Wednesday, December 30, 2020

ரஜினிகாந்த் என்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட்: கவிஞர் தணிகை

 ரஜினிகாந்த் என்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட்: கவிஞர் தணிகை








தமிழ் நாட்டு அரசியல் மேகங்கள் கலையத் துவங்கி விட்டன. 70 வயது சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பாலச்சந்தரால் ரஜினிகாந்த் என்னும் பெயர் சூட்டப் பட்ட தமிழ் படங்களின் ஸ்டைல் மன்னன் தனது உண்மையை நிலையை உணர்ந்து சரியான முடிவை எடுத்திருக்கிறார்.


எவ்வித நிர்பந்தத்துக்கும் அடிபணியாமல் தனது மனித மாண்புகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இல்லையேல் இவர் பெரிய ஏமாற்றம் பெற்றிருப்பார். இவரது சகோதரர் தமிழருவி மணியன் குஷ்பு போன்றோர் மட்டுமல்ல இவரது ரசிகர் கூட்டமும் இவர் பெரிதாக ஏமாற்றி விட்டதாக சொன்னாலும் ஆன்மீகவாதிகளுக்கு புற உலக காட்சிகளை எல்லாம் தாண்டி பின் நடப்பதை பார்க்கும் ஆற்றல் உண்டு.


எனவே ரஜினிகாந்த் முடிவு அவரையும் அவரை உண்மையாகவே நேசிக்கும் குடும்பத்தார்க்கும் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நல்ல முடிவுதான்.




இன்றைய தேர்தல் களம், அரசியல் கட்சிகள், அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் எல்லாமே இந்திய அரசியலை கேலிக்கூத்தாக்கி மத்தியில் ஆளும் ஆட்சி மாநிலக் கோட்பாடுகளை தகர்த்து வந்து கொண்டிருக்கும் சூழலில் இவர் முதலில் பலிகடா ஆகாமல் இருப்பதும் அவர் மொழியில் சொல்லிய படி இவரை நம்பியோரை இவர் பலிகடாக்காளாக ஆக்காமல் இருப்பதும் பாராட்டத் தக்கதே!


இனி இவர் எந்தப் பக்கம் என தனது ஆதரவைக் கூட சொல்லாமல் இருப்பது மேலும் நல்லது.

அரசியல் அல்லாமல் தம்மால் ஆன சமூக சேவையை செய்து வரப் போவதாக சொல்லி உள்ளது

நல்லதே.


இவருக்கு பத்ம பூசன், பத்ம விபூசன் போன்ற விருதுகள் அன்னை தெரஸா போன்றோர் செய்த சேவைக்காக எல்லாம்  வழங்கப் பட்டது போல வழங்கப் பட்டதல்ல.  இவர் ஓர் மாஸ் ஹீரோ இவரிடம் பெரிய கூட்டம் இருக்கிறது என்ற காரணத்தால் மட்டுமே. இவர் இப்போதுதான் விழித்துக் கொண்டுள்ளார். மாயையில் மூழ்கி சேதமடையாமல் தனக்கு உண்டான பேரை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மேலும் ஒவ்வொரு படம் வரும் போதும் தேவைக்காகவோ உணர்ச்சி வசத்தாலோ, கனவுகளுடனோ பிறர் எழுதிய வசனத்தை பேசியது உண்டு. ஆனால் எல்லாப் படங்களுமே இவருக்கு முழு வெற்றி தந்ததில்லை. இந்த செயல்பாட்டை தந்திரம், யுக்தி, சுயநலம் என்ற கோணத்தில் எல்லாம் விமர்சித்தார்கள். 


என்றாலும் கூட தமிழக மக்களுக்கு நேர்மையாக நடந்திருக்கிறார் தனது நிலையை விளக்கி. 


பாரத ரத்னா நிறைய பேருக்கு வழங்கப் பட்டிருந்தாலும் அதிலும் தரம் உண்டு. ஆட்சியை  வாய்ப்புகளால் பதவி ஏறி எவர் நடத்தினாலும் அதிலும் தரம் உண்டு.  கமல்ஹாசன், விஜய்காந்த் போன்றோர் சினிமாத் துறையில் இருந்து கிளம்பியோர் இன்னும் அரசியல் தேர்தல் களத்தில் உள்ளனர்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




4 comments: