ஒருவருக்கு சாத்தியப் படுகிற எல்லாம் எல்லாருக்கும் சாத்தியப்படும்: கவிஞர் தணிகை
எனக்கு சாத்தியப்படுகிற எல்லாம் ஒரு குழந்தைக்கும் சாத்தியப் படும்...காந்தி
நடைப் பயிற்சியில் சந்தித்து எனக்கு தியானப் பயிற்சி கொடுங்கள் எனக் கேட்டார் அவர். அவருக்கு தியானம் என்பது கற்றுக் கொடுப்பதல்ல, கற்றுக் கொள்வது, என்ற அறிமுக வகுப்பை ஒவ்வொரு மணி நேரம் மட்டும் நாளின் ஒரே நேரத்தில் வருவதாக இருந்தால் 10 நாளுக்கு எடுப்பேன் எனச் சொல்லி இருவரும் அதில் ஈடுபட முடிவு செய்தோம்.
நல்ல ஒத்துழைப்பு. பத்து நாட்களும் தவறாமல் வந்திருந்து தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். கண்களை மூடு உலகை பார், கணகளைத் திற உலகை மற என்ற பாவனை கற்பிதங்கள் பயிற்சி 40+10+10 என்று ஆரம்பித்தில் பின் ஒன்னரை மணி நேரத்துக்கும் மேலாகவே நீடித்தது. 40+20+20 நிமிடம் கூட போதாமல் போனது.
பின்னூட்டம் அல்லது மீள் சுற்று நேரத்தையும் நீங்களே பேசுங்கள் அது எனக்கு பயனாகிறது என்றார்.பத்தாம் நாளில் அவசியம் உங்கள் பாதிப்பை அல்லது தாக்கத்தை (இம்பேக்ட்) வெளிப்படுத்துங்கள் என்ற கேள்விக்கு:
உங்களை 1982ல் ஒரு மேடையில் பார்த்து உங்களது வீர சிவாஜி நடிப்பைப் பர்த்தேன் வசனத்தைக் கேட்டேன். அப்போது நாங்கள் அதாவது நானும் தம்புடு என்கிற அர்த்தானாரி அவர்களின் மகனுமான நடராஜும் அப்போது நூலகக் கட்டடம் அந்த இடத்தில் இல்லை மாறாக உயரமான நீர் நிலைத் தொட்டி இருந்தது அதன் மேல் ஏறி அமர்ந்திருந்தோம் அவர் நீங்கள் நடித்து முடித்ததும் "சிவாஜி கணேசன் தோற்றார் போ,! என்று அனைவரும் கேட்கும்படியாக உயர நீர் நிலைத் தொட்டி மேலிருந்து குரல் எழுப்பிக் கத்தியபடி கையைத் தட்டினார் கையை வீசினார் எனச் செய்து காண்பித்தார், அப்போது இருந்து எனக்கு உங்களைத் தெரியும் அதன் பின் நீங்கள் எங்கள் வீட்டுக்கே புத்தகம் எழுதி விற்பனை செய்ய வந்திருந்தீர், இப்போது இப்படிப் பட்ட தியானப் பயிற்சி வகுப்பை எடுப்பீர் என எதிர் பார்க்கவில்லை ஒவ்வொரு நாளும் பிரமிப்பு ஏற்பட்டது என்றார் மோகன் குமார்.
ஓ! அப்படியா...நான் ஒரு நாடக நடிகன் என்பதும் எனக்கு தமிழ் நாடு கலைச் செல்வம் விருது வாங்கிய பாண்டுரங்கன் மூத்த நண்பராக இருந்தார். சாணக்ய சபதம் என்ற நாடகத்திற்கு குரு( அப்போது எனது வயது மீறினால் 10ஐ மீறி இருக்கலாம்) என்பதும் அதன் பின் இவர் போன்ற பலருடன் எஸ்.பி. பெருமாள் போன்றோரை வைத்தும் கன்னங்குறிச்சியில் 7 நாடகங்களை ஒருங்கிணைத்து நேருயுவக் கேந்திரா சார்பாக சின்னபையன் (மது விலக்கு வேட்பாளர் சேலம் வடக்கு தொகுதி 2011 இப்போது அவரும் இல்லை) உதவியுடன் நடத்திட அந்த செயல் பாட்டுத் தலைமை அப்போது சேலம் மாவட்ட நேரு யுவக் கேந்திராவின் இளையோர் ஒருங்கிணைப்பாளர் எனதன்பு சகோதரர் கொ.வேலாயுதம் என்பதும் அதன் பின் அவர் சிற்பி கொ.வேலாயுதம்... எல்லாம் நினைவுக்கு வர ஆரம்பித்தன...
ஆக நாடகக் கலைஞர்,எழுத்தாளர், கவிஞர் ,பத்திரிகையாளர், சமூக மேம்பாட்டுச் செயல்பாட்டாளர்,பேச்சாளர் போன்ற எனது பன்முகங்கள் தெரிய நான் காந்தியை நினைத்துக் கொண்டேன்: அவரோ:
ஒருவருக்குச் சாத்தியப் படுகிற எல்லாம் எல்லோருக்கும் சாத்தியப் படும்
எனக்குச் சாத்தியப் படுகிற எல்லாம் ஒரு குழந்தைக்கும் சாத்தியப் படும் என்கிறார் தமது சத்திய சோதனையில்.
அப்படி எனில் இன்னும் நான் புகவேண்டிய களம் நிறைய இருக்கிறது என்பதை இயற்கை எனக்கு இந்தத் திறவு மூலம் வெளிக் காட்டி இருக்கிறது...
எல்லாப் புகழும் இறைவனுக்கே என வழக்கமாகச் சொல்லும் ஏ.ஆர். ரஹ்மான் நிறைகுடமாக ததும்பாமல் தற்போது தாயின் மறைவில் இருப்பதும் நானும் கூட எனது சிற்றன்னை ஒருவர் மறைவில் இருப்பதுமாக நாட்கள்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment