ஆனந்த விகடனில் நாகசந்திரனின் மேட்டூர் அணை ஓசை: கவிஞர் தணிகை
அன்பு நண்பர் தோழர் நாகு என பெயர் சுருக்கம் உடைய நாகசந்திரன் மேட்டூரை சொந்த ஊராக கொண்டவர். அந்த தாம் பிறந்த ஊருக்கு தமது வாழ்நாளின் அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணி மிக்க முயற்சியுடன் சென்னை ஆவணக் காப்பகத்தில் எல்லாம் தேடல் நடத்தி ஒரு தொடரை அணை ஓசை என வியழக்கிழமைகளில் வெளிவருமாறு பல வாரங்களாக செய்து வருகிறார், நல்ல புள்ளி விவரங்கள், கட்டுரை மிக முக்கியமான ஆவணமாகும் மேட்டூர் அணை அல்லது ஸ்டேன்லி அணை பற்றி தேடல் நடத்துவோர்க்கு எதிர்காலத்தில்.
ஆனந்த விகடனின் இணையப் பக்கத்தில் அந்தப் பதிவு பெறும் இடத்திற்கு சென்று தமது கருத்துகளை பதிவு செய்யச் சொல்லுகிறார். ஆனால் பாருங்கள் நாகு அதில் சற்று சிரமம் இருப்பதாக எனக்குப் பட்டது எனவே இந்தப் பதிவு.
இவர் கல்லூரி கால நண்பர், எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லா மனிதர். நெசவுத் தொழிலை அடிப்படையாக வைத்த குடும்பத்தின் வாரிசு இப்போது இந்த நூல்களையும் நெய்து பார்க்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே சில நூல்களையும் செய்துள்ளார்.
கல்கியின் அலை ஓசை போல இந்த நாகுவின் அணை ஓசையும் என்றும் சுவாசிக்கட்டும் புகழ் பெறட்டும்!
வாழ்த்துகள் அன்பரே. ஆசிகள்.வாழ்க வளர்க.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment