Wednesday, June 5, 2019

வொய் த ஸ்டோன் ஃபார் டேனி ஃபிசர்? கவிஞர் தணிகை

வொய் த ஸ்டோன் ஃபார் டேனி ஃபிசர்? கவிஞர் தணிகை

ஹெரால்ட் ராபின்ஸ் நாவல்கள் படித்திருக்கிறீர்களா நம்ம ஊர் தமிழ் எழுத்தாளர் சுஜாதா மாதிரி அவர்.  இர்விங் வேலஸ், சிட்னி செல்டன், கமலா மார்கண்டேயா, கமலாதாஸ், ஆர்.கே நாராயண் இப்படி பல ஆங்கில நாவலாசிரியர் இருந்தபோதும் ஒவ்வொருவருக்கும் ஒரு நடை ஸ்டைல் இருக்கும் அதில் ஹெரால்ட் ராபின்ஸ் நடை தனித்துவமானது

படிக்கும்போது அதில் ஒரு த்ரில், கிக் இருந்து கொண்டே இருக்கும், செக்ஸ் கூட இருக்கும் தான் ஆனால் சுஜாதா வார்த்தை சிக்கனமாக எழுதி முடித்து படித்தவர்க்கு யூகிக்க தளம் அமைத்துக் கொடுப்பாரே அப்படி.
Image result for harold robbins
ஒரு காலத்தில் ஆங்கில எழுத்தாளர்களையும் அவர் தம் நூல்களையும் எங்கள் பகுதி நூலகங்களில் தமிழ் நூல்கள் இல்லாமல் இருக்கும்போது மால்கோ மனமகிழ் மன்ற நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தது உண்டு.

அதில் எ ஸ்டோன் ஃபார் டேனி பிசர் என்ற நூலை மறவாதிருக்கக் காரணம் அதில் வரும் டேனி ஒரு அனாதை போன்றவன் தன் வாழ்வை தாமே அமைத்துக் கொள்ள முயல்பவன். அனைவர்க்கும் தீங்கு ஒன்றும் புரிய நினைக்காதவன்.

அவன் காதலியை தேடிக் கொள்வான். அவன் காதலி ஏதோ ஒரு மார்கட்டிங் ஸ்டாலில் பணி புரியும் ஸேல்ஸ் கேர்ள் ஆக இருப்பாள். அவன் அதில் வெறுப்படைந்து ஒன்று சொல்வான் தன்னை நொந்து கொள்வான்...எல்லாருக்கும் யேசு அவரவர் தட்டில் அப்பங்களை வைத்தபோது என் தட்டில் மட்டும் ஏன் கற்களை இட்டார் என்று...
Related image
அது சிலரின் ராசி. அப்படித்தான் வேலை செய்யும் அனைவர்க்கும் ஏதாவது செய்யலாம் என்றால் அது கை கூடி வரும் நன்றாக செய்ய முடியும். அவரவர்க்கு என்றால் அது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும்.

கொள்கைப் பித்து அது இது என்று மனிதர்க்கு எதுவும் தேவையில்லை போலும் என்றால் சேகர் கபூர் காரே வைத்துக் கொள்ள வேண்டாம் என்று மும்பையில் ஆட்டோவில் மட்டுமே பயணம் செய்து வருகிறாராம். அவரிடம் கார் கிடையாதாம். மேலும் ஒவ்வொருவரிடம் ஏன் 20க்கும் மேற்பட்ட கார்கள் என்று கேட்கிறார்

இலஞ்சம் கொடுத்து ஆஸ்கார் சிண்ட்லர் என்பவர் ஆயிரம் பேரை பட்டியலிட்டு ஜெர்மானிய நாஜிப்படையிடமிருந்து யூத அடிமைகளை விடுவித்து அவர்கள் குலம் தழைக்க காப்பற்றியதாக சரித்திரம் சொல்கிறது.

இலஞ்சம் கொடுத்து தமது வாழ்வை செப்பனிட்டுக் கொண்டவர்களில் எனது நண்பர்களிலும் சிலர் இருக்கின்றனர் ஆனாலும் அவர்கள் இலஞ்சம் வாங்காமல் போதிய வரை நிறைய மனிதர்களுக்கு சிறந்த சமூக சேவை ஆற்றி வருகிறார்கள்

அப்படிப் பார்த்தால் இலஞ்சம் என்பது கண்ணதாசன் பாணியில் சொல்லப்போனால் மனிதகுலம் பிறக்கும்போதிருந்து இருக்கும் வரை இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

அப்படிப்பார்த்தால் இலஞ்சம் கொள்வதும் , கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்பதை ஒரு நாடு ஏன் சொல்லிக் கொள்ள வேண்டும் வெறும் வார்த்தைகளுக்காக மட்டும்...
Image result for sujatha rangarajan
அப்படிப் பார்த்தால் கலாம் போன்ற மாமனிதர்கள் எல்லாம் இலஞ்சம் என்பது தமது குடும்பத்திலிருந்து வாங்காதும் கொடுக்காதிருக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என ஏன் சொல்லி இருக்க வேண்டும்?

அது போன்ற கொள்கைப் பிடிப்புகளால் மட்டுமே அதை கடுமையாக கடைப்பிடிப்பார் கடைத்தட்டு மக்களாக வாழ்ந்து வர நேரிடுகிறதோ?பொருளாதாரம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது எனவே மனிதகுலம் அதன் பின்னே ஓடிக் கொண்டே இருக்கிறது...கொள்கை எல்லாம் தேவையில்லை. வாழ்வின் தேவை குடி நீராக, உணவாக, இருப்பிடமாக, ஆடையாக , மருத்துவமாக, கல்வியாக பொருளாதாரத்தின் வேறு வடிவங்களில் கோலோச்ச ஆரம்பித்து விட்டது...

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
By Kannadasan

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, June 2, 2019

முகநூலின் முக மாற்றம்: கவிஞர் தணிகை

முகநூலின் முக மாற்றம்: கவிஞர் தணிகை
Image result for facebook face is changed


முக நூலில் நேற்று உள் புகுந்தேன் வெளி வரவேத் தோன்றவில்லை. நீண்ட நாள் கழித்து பல மாதங்கள் கழித்து ஏன் சில ஆண்டுகள் கழித்து என்றே கூட சொல்லலாம். முக நூல் பக்கம் நான் சென்று. நேற்று ஒரு குறிப்பெடுக்கச் சென்றவன் அசந்து விட்டேன் வெளிவரவேத்தோன்றவில்லை அவ்வளவு மாற்றம்.

எல்லாம் விடீயோ பதிவுகளாக விட்டன. எழுதுவதும் படங்கள் போடுவதுமிலிருந்து முற்றிலும் முக நூல் விடுபட்டு விட்டது என்றாலும் ஒவ்வொரு விடீயோவும் மிகவும் பயனுள்ளதாகவே இருந்தன.

ஒன்று நானறிந்த என் வீட்டில் உள்ள எனக்கு கருத்து ஒத்துப்போக்கும் சோற்றுக் கற்றாழை பற்றிய பதிவு அதன் மருத்துவச் செய்தி முகம், சருமம், முடி போன்றவற்றுக்கு அது எப்படி மருந்தாகிறது என்பது பற்றி..

எனக்கு இப்போது நினைவு உள்ளதை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு பதிவில் ஒரு காவல் துறை ஆய்வாளர் ஆக்ரோஷமாக தலைக்கவசம் அணிந்தே ஆக வேண்டும் என சாலை மறியல் செய்து கற்பிக்கிறார். அவரின் பயணிகள் மீதான அக்கறையை அந்தப் படத்தைப் பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் . சொன்னால அதன் ஆழம் கிடைக்காது.

மற்றொரு பதிவில் அது எடுக்கப்பட்ட படம் என்று தெரிந்தாலுமே அது குடிக்க நீர் கிடைக்காத சிறுவன் ஒருவன் சாக்கடைத்தண்ணீரை எடுத்து குடிக்கும் நிலை. முதலில் ஒரு இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒருவர் அவன் மீது அவன் குடி நீர்க் கேட்டதற்காக முகத்தில் எச்சில் நீரை தாம் குடித்த  நீரை உமிழ்ந்து செல்கிறார். மற்றொரு கடைக்காரரும் அந்த சிறுவனுக்கு உதவ நினைக்கும் ஒரு பத்திரிகையில் எழுதி பணி புரிந்து வரும் பெண்ணை அனுப்பி விட்டு ஒரு வேண்டாத பொருளை விட்டெறிந்து போடா என விரட்டுகிறார் அந்த சிறுவன் அந்தப் பக்கம் அடிக்கடி சென்று வரும் ஊமைதான் என்கிறார்.

தன்னிடம் இருந்த பணத்தை தனது சக ஊழியர் ஒருவருக்கு கொடுத்து அதை மறந்த பெண்ணோ ஏ.டி.எம்மில் சென்று பணம் எடுத்து  வந்து குடிநீர் பாட்டிலுடன் வரும்போது சிறுவன் சாக்கடை நீரை எடுத்து பருகி நிற்கிறான் மற்ற ஒரு வீட்டில் ஒருவன் குடி நீரை வீணாக்கிக் கொண்டிருந்தவன் இதைப் பார்த்து விட்டு வீணாவதை தடுத்து காசுக்கு மற்றும் ஒரு கேன் வேண்டும் எனக் கேட்கிறான். குடி நீர் வியாபாரப் பொருளானதன் விளைவை சித்தரித்துள்ளார்கள். இனி குடி நீரும் காசுள்ளார்க்கே கிடைக்கும் ஒரு வியாபாரப் பொருளாகவே ஆகிவிட்டது.

அடுத்த விடியோ சமையல் செய்து சாப்பிட வேண்டாம், தேங்காய் பழம் போன்றவற்றை உண்டு வாழ்ந்தால் எல்லா நோயும் போய்விடும். என்பது ஆ.வீ அப்பா என்பார் அதில் தமது சகோதரர் அப்படி எழுதி இருந்த தபால் கார்டைப் படித்து அதன் வழி நின்றதால் தனக்கு தொழு நோய் குணமானது என்றும் அது முதல் தனது குடில் அந்த வரலாற்றை எழுதி வருகிறது என்கிறார்
Related image
அதை அடுத்து கண்கள் பார்வை இல்லா நிலையில் பெனோ ஜெபின் என்ற கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடமியின் பெண் தனது அனுபவத்தையும் இன்று  யூனியன் சர்வீஸ் கமிஷன் போவோர்க்கும் அறிவுரை கூறியது...

Related image
உலகின் தலை சிறந்த திறம் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்டிருந்ட பொழுது போவதே தெரியாத காட்சிக் கோர்வை அதில் பல நிகழ்வுகள்... பிரமிப்பூட்டுமபடியாக மனிதரால் செய்ய முடியாதவை எல்லாம் பயிற்சியால் வரும் செய்ய முடியும் என்பதற்கேற்ப சீட்டுக் கட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சீட்டை குவியலில் இருந்து கண்களை மூடிக்கொண்டு கத்தி வீசி எறிந்து அதை எதிரில் நின்றுள்ள மனிதர் மேல் தைக்க வைப்பது அவருக்கு ஊறு விளையாமல், பூட்டுகள் போடப்ப்ட்டு நீரில் மூழ்கியவர் சில நிமிடங்களில் வெளியே வருதல், சிறு பிள்ளைகளின் சாகச நிகழ்வு, விழியற்றவரிம் பாடல் மற்றும் பியானோ வாசிக்கும் வல்லமை இப்படி சொல்லிக் கொண்டே போகுமளவு நீண்டு கொண்டே இருக்கும் காட்சிகள்

எல்லாவற்றையும் விட மாதவிடாய்ப்பருவத்தில் பெண்களுக்குத் தேவையான பிறப்புறுப்பில் செருகி அந்த எச்சத்தை தேக்கிக் கொள்ளும் குப்பி இது புதிய கண்டுபிடிப்பாம், சேனிட்டரி நாப்கின் தொல்லையும் அதை அழிக்கும் வேலையும் இனி இல்லை. அதை எப்படி செருகி வைத்துக் கொள்வது அது எப்படி சிறப்பாக உதவுகிறது என்பது பற்றி மகப்பேறு மருத்துவர் அருணா முரளிதரன் விளக்குகிறார். அரிய காலத்த்துக்குத் தேவையான அதிலும் பெண்களுக்குத் தேவைப்படும் அதி முக்கியமான திரைக்காட்சி அதில் அந்த மருத்துவர் 4 மணி முதல் 6 மணி வரை அதை உள் வைத்து அதன் பின் அதை எப்படி வெளியில் எடுத்து சுத்தப்படுத்தி மறுபடியும் உபயோகிப்பது என அறிவியல் முறைப்படி அழகாக விளக்குகிறார் இது ஒன்று போதுமாம் சுமார் 7 ஆண்டுவரை உபயோகிக்கலாமாம் விலையோ குறைவு. சேனிட்டரி நாப்கின் செலவை சிக்கலை ஒப்பிட்டுப்  பார்க்கும்போது இது பெண்களுக்கே கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.பின்னர் இதைப்பற்றி அறிந்து கொண்டேன் இது 1930களிலேயே அறிமுகமான ஒன்றுதானாம் எனக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது. தெளிவாக புரியும்படி மருத்துவர் விளக்கி இருந்தார்.
Image result for menstruation cupImage result for menstruation cup


Image result for menstruation cup


இப்படி எத்தனை எத்தனை செய்திகள், அறிவியல், நையாண்டி, கேலிக்கை, அரசியல் சார்ந்த பதிவுகள் ஒன்னும் சொல்லிக்க முடியலை போங்க...

ஜக்கி வேறு அவர் பங்குக்கு இறந்த உடலை எப்படி சில குருக்கள் உயிர் கொடுத்து எழுந்து நடக்க வைத்தார் என்றும், எப்படி ஒரு சிட்டுக்குருவி கொஞ்ச நேரம் சூரிய ரேகையில் தொடு சிகிச்சை மூலம் உயிர் பெற்று பறந்து சென்று மறுபடியும் விழுந்து இறக்கிறது என்றும் அது மனிதரிலும் சாத்தியமானது எப்படி என்றும் மனிதரின் இறுதி நிலை அதன் உடல் இயக்கம் நிற்காது பற்றியும் விரல் நகங்கள் முடி வளர்ச்சி, பாதத்தின் பெருவிரல் இரண்டையும் இணைத்துக் கட்டல், எரிப்பதை விட புதைப்பதன் தேவை எனவும்  அவர்களின் ஈஷா அந்த அந்திமச் சடங்கை நல்ல முறையில் செய்ய ஆர்வமாக இருக்கிறது என்றும் அதைக் காரணம் காட்டி பணம் பறிக்கும் கும்பல் பற்றியும் பேசினார். தெரஸாவுக்கு அப்புறம், காசிக்கு அப்புறம் தெளிவாக இறுதிச் சடங்கு பற்றி அதில் சேவை பற்றி பேசுகிறார் இது போல ஒரு தமிழ் இளைஞர் கோவையில் அல்லது நான் மறந்துவிட்ட ஏதோ ஒரு ஊரில் அனாதைப்  பிணங்கள் தேடிச் சென்று இறுதிச் சடங்கு செய்வதாகவும் நாம் கடந்து வந்த பாதையில் வந்த செய்தி இப்போது நினைவுக்கு வருகிறது.

நித்யானந்தா வேறு ரஞ்சிதாவுடன் தத்துவம் பேசினார், கும்ப மேளா சென்ற கதை சொன்னார், ரஞ்சிதா நித்யானந்தாவின் சிஷ்யை என்றார். காவல் துறை நெருக்கியதையும் பத்து இலட்சம் தரவில்லை எனில் மேலும் பல வேலைகள் வெளிவரும் என்றார்கள் என்று மிரட்டியதை எல்லாம் பதிவேற்றி இருந்தார்கள். காலையில் முதலில் எட்டு மணி முதல் தன்னை நாடி வருவார்க்கு காட்சி கொடுத்து ஆலோசனை சொல்வதாகவும் அது மணி மதியம் மூன்றானாலும் அவசியம் தொடரும் என்றும் நித்யானந்தா கூறினார்.comedy ...


Image result for facebook face is changed
மேலும் எட்டாம் வகுப்பே படித்த ஒரு மூதாட்டி தனது மகனிடம் கற்றுக் கொண்டதை வைத்து வெளி நாட்டுக் கம்பெனிகளில் பணி பிடித்து இங்கிருந்து  பணி செய்து நிறைய பேருக்கு உதவி வருகிறார் என்றும்...

இப்படி ஒரு மூளைக்குள் திணிக்க முடியாத அளவு முக நூலின் பக்கங்கள் மாறி இருந்தன. என்னால் அதில் இருந்து வெளிப்படவே முடியவில்லை. உடலுக்கு ஊறு வந்து விடுமோ என்றும் எங்கள் ஊரில் த.நா.மி.வா சொல்லாத மின்வெட்டை அனுசரிப்பதாலும் அதிலிருந்து வெளிவந்தேன்.
Related image
இப்போதெல்லாம் பெண்களும் ஆண்களும் முகநூல் பெட்டியில் பேசிக்கொள்ளக் கூட அஞ்சுவதையும் கவனித்தேன். அப்படி எல்லாம் யாருமே பேசுவது இல்லை போலும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் முன்பு சுலபமாக பேசிக் கொண்டிருந்ததை பொள்ளாச்சி பாய்ஸ் போன்றோர் முடித்துக் கட்டி விட்டார்கள் போலும்...வாழ்க முக நூல் வளர்க அதன் பிணி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

LUCIFER


லூசிவர் படம் பார்த்தீர்களா? கவிஞர் தணிகை


Image result for lucifer movie car

இந்தப் படம் நன்றாக இருக்கிறது என மகன் சில வாரங்களுக்கும் முன்பே கூறி இருந்தார். கடந்த வாரம் பார்த்தேன். பார்க்காதிருந்தால் படம் பார்க்கும் விருப்பம் உள்ளோர் பார்க்கலாம் பார்க்க வேண்டிய படம்தான்.

க்யூரேசி அப்ரஹாம் என்னும் போதை மருந்தை உலகளாவிய அளவில் அழிக்கப் போராடிய ஒரு மாவீரன் கதையையும் இதில் கொண்டு வந்து சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் அவன் மாபியா கூட்டத்தில் தலைவனாக இருப்பவன் என்றும் கதையை அமைத்திருக்கிறார்கள்.

ப்ருத்விராஜ் சுகுமாரன் அதாங்க மொழி படக் கதாநாயகன் இந்த 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த படத்தின் இயக்குனர். படம் பிரான்ஸ் என்று ஆரம்பித்து ரஷ்யாவில் முடிவடைகிறது.

இடையே நடப்பதெல்லாம் கேரளத்து அரசியல் சார்ந்த விடயங்கள்தாம்.

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம். ஆனால் எல்லாம் லூசிவர் என்னும் ஸ்டீபனை மையப்படுத்தியே நகரும் படம் துளியும் நேரம் போவதறியாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. மோகன்லால் அசத்தி இருக்க விவேக் ஓப்ராயோ அழகிய ஆனால் சொந்த தனது மனைவி வழிப் பிறந்த மகளையே பெண்டாள நினைக்கும் அனைவரும் வெறுக்கத் தக்க வில்லனாக. ஆனால் இவர் சுனாமி வந்த போது எந்த நடிகரும் செய்யாத சேவையை கடற்கரை ஓரத்தில்  those who are affected by tsunami தேவையானவர்க்கு செய்தார் என்பது கதையல்ல நடிப்பல்ல.
 Image result for lucifer malayalam movie character poster
லூசிபர் என்றால் சாத்தான் அல்லது சைத்தான் என்ற பொருள் .இதில் யாரை சைத்தான் என்கிறார்கள் எனத் தெரியவில்லை பாபி என்கிற பிமல்நாயரை அதாவது விவேக் ஓப்ராய் ஏற்ற பாத்திரத்தையா அல்லது ஸ்டீபன் நெடும்பள்ளி என்னும் க்யூரேசி அப்ரஹாமையா என்பது எனக்குப் புரியவில்லை. ஏனெனில் ஸ்டீபன் ட்ரக் மாபியா போதை மருந்துக் கூட்டத்தை துவம்சம் செய்தவராக வருகிறார். விவேக் ஓப்ராய் போதை மருந்தை இந்தியாவில் தனது மாநிலத்தில் ஊடுருவ விட்டு பல நூறுகோடிகளை சம்பாதிக்க திட்டமிடுகிறார் மும்பை கும்பலுடன் சேர்ந்து வெளிநாட்டினருடன் வியாபாரம் நடத்தி...அது மட்டுமல்ல இவர் தனது மாமனாரான ராமதாஸை எவரும் அறியாமல் கொலை செய்து இயற்கை மரணம் என நம்ப வைத்து அவரது மகன் ஜதின் ராமதாஸை கைப்பாவையாகக் கொண்டு தாம் விரும்புவதை சாதிக்க நினைக்கும் உண்மையான சைத்தானாக இருக்கிறார். சாத்தானாகத் திரிகிறார். அழகிய சாத்தானாக மிடுக்கும் அழகும் குறையாமல்.
 Image result for lucifer malayalam movie character poster
தனது மனைவிக்குத் தெரியாமல் அவரது மகளை பயமுறுத்தி தனது காம இச்சைக்கு பழியாக்க நினைக்கிறார். அதற்கு போதை  மருந்தும் போதை மருந்து கும்பலும் பயன்படுகிறது.

ராமதாஸ் நெடும்பள்ளி ஒரு நல்ல அரசியல் தலைவராக இருந்து வளர்ந்து மறைந்து போக அவரது வெளித் தெரியாத மகனான ஸ்டீபன் எப்படி அவரது சகோதரி சகோதர்க்கு நன்மை செய்து மாபியா கூட்டத்தை அழிக்கும் பெரும் சக்தியாக இருக்கிறார் என்று காட்சிப்படுத்துவதே படம்.

ராமதாஸ் நெடும்பள்ளி- வெளித் தெரியாத மகனான போதும் சரியான வாரிசாக நின்று இவரே அனைவர்க்கும் நல்லது செய்கிறார். நல்ல கம்பீரமான பாத்திரப் புனைவு .அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. மோகன்லாலையும் பிரித்விராஜையும் பாராட்டியே ஆக வேண்டும்.

மஞ்சு வாரியருக்கு பெரிய பாராட்டுமளவு பங்கு இல்லை என்றாலும் கொடுத்த  ஸ்பேசை பங்கீட்டை நல்ல படியாக பங்கமின்றி முடித்திருக்கிறார்.

அன்டனி பெரும்பாவூர் ஒரு நல்ல படத்தையும் தயாரித்து இலாபமும் ஈட்டி இருக்கிறார். இந்தப் படம் 2012ல் இருந்து எடுப்பதாக பேசப்படு எடுக்கப்பட்டு கடந்த மார்ச் மாத வாக்கில் 2019 தான் வெளியாகி இருக்கிறது
 மொத்தத்தில் சாத்தான் அல்லது சைத்தான் என்பது போதை மருந்தைத்தான். இதை மாணவ மாணவியர் பயன்படுத்தி அழிந்து விடுகிறார்கள். இந்த போதை மருந்து உயிர்க்கொல்லி உலகளாவிய ஒரு பேரழிவு வியாபாரம். ஒரு பேரழிவு விவகாரம் இது அரசியலுக்கு எப்படித் துணை செய்திருக்கிறது துணை செய்கிறது என கதை சார்ந்து விளக்கி உள்ளார்கள் இந்தப் படக்குழுவினர்.


இந்தப் படக்குழுவினர் சமுதாய அக்கறையும் விழிப்புணர்வையும் பார்ப்போரிடை இளைஞர்களிடை ஏற்பட எடுத்திருப்பதால் இதற்கு டபுள் ஓகே சொல்லலாம். நல்ல என்டர்டெயின் மென்ட் மூவீ வித் குட் சப்ஜெக்ட்.

எனக்குத் தெரிந்து இந்த போதை மருந்து விவகாரம் கோவை சார்ந்த கல்லூரிகளில் பிரபலம் என்றும் ஏன் பிரபலமான பெரும்பணக்கார வாரிசுகள் படிக்கும் பள்ளிகளில் கூட இருக்கிறது என்பதும் நானறிந்த ஒரு மாணவன் கூட இதனால் பாதிப்படைந்துள்ளான் என்பதும், இது சேலம் சார்ந்த பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களிடை இருக்கக் கூடும் என்பது அங்கிங்கு எனாதபடி நீக்கமற நிறைந்திருக்கும் இயற்கையைப் போல இது ஊடுருவி இளம் தலைமுறைகளை அழிக்கும் பெரும் அழிவு சக்தியான இதை நாம் கருவறுக்காவிட்டால் இது மனிதகுலத்தை கருவறுத்துவிடும் என்பதும் உண்மை

Image result for lal lucifer film
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

இந்தப் படத்தின் பதிவை ஒரு நல்ல நானறிந்த இந்தப் பதிவுகளைப் படித்து வரும் முகம் வாய் மற்றும் தாடை இயல் பிரிவைச் சார்ந்த பல் மருத்துவர் மனோஜ் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.