நவி என்கிற நவநீதம் பிள்ளை 85: கவிஞர் தணிகை
நோபெல் நீதி செய்து விட்டது. வாழ்த்துகள் நோபெல் கமிட்டி மற்றும் நவி அம்மையாருக்கு!
நல்ல வேளை ஒபாமா நோபெல் வாங்கி விட்டாரே என அமெரிக்க குடியரசுத் தலைவரின் புலம்பலுக்குப் பணியாது 8 போரை நிறுத்தினேன், 9 பேருக்கு இழப்பீடு செய்தேன் என்ற வாய்வழிப் பேச்சுக்கெலாம் மசியாது,
நார்வே ஓஸ்லாவில் நோபெல் கமிட்டி சிறந்த ஒரு செயலை மேற்கொண்டமைக்காக அதிலும் ஒரு தமிழ் வம்சாவளி உண்மையான ஒரு காந்திய மானுடம் நவி என்கிற நவநீதம் பிள்ளை என்கிற மாபெரும் மானுடத்துக்கு இந்த ஆண்டு நோபெல் பரிசு அளித்து அவருக்கும் தமக்கும் பெருமை செய்து கொண்ட நோபெல் கமிட்டி மற்றும் நவ நீதம் பிள்ளை ஆகியோரை ஒரு காந்தியம் அறிந்தவர் என்ற முறையில் இந்த வலைப்பூவின் மூலம் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏன் எனில் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்க வாழ்வில் இந்த நேடால் என்ற இடம் முக்கிய பங்கு பெற்றிருக்கிறது, அந்த நேடால் என்ற நகரின் ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று வாழ்வெலாம் கடைத் தட்டு மக்களுக்கான உரிமையை உறுதி செய்ததிலும், நிற வேற்றுமையை அகற்ற பாடு பட்டதிலும், நெல்சன் மாண்டேலா போன்ற காந்தியவாதிக்கும், மற்றும் அந்நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க பாடுபட்டதிலும், அகில உலக நீதிக்கு அரும் பாடுபட்டதிலும் அம்மணி பட்டொளி வீசி பறக்கிறார்.
வாழும் போதே கிடைத்த அரும் பரிசு இது. காந்தியத்துக்கு கிடைத்த வெற்றி இது .
மகாத்மாவுக்கு கிடைக்காத பேறு இது போன்று அவர்களின் வழித் தோன்றல்களுக்கு கிடைக்கிறது என்பதைக் காணும்போது உண்மையாகவே காந்தியம் படித்து தேறி அதில் பரிசு பெற்றவர் என்ற முறையில் அடியேனுக்கும் மிக்க மகிழ்வு.
இதே தென்னாப்பிரிக்க நிற வெறி எதிர்ப்பு போராட்டத்தின் போதுதான் வள்ளியம்மை என்ற 16 வயது தமிழ்ப்பெண் உயிர் நீத்து காந்தியத்துக்கு முதல் வேரானார் என்பதெல்லாம் இதனுடன் தொடர்பில் இருக்கிற வரலாற்று உண்மைகள்.இவருக்கு 85 ஆம் வயதில் வந்து இந்த பெருமை சேர்ந்திருக்கிறது வாழ்க பல்லாண்டு இது பல நூறண்டு பேசப்படும்.பேசப்படட்டும்
தமிழுக்கும் காந்தியத்துக்கும் எப்போதும் பெரும் தொடர்பு உண்டு.
வாழ்த்துகள் நெஞ்சார்ந்த கை குலுக்கல்கள்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:
Post a Comment