வாழ்க்கை வளைவில்...கவிஞர் தணிகை
பொய்களின் மேல் தீட்டப்படும் சித்திரம்
மிக வனப்பானதாகவே இருக்கிறது.
நெருப்பு வேறு எதையும் சேர விடுவதில்லை
ஒரு பொன் நாணயம் ஒரே பொன் நாணயம்!
ஒரு செம்பிழம்பு ஒரே செம்பிழம்பு!
இயற்கை சிரிக்கிறது.
பதிலுக்கு நாமும்...!
பொய் பேசினாலும் பேசாவிட்டாலும்
சாவது நிச்சயம்
பொய் பேசாமலிருந்துதான் சாவோமே!
பொய் பேச வேண்டுமெனில் சாவோமே!
இலஞ்சம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்
சாவது நிச்சயம்
இலஞ்சம் கொடுக்காமலிருந்துதான் சாவோமே!
இலஞ்சம் கொடுக்க வேண்டுமெனில் சாவோமே!
போராடிச் சாவதே மேல்!.
போராடி வாழ்வதுதான் மேல்.
....கவிஞர் தணிகை
நேர்மையான வாழ்க்கை மனநிறைவளிக்கும். பாதை மாறிய பயணம் இடர் தரும். தங்களுடைய நோக்கம், பாடல் வரிகள் மிக்க சிறப்பு.
ReplyDeleteநன்றி உங்கள் கருத்துப் பகிர்வுக்கு. ஏற்புடையது.
Delete