இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் நண்பனே நண்பனே!: கவிஞர் தணிகை
3 மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம், காணொளிக் காட்சியில் அவர்கள் ஆசிரியரை அடிக்கச் செல்வதை மற்றொரு மாணவர் வீடியோ எடுத்து பரவ, உதவி ஆட்சியர் வந்து பாடம் எடுக்கிறார்.ஆனால் வேறொரு நிகழ்வில் முந்திய நாட்களின் செய்தி நான் கடக்க நேர்ந்தது: ஆசிரியர் மாணவரை கை தீண்டியது பற்றி காவல் துறையில் புகார் செய்து விசாரணை நடந்து அவருக்கு தண்டனை வழங்கப் பட்டதாக, ஆசிரியர் பெண்பிள்ளைகளை ஏமாற்றி மொபைல் போனில் வகுப்பு எடுப்பதை வைத்து பாலியல் பாடங்கள் கொண்டு செலுத்துவதும் , சமயம் சார்ந்த புனிதகுருமார்கள் பெண்களை பயன்படுத்தி விட்டு கைவிடுவதுமாக நிறைய நிறைய பாலியல் செய்திகள் குற்றப் பின்னணிச் செய்திகள் நாளுக்கு நாள் அதிகமாகியபடியே இருக்கின்றன. அதில் ஒன்று இன்று 16 வயது சிறுமியை 12 வயது சிறுவன் தாயாக்கி குழந்தை பெற்றதாக...
நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் இவை உணர்த்துகின்றன.
நிறம், மணம், இராஜா, இசை, ஆட்சி, கறுப்புக் கொடி, மசோதா, இரண்டு சூரியன்கள் மத்தியம் மாநிலம் என்பதையெல்லாம் கடந்து மக்கள் நலம் என்பதில் ஆட்சிமுறைகள் கவனம் செலுத்தியாக வேண்டிய அவசியம் இருக்க அதில் எல்லாம் இவர்கள் கவனம் செலுத்தியாக வேண்டும். அடிப்படையில் கோளாறு இருக்கிறது. நிகழ்வுகள் நடந்த பின்னே கவனம் செலுத்துவது பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை.
இவை போன்றவை நிகழாமல் இருக்க தடுப்பரண் போட்டே ஆகவேண்டும்
வயது வந்தோர்க்கு மட்டும் அந்தக் காலத்தில் A என சான்று பெற்ற CINEMA படங்கள் வந்து அமல்படுத்தப் பட்டது போல வயது வந்து சான்று பெற்றவர்க்கு மட்டுமே மது வழங்க டாஸ்மாக் முன் வர வேண்டும்,
மேலும் குறிப்பிட்ட வயதுக்கும் மேலானவர்கள் மட்டுமே தொடு திரை செல்பேசி பயன்படுத்தல் வேண்டும் என்ற தடை உடனடியாக இந்தியாவெங்கும் அல்லது இந்தியா அளவில் இல்லாவிட்டாலும் நம் தமிழகத்தின் அளவிலாவது கொண்டுவரல் வேண்டும் என்பது இன்றைய அத்தியாவசியத் தேவை( உடனே பாடம் எல்லாம் அதில் தானே என்றெல்லாம் சமாதானம் சொல்லக் கூடாது அதெல்லாம் வேண்டாம் நேரடிப்பாடமும் வகுப்பாசிரியர் மரியாதையும் மிக முக்கியம்)
எனது ஆசிரியர்களை நான் நினைவு கொண்டு இன்றும் ஏங்கி வருவதும், இயங்கி வருவதும் அவர்கள் எனக்களித்த ஊக்கமும் அவர்களின் மறைவும், அவர்களை எனது வாழ்க்கைப் பதிவு புத்தகத்தில் இடம் பெறச் செய்து எனது நன்றியறிதலை தெரிவித்திருப்பதும்... அந்த நாட்கள் எல்லாம் பொன்னல்ல வைர ஒளி நாட்களாகும் இன்றைய பள்ளியில் நடப்பவற்றைக் காணும்போது எங்களின் காலம் எல்லாம் இனி என்றுமே வாரா நாட்களாகவே கருத இடம் உண்டு.
வடக்கத்திய இளைஞர்கள் பணியில் சேர்ந்த மத்திய மாநில தேர்வாணைய தேர்வுகள் அடிப்படையில் பணி சேர்ந்தமையில் மதிப்பெண் சான்றிதழ்களில் சுமார் 3500க்கு 1500க்க்கும் மேலான சான்றிதழ்கள் போலியானவை என்று உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பது மற்றொரு செய்தி....
மாணவர்களுக்கு அவரவர் பணிகளை அது தூய்மைபடுத்தும் பணியாக இருந்தாலும் அவரவர் பணிகளை அவரவர் செய்து கொள்ளும் கல்வி, பயிற்சி வழங்கப்படுவதில் தவறில்லை. அது காலம் உள்ளளவும் அவர் உயிர் உள்ளளவும் அவை துணை செய்யும். அதை எல்லாம் தவறு என சொல்லக் கூடாது. இல்லையேல் அதற்கென தனிப்பட்ட முறையில் சிலர் ஒதுக்கப் பட்டு அது அவர்களுக்கு நிரந்தரமாகி அதிலிருந்து சாதியம் தோன்றிய கதைகள் நிகழ்வாகி விடும்.
பூமியில் தேவைக்கு போதுமானவை இருக்கின்றன ஆனால் பேராசைக்கு இல்லை... என மகாத்மா காந்தி சொன்னதை ஏன் நினைவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால் இன்று" புவி தினம்"EARTH DAY 2022
THE EARTH HAS ENOUGH FOR EVERY MAN'S NEED
BUT NOT ENOUGH FOR EVERY MAN'S GREED
-----GANDHIJI
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment