மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் 3 கி.மீ ஓடிச் சென்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்: கவிஞர் தணிகை
பெங்களூர் மணிப்பால் மருத்துவ மனையில் இரப்பை குடல் சிறப்புப் பிரிவின் மருத்துவரான கோவிந்த் நந்தகுமார் சர்ஜாபூரில் உள்ள மணிப்பால் மருத்துவ மனைக்கு ஒரு அவசர சிகிச்சை செய்ய செல்லும் போது வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டார். அது ஒரு அவசர லேப்ராஸ்கோபிக் பித்தப் பை அறுவை சிகிச்சை.
10 நிமிடம் காத்திருந்தும் வாகன வரிசை சிறிதும் அசையவில்லை. கூகுள் மேப்ஸ் நெரிசல் காரணமாக 45 நிமிடம் ஆகும் எனக் குறிப்பிட
காரிலிருந்து இறங்கி ஓடி 3 கி.மீ தொலைவைக் கடந்து மருத்துவமனை சென்று வெற்றிகரமாக தமது அறுவை சிகிச்சையை செய்து முடித்திருக்கிறார்.
தாம் உடற்பயிற்சி தினமும் செய்து வருவதால் 3 கீ.மீ ஓடி வருவது எனக்கு எளிதாக இருந்தது. எனவே குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு வர முடிந்தது என்கிறார். மேலும் அறிவோம் பாராட்டுவோம் இது போன்ற அரிய நல்ல மனிதர்களை நன்றி. வணக்கம்.
நன்றி: புதிய தலைமுறை.12.09.22
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment