ஒரே சூரியன் ஒரே நிலா ஒரே வானம் ஒரே பூமி வாங்கடா: கவிஞர் தணிகை
WINDZOID COURIER SERVICE 1830 E MILLS AVENUE EL PASO TX USA 79901
வின்ட்ஜாய்ட் கூரியர் சர்வீஸ் என்ற நிறுவனம் வேலை தருவதாக படித்த இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து வரும் செயல்பாடு பற்றி ஒரு ஆங்கிலப் பதிவை செய்திருந்தேன். in my DAWAN PAGES WORDPRESS.COM அதைப் படித்த ஜோஸப் உல்ரிச் என்ற ஜெர்மானியர் நான் அதில் ஈடுபடுபவனல்ல எனது சுயசரிதையைப் பாருங்கள் என்று பதில் அளித்துள்ளார். அவருடைய மின்னஞ்சல் வழிதான் அந்த இளைஞர்க்கு முதல் தொடர்பு ஏற்பட்ட அவருடைய சுயவிவரங்களை அனுப்பச் சொல்லி அந்த போலி நிறுவனம் கேட்டிருந்தது
அந்த நிறுவனம் 1830 இ மில்ஸ் அவென்யூ எல் பசோ டெக்ஸாஸ் மாநிலம் 79901 ஐக்கிய அமெரிக்க குடியரசு என்ற இடத்தில் இயங்கி வருவதாக அந்த இடத்தில் பணிபுரிய ஆள் தேவை என ஏமாந்த இளைஞர்களிடம் பணம் பிடுங்கி ஏமாற்றி வருகிறது.
அதற்கு கையாட்களாக ஒரு வலைப்பின்னலை வெப்சைட்டை வைத்திருக்கிறது முதலில் ஜோசப் உ.உல்ரிச் என்பவர் தனது மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்கிறார் அதை அடுத்து வில்சன் எல்லிஸ் பேரி என்ற நபர் இதன் இந்த போலி நிறுவனத்தின் மனித வள மேலாளராக இருப்பதாகவும் அவருடைய மின்னஞ்சல் வழி தொடர்கிறார். இவர்கள் வாட்ஸ் ஆப், மின்னஞ்சல், தொலைபேசி வழியாக பேசி காணொளிக் காட்சி வழியாகக் கூட இல்லாமல் ஒரு கேள்வி வினாத்தாள் மூலம் விடை தரச் சொல்லி அதன் மூலம் தேர்வு பெற்றதாகவும் தொடர்புடைய புகைப்படம், பாஸ்போர்ட் ஸ்கேன் காபிகள், டிகிரி சான்றிதழ் எல்லாவற்றையும் அனுப்பும்படி எல்லாம் மின்னஞ்சல் வழி உடனுக்குடன் நடந்த உடன், எதிர்பாரா ஒரு பெரும் தொகையை ஊதியமாகத் தர விருப்பதாகவும் அதற்கு முன் விசா பணிகளை கவனித்து கொடுத்தால் விமான அனுமதிச் சீட்டை அனுப்பி வைப்பதாகவும் இங்கு செய்யும் செலவு அனைத்தையும் நிறுவனத்தில் சேரும்போது மீட்டுக் கொள்ளலாம் என்றும் அதைப் பார்த்த உடன் உடனே விமான அனுமதிச் சீட்டை அனுப்புவதாகவும் தெரிவித்ததை நம்புவோர்க்கு
உடனே விசா விண்ணப்ப எண்: ஒன்றை அளித்து விசா விண்ணப்ப மையத்தில் மாண்பு மிகு.செல்வி.குளோரியா பெர்பெனா என்பவரை தொடர்பு கொள்ளுங்கள் என அவருடைய முழு தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி, வாட்ஸ் ஆப் எல்லாம் தருகிறார். அந்த செல்வி குளோரியா பெர்பெனா என்பார் பற்றி இணையத்தில் தேடினால் அவர் உண்மையிலேயே அமெரிக்க ஐக்கிய குடியரசின் தலையாய அலுவலகப் பணிபுரியும் குழுவில் ஒருவராக பொது உறவு PUBLIC AFFAIRS (பப்ளிக் அஃபேர்ஸ்) கவனிக்கிறார் என வலைதளமும் தரவுகளைத் தருகிறது.
உடனே அவரும் ரிங்கி தமங் என்ற நபர் கணக்கு எண்; 14540100125045 FEDERAL BANK பெடரல் பாங்க் IFSC CODE:ஐ.எப்.சி கோட்:எப்டிஆர் எல்0001454 என்ற மாரத்தஹள்ளி என்ற கிளை பெங்களூர் எண்ணுக்கு 190 அமெரிக்க டாலரை அதாவது நமது இந்தியப் பணத்தில் 14440 ரூபாயை அனுப்பச் சொல்கின்றனர்.
அப்போதும் அவரை நம்பும் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி போட்ட சான்றிதழ் மற்றும் பயண காப்புறுதி சான்றிதழ் பெற ரூ.89,700 அல்லது 1200 அமெரிக்க டாலர் அனுப்பச் சொல்லி தடுமாறி வேறு ஒரு கணக்கு எண்: குபேந்திரா ரியாங் எண்: 99980106925014 அதுவும் பெங்களூர் பெடரல் வங்கிதான் ஆனால் கிளை ராஜாஜி நகரில் உள்ள ராஜ் சேம்பரில் டாக்டர் ராஜ்குமார் சாலையில் அமைந்துள்ள வங்கியில் கட்டச் சொல்கிறார்கள். அதன் IFSC CODE: ஐ.எப்.சி.கோட் எப் டி ஆர் எல் FDRL0001334
இவர்களை பதிவு அலுவலகம் எங்கே? தலைமையகம் அல்லது தலைமை அலுவலகம் எங்கே என்று கேட்டாலும் சொதப்பல். நேரடியாக வந்து பார்த்து கட்டி விடுகிறோமே என்றாலும் இல்லை வேண்டாம் என்கிறார்கள். அது மட்டுமல்ல நாடெங்கும் அல்ல உலகெங்கும் 100க்கும் மேலான நபர்களைத் தேர்வு செய்திருக்கிறோம், உங்களுடையது மட்டும் தான் தாமதமாகிறது உடனே விரைந்து கட்டுங்கள் என இந்த வில்சன் எல்லிஸ் பேரி என்பவரும் குளோரியா பெர்பெனா என்பாரும் கேட்கிறார்கள். விரைவு படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களைப் பற்றி தெரிந்த அடுத்த நொடியில் தொடர்பை துண்டித்துக் கொள்கிறார்கள். இல்லை எங்களிடம் ஏற்கெனவே இன்னொரு இன்சூரன்ஸ் கம்பெனி வழியாக பெற்ற சான்றிதழ் இருக்கிறது என்றால் அதெல்லாம் செல்லாது யு.எஸ் இன்சூரன்ஸ் சர்வீஸஸ் வழியாகவே பெறவேண்டும் அதையும் திருப்பித் தந்து விடுவோம் என்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி யு.எஸ் நாட்டில் இல்லை என்பதையும் நீங்கள் கூகுளில் தேடினால் தெரிந்து கொள்ள முடியும்.
இது பற்றி சென்னை அமெரிக்க எம்பஸி என்ன சொல்கிறது எனில் இதெல்லாம் அவரவர் சொந்த முயற்சியில் செய்ய வேண்டியதுதான், இது பற்றி எல்லாம் எங்களை ஏன் கேட்கிறீர்கள் என்றும், பெடரல் வங்கி ஏன் இப்படிப்பட்ட வாடிக்கையாளரைக் கொண்டிருக்கிறீர் என்றால் நீங்கள் CYBER CRIME CELL சைபர் கிரைம் வழியாக வாருங்கள் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது.
இந்தப் பதர்கள் பெயரை வைத்துப் பார்த்துப் போர்க்கும்பொது வடக்கத்திய மாநிலம் அல்லது வங்காளம், அஸ்ஸாம் போன்ற மாநில நபர்களாக இருக்கலாம் அல்லது ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் கூட்டுக் களவாணிகளாக பெங்களூரில் இருந்து கொண்டே ஒரு வெப்சைட்டை ஆரம்பித்து எல்லாவற்றையும் இட்டுக் கட்டி எவர் ஏமாந்திருக்கிறாரோ அவர்களின் தாலியை அறுக்கலாம் என இயங்கி வருவதாகத் தெரிகிறது. அல்லது இதில் நாடு தழுவிய அளவில் பல களவாணிகள் இடம் பெற்றிருக்கிறார்களா என்பதை காவல் துறையினர்தான் கண்டறிய முடியும்.
எச்சரிக்கையாக இருங்கள்.
மேலும் டைம்ஸ் நௌ ஜாப்ஸ் TIMES NOW JOBS வழியாக உங்களின் தேடலுக்கு வரும் நல்லவற்றுடன் இந்த இளைஞர்களுக்கான கேடும் கலந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது போல மணிடெக் MONEYTEK இன்ன பிற... அதற்கு வெப்சைட்டே விலைக்கு எவர் எடுக்கிறாரோ எனக் காத்திருக்க எந்த இளைஞர் ஏமாற காத்திருக்கிறாரோ என பிடுங்க பார்க்கின்றனர்.
RELATED CULPRITS CONTACT AND COMMUNICATION DETAILS FOLLOWS:
E MAIL IDS MOBILE NUMBERS AND WHATS APP ETC
all small in email ids
1.JOSEF U. UTE ULLRICH E MAIL: JOSEF - ULLRICH@T-ONLINE.DE
2. WILSON ELLIS BARRY
HUMAN RESOURCES MANAGER
WINDZOID SERVICE
1830 E MILLS AVENUE EL PASO, TX 79901 UNITED STATES
TEL:+14099001200 FAX:+114099001200
E MAIL: WILSON.ELLISBARRY@WINDZOID.COM
CAREERS@WINDZOID.COM
INFO@WINDZOID.COM
3. HON.MS.GLORIA BERBENA
VISA PROCESSING UNIT
VISA APPLICATION CENTER - NEW DELHI
CALL/WHATS APP + 918527465742
ADDRESS" US VISA APPLICATION CENTER - INDIA
BABA KHARAK SINGH ROAD, CONNAUGHT PLACE
NEW DELHI, DELHI 110 001. WORKING HOURS 9.00 AM - 5 PM (MONDAY - FRIDAY)
E MAIL: TRAVEL@MEA - GOV.ORG.
4. RINKI TAMANG
ACCOUNT NUMBER: 14540100125045
FEDERAL BANK . MARATHA HALLI BRANCH
IFSC CODE: FDRL0001454 PIN : 560 037
5. KUBANDRA REANG
ACCOUNT NUMBER:99980106925014
IFSC : FDRL0001334
RAJ CHAMBER
RAJKUMAR ROAD, II BLOCK
RAJAJI NAGAR BANGALORE. 560 010
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு:
நம்மை இரண்டு நூற்றாண்டாக காலனியாதிக்கத்தில் வைத்தே ஏமாற்றிய வெள்ளை ஏகாதிபத்தியம் இப்போது எதோ ஒரு யுக்தியில் எப்படியாவது ஏமாற்றியே பிழைக்கலாம் எனத் திட்டமிடுகிறது...
ஐநா இலங்கை அரசுக்கு இப்போது புத்தி சொல்கிறது
இதன் நாட்டாண்மை ரஷியா உக்ரைன் விவகாரத்தில் என்ன நிலை?
ஐநா இலட்சக்கணக்கான தமிழரை கொன்று குவித்த விவகாரத்தில் என்ன செய்தது?
பாகிஸ்தான் உள் நாட்டு தற்போதைய பதவி மாற்ற விவகாரம் பற்றி என்ன சொல்லி இருக்கிறது?
மூன்றாம் உலக நாடுகளிடம் மட்டுமே இதன் நாட்டாண்மை செல்லுமா? நேட்டோ , ரஷியா சீனா போன்ற வல்லரசுகளிடம் வீட்டோ அதிகாரம் உள்ளோரிடம் என்ன?...
அடுத்து டாணாக்காரன் பற்றி அவசியம் சொல்ல வேண்டும்...
No comments:
Post a Comment