Monday, March 16, 2026

மீச்சிறு உயிர்களும் மாபெரும் சர்வதேச சர்வாதிகாரமும்: கவிஞர் தணிகை

 மீச்சிறு உயிர்களும் மாபெரும் சர்வதேச சர்வாதிகாரமும்: கவிஞர் தணிகை



மருத்துவர் P. வெள்ளையன் R.H.M.P ஒரு ஹோமியோபதி பதிவு பெற்ற மருத்துவர், பதிவு எண்:13406. தலையெலாம் வெள்ளை நரை உடன் குழந்தை உள்ளம் அவர் இந்தக் கீழ் காணும் ஒரு பாடலை பதிவு செய்ய வேண்டுகோள் வைத்தார் அவருக்காக இந்தப் பதிவு:


எறும்புகளின் ஓய்வில்லா உழைப்பு, அதன் ஒற்றுமை மற்றும் மனிதர்களின் இன்றைய நிலை பற்றிய இந்தப் பாடலை எழுதியதாக சொல்கிறார்.


சின்ன சின்ன எறும்பு(ம்)கூட 

சும்மா சும்மா இருக்குதா?

அது சோம்பேறியா தூங்கிக் கிடந்து

பொழுதை வீணாக் கழிக்கிதா?   (சின்ன)


தேடித் தேடி இறையைத் தேடி

ஓடி ஓடி அலையிது...

கெடைச்ச இறையைப் பத்திரமா

தன் இருப்பிடத்தில் சேர்த்துதா(ன்)

ஒன்னு சேர்ந்து தின்னுது

ஒற்றுமையா வாழுது.... மனித‌

இனத்தில் பேதம் வந்து....இன்னைக்கு

அது மாறிப் போச்சே பாரது    ( சின்ன)


இம்மாம் பெரிய உடம்பிருந்தும்

சும்மாத் தின்னு கொழுக்கறையே‍   அட

கொழுத்த உடம்பை இளைக்க வைக்க 

மருந்து இப்ப எடுக்கறையே!


மழை வெள்ளம் வரும் பின்னே

தெரிஞ்சு அதை முன்னே...எறும்புகள்

தம் சின்னஞ்சிறு செல்லங்களை

மேடான இடம்தேடி அங்கே பாதுகாப்பு பண்ணுது

இந்த எச்சரிக்கை இல்லா மனித வாழ்வில்

எத்தனையோ துன்பம் நேருது  (சின்ன)

    மரு. வெள்ளையன் R.H.M.P


வல்லரசுகள் எப்போதும் ஏதாவதொரு வடிவத்தில் சர்வாதிகாரம் செய்து வருகின்றன உலகையே ஆட்டி வைக்கின்றன. இங்கிலாந்து ஏகாதிபத்தியம், ஜெர்மன்ஹிட்லர்+இத்தாலி முசோலினி, அதன் பின் அமெரிக்கா ஏன் சீனாகூட கொரானாக் காலத்தில்...இப்போது மறுபடியும் அமெரிக்கா...உலகிலேயே அமெரிக்காதான் அதிக எண்ணெய் தயாரிப்பு முதல் நாடாம். இந்தியா  எண்ணெய் நுகர்வில் முதல் நாடு. எங்கே எண்ணெய் வாங்க வேண்டும் என்று அண்ணன் தான் தீர்மானிக்கிறான். அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்து,கனடா,வெனிசுலா,(ஈராக்), ஈரான்,இப்படி எல்லா நாடுகளையும் மிரட்டி வருவது பற்றி அச்சுறுத்துவது பற்றி ஆளுகைக்கு கீழ் கொண்டு வருவது பற்றி எந்த நாடும் தலைவரும் ஐ.நாவும் வாய் திறக்க மறுக்கின்றன.அடி பணிய மறுத்த ஸ்வீடன்,மற்றும் யூசுப் மலாலா நோபெல் பெற்ற சிறுமி விதி விலக்கு.


 இந்திய தமிழ் நாட்டில் டொனல்ட் ட்ரம்புக்கு யாரோ ஒரு நபர் ஒரு கோவில் கட்டியதாக எப்போதோ படித்த நினைவு.செய்தி கடந்த நினைவு .அவர் அவரது நாட்டிலேயே பாலியல் புகாருக்காக‌ தண்டிக்கப் பட்டதோடு மட்டுமல்ல இழப்பீடையும் வழங்கி வழக்கிலிருந்து வெளி வந்தவர் என்பது அனைவரும் ஏன் உலகறிந்ததே. அவர் நோபெல் கேட்டார் ஏன் கொடுக்கப் பட வில்லை என்பதை உங்கள் வசமே விட்டு வைக்கிறேன்.எப்ஸ்டீன் விவகாரத்தில் பில்கேட்ஸ் தமது அறக்கட்டளை ஊழியர்களிடம் பொது மன்னிப்பு கோரிய செய்திகளும் குறிப்பிடத் தக்கதே.


எவர் எந்த இடத்தில் இருந்த போதும் அவரவர் தனிப் பட்ட குணாதிசயங்களே அவர் பேர் சொல்லும்


ஆப்ரஹாம் லிங்கனே இந்த மக்களாட்சி என்றால் என்ன என்பதை மொழிந்தார், கென்னடி போன்றோரும் கூட உயிர்த் தியாகம் செய்தனர். அந்த நாடு இந்திய நாட்டுக்கும் முன்பே இரு நூற்றாண்டுக்கும் முன்பே இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றிருந்தது.


மக்களாட்சி, ஜனநாயகம் , மக்களால் மக்களுக்காக, மக்களுடைய ஆட்சி என்று சொல்லப் படுவது பற்றிய முரண்கள் உலகெங்கும் எங்கெங்கும்...



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

p.s:செவ்வாய்,நிலா மட்டுமல்ல எத்தனை கிரகத்தில் கால் வைத்தாலும் வாழ்க்கை நடத்தினாலும் அதை நாசம் பண்ணிவிடவேத் துடித்துக் கொண்டிருக்கும் மனித இனத்தின் பேராசை.


 


No comments:

Post a Comment