புகார் தெரிவிக்கப்பட்டதே 76 எண்ணிக்கை எனில் உண்மையில் நடந்தது எத்தனை இருக்குமோ என யூகித்துக் கொள்ளலாம். மேலும் இன்னும் தீபாவளிக்கு  ஒரு வாரம் இருக்கும் நிலையில் இந்த தொல்லைகள் மேலும் நீடிக்கும் இன்னும் தீவிரமாக ... இது சேலத்தில் நடப்பு.

 எனது சொந்த அனுபவத்திலேயே ஒரு முறை இப்படி ரூ.7 ஆயிரம், அரை நாண் கொடி, ஆகியவற்றை ஒரு பேருந்துப் பயணத்தின் போது மேட்டூரிலிருந்து சேலம் செல்லும்போதே இழந்திருக்கிறேன். அப்போதும் அது தீபாவளிக் கூட்டம்தாம். ஆனால் நான் புகார் தெரிவிக்கவில்லை . நாட்டின் தலைவிதியை ஏற்றுக் கொண்டேன் எனது தலைவிதியாக...

இந்த திருட்டு, வழிப்பறி, நடுநிசிக் கொள்ளை , தொடர்ந்து சேலத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தனைக்கும் முதல்வர் அடிக்கடி சென்னையிலிருந்து சேலம் வந்து சொந்த வீட்டுக்கு வருகை புரிந்து கோலாகல வரவேற்பை ஏற்றுக் கொண்டு சென்று வருகிறார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

நள்ளிரவுகளில் இரவு ஷிப்ட் பணிக்கு செல்வோர் வருவாரிடையேயும், வெளியூர் பயணிகள் இடையேயும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுமளவு கத்தி போன்ற கூர்மையான ஆய்தங்களுடன் பலர் அடங்கிய இரு சக்கர வாகன கும்பல்கள் வழி மறித்து மிரட்டி முக்கியமாக செல்பேசி, மற்றும் பணப்பர்ஸ், பைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை பிடுங்கி சென்று விடுவதாகவும் செய்தி குறிப்பிடுகின்றன.

இந்நிலையில் முதல்வர் இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே விபத்துகளைத் தடுப்பதில் முதல் மாநிலமாக விளங்குகிறது அவ்வளவு முயற்சிகள் நடக்கிறது என்றும், விபத்துகளுக்கு முக்கிய காரணம் சாலை விதிகளை கடைப்பிடிக்காததும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதுமே என்று குறிப்பிட்டு பேசி இருப்பது கவனிக்கத்தக்கது.

மேலும், இவரது  கட்சிக்காரர்களே வரவேற்பு கொடிகளை சாலையின் ஓரத்தில் நடாமல் பாதையின் இடையே சாலையின் இடர் விளைக்கும் பகுதிகளில் கூட நட்டு வைத்து விடுகிறார்கள் என்பதெல்லாம் அரசால் கவனிக்கப்பட வேண்டிய செய்திகள்.

மதுக்கடைகளையும் அரசே நடத்துகிறது, காவல்நிலையங்களையும் அரசே நடத்துகிறது...
Image result for salem city night dacoits 2018



அரசு நினைத்தால் எல்லாவற்றையும் செய்யலாம்...இன்னும் 3 எம்.எல்.ஏக்களியும் கூட பதவி நீக்கம் செய்யலாம். இடைத்தேர்தல் நடத்தலாம் 20 தொகுதிகளுக்கும் அவர்கள் மேல் முறையீடு செய்யாதிருந்தால்.. ஊராட்சித் தேர்தலையும் நடத்தாது இருக்கலாம்...தெருவிளக்குகள் இல்லாமல் இருக்கலாம்...பொது சாக்கடைகளையும் சுத்தப்படுத்தாமல் கொசுக்கள் பெருக டெங்கு , பன்றிக்காய்ச்சல் வருவதையும் விழிப்புணர்வு பிரச்சார பதாகைகள் அடிக்கச் சொல்லி கல்வி நிலையங்களுக்கு உத்தரவிட்டு செய்திகள் கொடுத்தபடி...மருத்துவ மனைகளையும் தயார்படுத்தலாம்...

எது அடிப்படையோ அதை செய்யாமல் ....எல்லாவற்றையும் வளரவிட்டு ஆள்வதாக மேலாண்மை செய்வதாக ஆட்சி செய்வதாக செய்திகளைக் கொடுக்கலாம்

ப்ளாஸ்டிக் வரும் ஜனவரி முதல் தடை என்று சொல்லி இருக்க, வணிகர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக செய்திகளும் சொல்லலாம்...

சாக்கடையை, இருப்பிடத்தை, வீதியை சாலையை தூய்மைப்படுத்தினால் கொசுக்கள் குறையும் அதை செய்ய மாட்டோம்.

மதுக்கடையை எடுக்க மாட்டோம்...விபத்து குறைய அடிப்படை ஆதாராமான அதை செய்ய மாட்டோம்..

பிளாஸ்டிக்கை , குடி நீரை, இப்படி எல்லாவற்றையும் வணிகமயமாக்கிவிட்டு இப்போது தடுக்க முடிவதாக, முனைவதாக செய்திகள்

எல்லாமே வரும் தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் கட்சியும் திட்டமிட்டு காய் நகர்த்தலின் காட்சிகள். எனவே மீ டூ...அய்யப்பன் வைரமுத்து...என... தீர்ப்புகளும், ஆள்கையுமாக..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, October 21, 2018

என்று தான் மாறப்போகிறீர்கள் மாற்றப் போகிறீர்கள்:? கவிஞர் தணிகை

என்று தான் மாறப்போகிறீர்கள் மாற்றப் போகிறீர்கள்:? கவிஞர் தணிகை

Related image


அது ஒரு தேச உடைமை ஆக்கப்பட்ட வங்கிதான். எனக்கு ஏன் பழைய தலைமுறை ஏ.டி.எம் கார்ட் வைத்திருக்கிறீர் புதிய இ.எம்.வி கார்ட் பெற்றுக் கொள்ளுங்கள் இன்னும் சில நாட்களில் அதாவது 15. 10.18 உடன் உங்களின் ஏ.டி.எம்.கார்டின் செயல் இயக்கம் நிறுத்தப்படும் என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்கள்.

அது சரிதானா?
ஏனெனில் அந்தக் கார்டின் மதிப்பு 2020 வரை என அவர்கள் கொடுத்த கார்டில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு தொலைபேசினேன். அந்த துணை மேலாளர் அம்மா அந்த செய்தியை உறுதிப்படுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

அது மிகவும் மெதுவாக யானை போல அசைந்து பணி செய்யும் வங்கிப் பிரிவு.

நான் சென்று கார்ட் புதிது தரமுடியுமா எனக் கேட்டபோது எனக்கு முன் ஒரு தெரிந்த நபர் மிக எளிமையாக கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டு சென்றார். பழைய கார்டை நிறுத்தி வைத்து புதிய கார்டை ஓரிரு நாளில் இயங்க வைப்பதாக சொன்னார்கள்.
Related image


அடுத்து எனக்கு விடுமுறை ஆய்த பூஜை விழாக்காலத்தில் சனிக்கிழமை வர அந்த வங்கியை ஏ.டி.எம் கார்ட் வந்தால் கிடைக்குமா என தொலைபேசிவிட்டு சுமார் 10.30 மணி அளவில் சென்றேன் கிடைக்கும் அமருங்கள் பெட்டி ...பாக்ஸ் வரட்டும் என அந்த ஒரு சாளர முறை இயக்க அலுவலர் சொன்னார். முன் சொன்ன துணை முதல்வர் அங்கே பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கையைக் காட்டிவிட்டு அவரது பணியை கவனிக்க ஆரம்பித்தார்

சுமார் 11. மணிக்கு அனைவரும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினர். அதை முடித்து விட்டு உதவியாளர் பெண்ணை அழைத்து அந்தப் பெண் உதவி மேலாளர் மேஜையில் அமர்ந்திருந்தார், அவர் வராததால். வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் அவரை உதவி மேலாளாளராகி விட்டார் என கிண்டல் செய்தார்.
Related image
அவர் வந்து பெட்டியை அதாங்க பாக்ஸ் எடுத்து வைத்ததும், அதிலிருந்து  ஏடிஎம் கார்ட் உள்ள கவர்களை எடுத்து தனது கணினியில் பார்க்க எர்ர்ர் என்றதாம். சற்று அமருங்கள் என என்னைச் சொல்லிவிட்டு அந்த தனி சாளர முறை இயக்க அலுவலர் ...ஒரு இளம்பெண்தான்...உடனே செல்பேசியில் சொல்லி எடுத்துப் பேசினார்.

சற்று நேரத்தில் நிலை சீரடைந்தது.

உடனே அவர் என்னை மறந்து தனது பணியை தொடர ஆரம்பித்தார். அவருக்குத் தெரிந்த நபர்களை எல்லாம் ஏ.டி.எம் கார்ட் வாங்கி மாற்றிக் கொள்ளச் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு வாடிக்கையாளரை அழைத்து பணம் வாங்கிக் கொள்ளச் சொன்னார்.

சென்றது முதல் கவனித்தேன் கணினியில்  புள்ளி விவரங்க்ளை புகுத்திக் கொண்டிருந்தார் சலான், வவுச்சர்களை எல்லாம் பார்த்து...அவர்களுக்கு நேரிடையான வந்திருக்கும் வாடிக்கையாளர்களை விட அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை விட இது போன்ற‌ பணிகள் தாம் முக்கியமாக இருக்கிறது.
Related image
கஸ்டமர் ஈஸ் கிங் இன் அவர் சர்வீஸ் என்றார் அந்த கோமணத்தாத்தா...

நான் மறுபடியும் தானாக சென்று நின்று கொண்டேன். மகனை நேரம் ஆகிறது என்று சொல்லி அனுப்பி விட்டு..

என்னை மறுபடியும் பார்த்து அந்தப் பெண் ஏடிஎம் கவரை எடுத்து எங்கள் பாஸ்புக்கை வாங்கிப் பார்த்து கண்னியில் சில குறிப்பு இட்டுவிட்டு அந்தக் கவருடன் மேலாளரை சென்று பார்க்கவும் என்றார்...சென்று கொடுத்தேன். அவர் கணினியைப் பார்த்து செக் செய்துவிட்டு கேட்டார் எனது கணக்கு வைத்திருக்கும் பேர்களைச் சொன்னேன் அது ஒரு இருவருடைய இணைப்புக் கணக்கு...பின் எண்களை எவரிடமும் சொல்லாதீர், எவராவது கேட்டால் உடனே வங்கியில் வந்து சந்திப்பதாக சொல்லுங்கள் என்றெல்லாம் அறிவுரை செய்துவிட்டு கை எழுத்து மாதிரி அதே போல இருக்கிறதா மாறி இருக்கிறதா ஒரு விண்ணப்பம் வாங்கி இருவர் புகைப்படமும் இணைத்து சாவகாசமாக கைஒப்பங்கள் இட்டு கொண்டு வந்து விடுங்கள் என்றார்...

 எங்கே கை எழுத்து எல்லாம் இட  விடுகிறீர் ?(கை எழுத்துக்குத்தான் வேலையே இல்லையே எல்லாம் ஒரே இணைய டிஜிட்டல் பரிவர்த்தனை தானே?) என்று மேலாளரைக் கேட்டுவிட்டு, ஏய்யா இதுக்குப் போய் ஒன்னரை மணி நேரம் தேவையா? ஆகிவிட்டதே? என்று கேட்காமல் முன்பாக இருந்திருந்தால் அதற்குள் ஓம்புட்ஸ் மேன் விலாசத்தைக் கொடுங்கள் உங்கள் வங்கி பற்றிக் குறிப்பிட்டு எழுத வேண்டும் எனக் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்திருப்பேன்...ஆனால் இப்போது அப்படியெல்லாம் செய்யாமல் மனதுள் சிரித்தபடியே மறுபடியும் அந்தப் பெண்ணிடம் சென்று நிற்க, அவர் என்ன எனக் கேட்க கொடும்மா கை எழுத்துப் போட்டுவிட்டு செல்கிறேன் என ரிஜீஸ்டரை வாங்கி ஏடிஎம் எண், கணக்கு எண் எழுதி  தேதியுடன் கை ஒப்பமிட்டு விட்டு ஒரு ஸ்பெசிமென் விண்ணப்பம் அவர் எழுந்து தேடித் தர சொல்லாமல் விடைபெற்றேன்.. 2020 வரை இருந்தது 2023 வரை நீட்டிக்க இந்த அடிப்படைப் பணி...
Related image
அடுத்து பி.எஸ்.என்.எல்...அலுவலக படையெடுப்பு.

கோவையிலிருந்து குறுஞ்செய்தி அனுப்புகிறார்களாம், பெங்களூரில் வாடிக்கையாளர் மையமாம், ஏதாவது ஒன்று என்றால் உள்ளூர் அலுவலகத்தில் தொடர்பு கொள்வதாம்... வாடிக்கையாளர் மையத்தை முடிந்தவரை கொத்திப் பிடுங்கிவிட்டு மத்திய மந்திரி முதல் மாவட்ட அலுவலர் வரை ஒரு மின்னஞ்சல் ஏற்கென்வே கொடுத்து இருந்ததை காண்பித்துக் கொள்ளாமல்...

ஏன் எனது ரூ. 7 மற்றும் ரூ. 9 பிக் பாக்கெட் அடிக்கப்பட்டன எனக் கேட்டேன் சப் டிவிசனல் எஞ்சீனீருக்கு கடிதம் எழுதித் தரச் சொல்லி வாங்கிக் கொண்டார்கள். அந்த மனிதருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியது வெற்றிகரமாயில்லை என்றே செய்தி வர, அங்கிருந்த பெண் அவர் பங்குக்கு முயன்று கடைசியில் கண்ட கண்ட‌ குறுஞ்செய்தி அனுப்புவதற்கு  எல்லாம் முற்றுப் புள்ளி வைத்தார். ஒரு சாதாரண மனிதருக்கு எந்தவகையிலும் உதவி கரமாக இல்லாத அமைப்பு முறைகள்...கொஞ்சம் கூட ஒரு துளியும் ஒருங்கிணைப்பு இல்லாத அலுவலக முறைகள்...

வீடு வந்த போது மணி 1. 30 மதியம் அன்றைய விடுமுறை அதற்கே சரியாகி இருந்தது...
Related image
இடையில் சில நண்பர்கள் சந்திப்பு: அதில் ஒருவர்: அரசியல் வியாதி, நடிப்பு சினிமா இந்த இரண்டுத் துறையில் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் இந்தியாவில் ஏதாவது பிரபலமாகி செய்ய முடியும்...அதை ஊடகவிரும்பிகளும் பிரபலம் செய்வார்கள்... மற்றபடி என்னதான் செய்தாலும் ஒன்றும்...மேல் வரவழி இல்லை என்றார்...

சசிபெருமாளை நினைத்துக் கொண்டேன்.

வியட்நாமின் ஹோசிமின்னை நினைத்துக் கொண்டேன்

சனிக்கிழமை மதியம் காகங்களுக்கு எள் கலந்த சோறு வைத்துவிட்டு

வந்து கணினியைத் திறந்து இணையப் பார்வையைப் பார்த்தால்... அமிர்தசரஸ் ரயில் மனிதர்கள் மேல் பாய்ந்த செய்தி...இராவண கோபம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.