Monday, March 23, 2026

MAR.23.2026 பிறந்த நாள் கொண்டாட்டம் இரத்து: கவிஞர் தணிகை

 பிறந்த நாள் கொண்டாட்டம் இரத்து: கவிஞர் தணிகை


மார்ச்:22 உலக தண்ணீர் தினம், மார்ச்:23 பகத்சிங் நினைவு தினம் மற்றும் தணிகை தினம்.



ஒன்றுமறியா அப்பாவிக் குழ‌ந்தைகள் ஈரான் பள்ளியில் கொன்று குவிக்கப் பட்ட ஈனச் செயல் புரிந்த மனித குலத்தின் அற்ப நிகழ்வுகள், உலகே அபாய விளைவுகள் சந்தித்து வரும் வேளையில் தனி மனித கொண்டாட்டத்திற்கு ஒரு தேவையுமே இருப்பதாகத் தெரியவில்லை.


அட இத பார்ரா, கவிஞர் (தணிகை) கூட தமது 65 ஆம் வயதில் அடி எடுத்து விட்டாரே என்று அவரே ஆச்சரியப் பட வேண்டியதிருக்கிறது ஏன் எனில் அது ஒரு தனிப்பட்ட விசை, சமூகத்தின் நல்லொழுக்க நல்வழிக்கு வித்திடும் விதை.

வணங்குவது, நன்றி தெரிவிப்பது, சிறப்பு செய்வது யாவுமே எளிமையே

இந்த நாளின் ஒரு சிறு கூறாக பிறப்பித்த சுப்ரமணிய (முதலியார்) ஊருக்குள் அப்படிச் சொல்லித்தான் வழக்கம் அதை சாதியக் குறியீடாக கொள்ளத் தேவையில்லை, அவருக்கும் தெய்வானை(தெவானை) அம்மாவுக்கும் இந்த நாளில் அஞ்சலி மற்றும் நன்றி செலுத்த வேண்டியிருப்பதை குறியிடவே இந்தப் பதிவு.மற்றபடி மேற்கத்திய கலாச்சார மூழ்குதலில் கேக் வெட்டி எப்போதுமே கொண்டாடிய நிகழ்வெல்லாம் அவரிடம் இல்லை, அவர் விரும்புவதில்லை. தந்தை தமது 65 ஆம் வயதில் உயிர் நீத்து இயற்கை எய்த, தாயுடன் அவர் அதன் பின் 20 ஆண்டு வாழ்ந்து அதன் பின் 2006ல் அவரும் விடைபெற்றுச் சென்று விட‌ அதன் பின்கூட 20 ஆண்டுகள் ஓடி விட்டன. எனவே குறிப்பிடப் பட வேண்டிய வாழ்வு அவர் வாழ்வில் 1986,2006,இப்போது 2026.


இந்த நாளில் உலகு மீண்டும் அமைதி அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தமது 42 ஆம்  ஆண்டு தியான வாழ்வில் இதுவும் ஒரு நாள் அவ்வளவே என்று முடித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. நல் மழைப் பொழிவு இருக்கட்டும், புவியெலாம் விளைச்சல் பெருகி இந்தக் கொடும்பாவிகள் எல்லாம் சாகட்டும் கொல்லை/கொள்ளை மழை பேயட்டும் என்று வேண்டி விடை பெற வேண்டிய தருணத்தில் உலகெலாம் எல்லா பொருட்களும் விலை ஏறி மக்களுக்கு கடும் பஞ்சத்தை இந்த நாசகாரப் பேய்கள் ஏற்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் மக்களுக்கு மத்தியில் நிலவுவதை இயற்கை சீர் செய்யும் என்று நம்புவோமாக!


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


2 comments:

  1. நண்பர் தணிகை.. என்ன தான் அது இது என்று நீங்கள் தணிகை செய்து சொன்னாலும்.... உங்களுக்கு எங்களின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..வாழ்க பல்லாண்டு வாழ்க by வசந்த்....02.15.hrs 23.06.2026

    ReplyDelete
  2. நன்றி வசந்தக்குமார். வசந்தம் வந்து விட்டது. பூக்கள் திரும்ப மலரும். இளமை சென்றுவிட்டது அந்த நாட்கள் இனி திரும்ப வரா.(என்னதான் உள்ளே இளமையாய் இருந்தாலும் உண்மை...)பூக்களுக்கு பதிலாக குண்டுகள் பரிசளித்து அந்த பூம்பிஞ்சுகளை பூமியிலிருந்து அனுப்பி விட்ட இந்த ஈனர்களின் கொடும் செயல் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது...அடிவயிற்றை மனதை ஏதோ பிசைகிறது...நம்மால் என்ன செய்ய முடிகிறது, எதுவும் செய்ய முடியவில்லையே என....

    ReplyDelete