ஒரு முன்னாள் எம்.பி.,யால், ராஜ்யசபா தலைவருக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த முன்னாள் எம்.பி., ஜோதி. வழக்கறிஞரான இவர், ஜெயலலிதாவின் வழக்குகளை முன்னின்று நடத்தி, பல வழக்குகளில் வெற்றியும் பெற்றவர்.பின் சசிகலா, ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரச்னையால் தி.மு.க.,வில் இணைந்து, இப்போது அரசியலிலிருந்து ஒதுங்கி வக்கீல் தொழில் செய்து வருகிறார்.
பென்ஷன், இலவச ரயில் பயணம் போன்ற சலுகைகளை உயர்த்த வேண்டும் என ஓய்வு பெற்ற எம்.பி.,க்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஜோதி, தன் எம்.பி., பதவிக்கான ஓய்வு ஊதியத்தை வாங்க மறுத்துவிட்டார். அதோடு அவருக்கு கிடைக்கும் ரயில் பயண சலுகை, மருத்துவ சலுகைகள் எதையுமே அவர் பெற்றுக் கொள்ளவில்லை.இது, ராஜ்யசபா அலுவலகத்தில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஜோதியின் பென்ஷன் பணம் அதிகமாக சேர்ந்துள்ளது. இதை என்ன செய்வது என அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தை ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரிடம் தெரிவித்தனர்.ஆச்சரியப்பட்ட தன்கர், இந்தியாவிலேயே ஜோதி ஒருவர் தான் பென்ஷன் வாங்காத முன்னாள் எம்.பி., என பாராட்டியுள்ளார். இதற்கு தீர்வு என்ன என இவர் கேட்க, இந்த பணத்தை அரசிடம் வழங்க ராஜ்யசபாவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.
thanks: Dinamalar 25.09.2022
இப்படியும் வெகு சில அரிய மனிதர்கள் இருக்கிறார்கள் . சுயநலத்தை தியாகம் செய்து நாட்டுக்கு விட்டுக் கொடுக்கும் போக்கு நாட்டுக்கு பணியாற்ற/பணியாற்றியதற்கு ஓய்வூதியம் எதற்கு என்று சொல்லும் போக்கு ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளிடம் வந்து விட்டாலே அதிலிருந்து நல்ல விடியல் வரலாம். இவர் இராஜ்ய சபாவின் உறுப்பினராக இருந்திருக்கிறார். சிலர் ஊதியம் வாங்காமலே கூட பணியாற்ற முன் வரலாம். ஏன் எனில் அவ்வளவு நல்ல நிலையில் இருந்தபடியே அரசியல் பதவியில் இருக்கிறார்கள்....ஊதியம் இல்லாமல் இருப்பார்க்கே அரசியல் பிரதிநிதியாக இருக்கலாம் என்ற ஒரு நிலை வந்தால் எப்படி இருக்கும் என யோசிக்கலாம். அது போன்ற காலமும் வரலாம். வரவேண்டும். அதாவது மக்களுக்கான பணியாற்றும் பராமரிப்பு செலவன்றி தனியாக அவர்களுக்கு ஊதியம் என்ற ஒன்றே இல்லை என்ற நிலை என்பதை சிந்திக்கலாம்.
சுதந்திரப் போர்த் தியாகிகள் இப்படி எதையும் பிரதிபலனாக பெற மறுத்த செய்திகள் இருக்கின்றன
போற்றுகிறோம்.
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment