Wednesday, September 21, 2022

பல் சுவைப் பாடங்கள்: கவிஞர் தணிகை

 காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்கு கத்துக் குடுத்தது யாருங்க?

பராசக்தி பாடல்



அது பகிர்ந்து மற்ற தம் இனத்தையும் அழைத்தே உண்ணும் ....


காக்கை குருவி எங்கள் ஜாதி...பாரதி...


தானிய மணிகளை பறவைக் கூட்டத்துக்கு இறைத்து விட்டு பட்டினி கிடந்ததாக பாரதி வாழ்விலுண்டு,


நிறைய பேர் தீனியும் குடி நீரும் காக்கை, குருவி, கிளிகள், புறாக்கள் என வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


எனது நினைவுக்கு எட்டிய வரையில் என்னால் முடிந்த அளவு செய்து  வருகிறேன் பல்லாண்டுகளாக.


காக்கா வளர்க்கிறார் என்று எனை சொன்னதும் உண்டு, உணவைக் கையிலேயே வாங்கி அவை உண்டு செல்வதுமுண்டு.


அதெல்லாம் பழைய கதையாக‌


இப்போது காகங்கள் சப்பாத்தி , பூரி என்றால் பார்த்து இறங்கி போட்டி போட்டுக் கொண்டு எடுத்துக் கொள்கின்றன மற்ற காகங்களுக்கு கிடைக்காமலே அழைக்காமலே மூக்கு நிறைய வாய் நிறைய தாம் ஒன்றேகூட‌....


அதுவே தோசை, இட்டிலி, உப்புமா போன்ற உணவுவகைகளை வந்து பார்த்து விட்டு அப்பால் பறந்தோடி விடுவதை நான் பார்த்து வருகிறேன்...காக்கைகளுக்கும் இனிசுலின் சுரப்பி...நீரிழிவு வியாதி இருக்குமோ...இல்லை இல்லை இவற்றை வைத்திருந்து பின்னால் உண்ண இந்த வகை உணவு ஏற்றதாக இருக்கிறது போலும்...


கூடு கட்ட கம்பி தேடும் காகங்கள்...இந்த உணவை ஒரு வாயும் நீர் ஒரு வாயும் எடுத்து உண்ணுவதைக் காண்கிறேன்


உடனே அழைத்தவுடன் வந்தாலும் வராவிட்டாலும் போடுவதுடன் நம் கடமை முடிந்தது அவை வரும்போது வரட்டும் எடுக்கும் போது எடுத்துக் கொள்ளட்டும் என நிலைகளும் வந்து விட்டன...


எனவே இந்தப் பதிவு மூலம் நான் மனிதம் பற்றி எதையுமே குறிப்பிட விரும்பவில்லை...


மீன்களுக்கு கொண்டு செல்லும் மதிய உணவை ஏன் அதற்காகவே பிரட் போன்ற உணவுகளை வாங்கிக் கொண்டுவந்து போடும் நண்பர் ஒருவரையும் நான் கொண்டதுண்டு.


மயில்கள் நிறைய பெருகி விட்டன... நாங்கள் வாழும் பகுதிகளில், பணி புரிந்த பகுதிகளிலும்...


பன்றிகள் செடி , கொடிகள், புற்களை மேய்ந்து வருவதைக் கண்டு வருகிறேஎன்... எங்கள் ஊரில்.

பசுக்கள்,மாடுகள் காகிதத்தை நகர்புறச் சாலைகளில் உண்டு வருவதையும் கண்டு வருகிறேன்..


மறுபடியும் பூக்கும் வரை

                கவிஞர் தணிகை


No comments:

Post a Comment