வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்
பவித்ரா B.E;B.Ed, K..கிரிநாத் ME
மென் பொறியாளர்
IT ANALYST TCS
SILICON VALLEY BANK BANGALORE
நாள்: வெள்ளி 09.09. 2022:காலை 6 மணி முதல் 7.25
பிரசன்ன விநாயகர் திருக்கோயில்
ஜி.வி. கலையரங்க வரவேற்பு உடுமலைப் பேட்டை
தாரமங்களம் செங்குந்தர் திருமண மண்டப வரவேற்பு
: 17.09.22 நண்பகல் 12 மணி முதல் 15 வரை
இன்னும் மாறாமல் இருக்கும்
இந்த வீட்டில் பிறந்த
பெண்குழந்தை ஹேமலதா
பெற்ற இரு செல்வங்களுள்
மூத்தவள் பவித்ரா.
மாவட்ட அளவில் கல்வியில்
முன்னிருந்து பூத்தவள்
மதிப்பெண் அதிகம் பெற்ற
மதிப் பெண்
கலாம் கால் பதித்த
எம்.ஐ.டியில்
மெரிட்டில் இடம் பெற்று
பொறியியல் படித்தவர்
K.கிரிநாத்
கரம் பிடிக்கும் இந்நாளில்
நினைவுகளின் ஊர்வலம்
நிழலின் பயணம்
நிஜங்களின் பா(ர்)வை
திருமணத்தில் கலந்து கொள்ளாமைக்கு
இடும் வாய்ப்பந்தலா இது?
இல்லை வாய்ப்பு பந்தல்!
ஹேமலதா கரம் பிடித்த
குட்டி (எ) பழனிவேல்
எனது இளைய சகோதரர்
என்பதை விட
கயிலாய நாதர் ஆலயத்தில்
நான் எனது கவிதையை விவரிக்க
கேட்டிருந்த சிறுவர்
இன்று ஊர் போற்றும்
நல்லாசிரியர்
தம்பதிகள்
நல்வாழ்வின்
அடையாளம்.
மகன் வாங்கிய பரிசுத் தட்டிலும்
இவர்கள் வழங்கிய அன்புத் தட்டிலும்
இன்று உணவருந்துகிறேன்.
தம்பதிகள்
வாழ்வாங்கு வாழ
குடும்பத்துடன் வாழ்த்துகிறேன்.
கவிஞர் தணிகை
த.சண்முகவடிவு
த.க.ரா.சு. மணியம்.
No comments:
Post a Comment