Thursday, March 5, 2026

கூட்டணி தர்மமே வெல்லும் என்ற உணர்வு இருந்திருக்கிறது: கவிஞர் தணிகை

 கூட்டணி தர்மமே வெல்லும் என்ற உணர்வு இருந்திருக்கிறது: கவிஞர் தணிகை



அ.தி.மு.க வாக்கு வங்கி தி.மு.க வாக்கு வங்கியை விட அதிகம் என்று உலகறியும் இதை நன்கு உணர்ந்திருக்கும் தற்போதைய தமிழக முதல்வரும் தி.மு.க‌ கட்சி தலைவருமானவர் கூட்டணியை இறுதியாக உறுதியாக கட்டி அமைத்திருக்கிறார். கூட்டணி தர்மமே வெல்லும் என்று தந்தை மு.கவுக்கும் அவரது குடும்பத்துக்கும் தெரிந்து அமைந்து இருக்கும் போதெல்லாம் அவர்கள் வென்றிருக்கிறார்கள்


அ.தி.மு.க தலைவர் தமது கட்சித் தலைமையைத் தக்க வைத்துக் கொண்டாலே போதும் என்ற நிலையில் அனைவரையும் புறம் தள்ளி இருக்கிறார்.அவருக்கு நிர்பந்தங்கள் பல.


சரித்திரமே தி.மு.க ஆட்சிக்கட்டில் இருந்து மறுமுறை ஆட்சிக்கு திரும்ப வந்தது கிடையாது என த.வெ.க தலைவர் பேசி இருக்கும் போதும் சரித்திரத்தை ஒருவேளை இவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம்  சென்றிணைந்திருந்தால் சோதித்திருக்கலாம்.


ஆனால் இப்போது எதுவும் ஆகும் போது சரித்திரம் ஆகி விடும்.அதுவும் ஆகும் ....


அரசியல் என்பது ஒவ்வொரு மனித, குடும்ப அமைப்புகளிலும் உட்புகுந்து விளையாடும் ஒரு கூறு.அல்லது அம்சம். வேண்டாம் என்று எவருமே ஒதுக்கி விட முடியாது.என்னதான் அது சாக்கடை அதில் இறங்கினால் தாமே சுத்தம் செய்ய முடியும், என்பார் முன் எல்லாம், இப்போது இறங்கினாலும் சுத்தம் செய்ய முடியாது மூழ்கி நீர்க்குமிழி முட்டை விட்டு மூழ்கிப் போக வேண்டியதுதான் என்றாலும்...


மக்களாட்சி, வாக்கு அரசியல் என்ற பேரில் ஒரு தனி மனிதனின் அகங்காரம் உலகையே ஆட்டி வைத்து வருகிறது, எவருமே ஏதுமே செய்ய முடியவில்லை. யூசுப் மலாலா என்ற நோபெல் பெற்ற சிறுமிகூட வெகுண்டெழுந்து பள்ளிக் குழந்தைகள் அழிப்பு எல்லாம் எந்த அரசியல் என்று கேட்டிருக்கிறார்,


ஸ்பெயின் ஒரு நாடுதான் துணிச்சலுடன் அமெரிக்க இராணுவ விமான தளமாக தம் நாட்டை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி இருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் சென்று நிறுத்துவோம்  என்ன வேண்டுமானாலும் செய்வோம் என ஒரு அரக்கத்தனமான மூர்க்கத் தனமான யாரும் எதிர்த்து கேட்க முடியாத பேச்சு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.


இந்தியாவிடம் 10 நாளுக்கு மட்டுமே எண்ணெய் இருக்கிறதாம்,

அமெரிக்காவிடமோ 10 நாளுக்குத்தான் ஏவுகணை இருக்கிறதாம்...பெண்டகன் அறிக்கை

சீனாவும் ரஷியாவும் ஈரானுடன் கை கோர்த்தால் உலப் போராகக் கூட மாறும் அபாயம் இருக்கிறது...


அமெரிக்க இராணுவத் தளங்களை குறி வைத்து ஈரான் தாக்கி வருவது மக்கள் உயிர்களைப் பற்றிய கருத்துடன் செயல்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


எனது இந்த வலைப்பூவை சொந்த நாட்டை விட அதிகம் வெளி நாட்டில் வசிக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் படிக்கிறது என்பதால் எதையாவது எழுதத்தான் வேண்டும் என்று எனக்கும் நிர்பந்தம்.


No comments:

Post a Comment