அறிவொளியாய் அப்துல் கலாம்
அப்துல் கலாம் 89 வது பிறந்த நாள் கவிதைஅக்டோபர் 15.
காலம் புறம் தள்ள முடியா பெயர் கலாம்
காலப் புத்தகத்தில் கலாமின் பக்கத்தை படிக்காமல்
ஒதுக்கி விட்டு அடுத்த பக்கத்திற்கு செல்லவே முடியாது
ஏனெனில் அது காலத்தால் அழிக்க முடியாத கவிதை
அறிவின் இலக்கணம், இலட்சியச் சிகரம் தொட்ட கதை.
அன்றும் இன்றும் என்றும் இந்தியாவின்
மக்கள் குடியரசுத் தலைவர்(என்றால் அது கலாம் மட்டுமே)
அக்டோபர் 2ல் மகாத்மா காந்திக்கு 151 வது பிறந்த நாள்
விழா கண்டோம்.
அக்டோபர் 15ல் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமுக்கு
89 வது பிறந்த நாள் விழா காண்கிறோம்.
காந்தியும் கலாமும் ஒன்றுதான் என முன்னுரைத்தேன்
என் கவிதை வரலாற்றுப் பதிவுகளில்
இந்து மதச் சின்ன குத்து விளக்கை
கிறித்தவ மதச் சின்ன மெழுகுவர்த்தியால்
முகமதிய அப்துல் கலாம் ஏற்றுகிறேன் என்ற போது
அவர் காந்தியானார்.
மத நல்லிணக்கமே இந்த தேசத்தின் மகாத்மியம் என்ற வழியில்.
அமெரிக்கப் பாதுகாவலர்கள் இவர் காலணியின் உள்ளுறை முதல்
ஆடை வரை ஒரு முறையல்ல இரு முறை துகிலுரிந்த போதும்.போதும்
சிரித்தபடியே அவர் பணியை அவர் செய்கிறார் என
காந்தியின் சகிப்புத் தன்மையுடன் ஒன்றி இவரும் மகாத்மாவானார்.
எனவே காந்தியும் கலாமும் ஒன்றுதான்
நமக்கென்றும் கண்கள் இரண்டுதான்
காட்சி ஒன்றுதான்.
இருவருமே இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே வழிகாட்டிகள்
அரை நிர்வாணப் பக்கிரி என்ற வின்ஸ்டன் சர்ச்சிலை விட
அறிவாளி காந்தி, எனது ஆடையையும் சேர்த்து
நீ அணிந்திருக்கிறாய் என்று சொன்ன போது
வின்ஸ்டன் சர்ச்சிலை விட அறிவாளியானாலும் காந்தி
அரை நிர்வாணப் பக்கிரியாகவே சாகும் வரை வாழ்ந்தார்.
பொக்ரான் அணுவெடிப்பால் அமெரிக்க அண்ணனை
அண்ணாந்து பார்க்க வைத்தார் இந்தியாவை
எதற்கும் அசராத கலாம்
மேடைகளீல் கால் மேல் காலிட்டு ஒருபோதும் அமராத கலாம்
எளிமைக்கோர் அடையாளம்
கவிஞர் நிற்கக் கூடாது நாற்காலியில் அமருங்கள் அமருங்கள்
எனும் மக்கள் தலைவன் அற்புதக் கலைஞன்
அவரை நமது நாடு இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்
மேம்பட்டிருக்கலாம்.
பிழைப்புக்காக விமானியாக முயன்று தோற்றவர்
உழைப்பினால் நாட்டின் முப்படைகளுக்கும் தளபதியாகி
சரித்திரமானார் சரித்திரமானாலும் இந்தியாவின் தரித்திரம் போக்க
எண்ணியபடியே பள்ளிக் குழந்தைகளிடையே சங்கமமானார்.
டிசம்பர் 28 2002ல் இராமமூர்த்தி நகரில் நிம்ஸ் பள்ளியில்
எனது நதிகள் இணைப்புக் கவிதை புகழ்க் கொடி நாட்டியது
அதற்காக கன நீராய் இருந்த நான் வேண்டுகோளின் படி
மிக இலேசாயிருந்தேன் அது போலவே இன்றும்....
அன்று நதிகள் இணைந்தால் மின் சார மீன் பிடிக்கலாம்
பயிர்களை வானம் பார்க்காது வளர்க்கலாம்
குடிநீரை பாக்கெட்டிலும் பாட்டிலிலும் அடைக்காதிருக்கலாம்
இந்தியத் தலைமுறைகளை இனி வரும் பரம்பரையில்
அமெரிக்கருக்கும் சீனருக்கும் முன் வைக்கலாம்
என்றெல்லாம் வேண்டிய கவிதை கண்ட
பொறியாளர் சி. மணி மேடையென்றும் பாராமல்
ஆணென்றும் கருதாமல் எனக்கிட்ட முத்தம்
அன்று கூச்சமாக இருந்தது இன்று ஏக்கமாக இருக்கிறது
அவர் மறைந்து விட்ட போதும் என்னுள் மறையாதிருக்கிறது
அந்த அன்பின் மொழி...
கலாம் தோல்விக்கு தோல்வி கொடுத்தவர்
சவால் வாய்ப்பென்பவர் கலாம் ஒரு முழுமை பெற்ற அறிவொளி
அன்பின் சுடர் இது போன்ற அறிவாளிகளிடம் மட்டுமே
அவ்வளவு எளிமை வரும்...
நாட்டில் இலஞ்ச ஒழிப்பு எண்ணம் செயலாக மாற வேண்டும்
அத்தகைய குடும்பங்கள் பெருகப் பெருக இலஞ்ச் ஔஉழல்
நாட்டில் ஒழியுயும் என எனைத் தனியாக நின்று போராடுவதை
தடுத்து புத்தி புகட்டியவர்...அவர் தம் கடித்தத்தின் முதல் வரியை
தம் கைப்பட எழுதி ஆரம்பித்திருந்தார் அந்த ஒரு கடிதம்
எனக்கு ஒரு உத்வேக முகவரி தந்தது. டிசம்பர் 23 2004 முதல்.
அப்போது அவர் குடியரசுத் தலைவர் நானோர் அடித்தட்டுத் தொண்டன்
எனது நூல்கள் அவரின் கைகளிலும் தவழ்ந்ததையும்
என் கைகளில் தவழ்ந்த புதல்வர் அவரின் ஒளியை
விவரமறியாத போது ஒரு முறையும்
விவரமறிந்த போது மறு முறையும் உணர்ந்தான்
அடுத்த ஆணிடில் நமது கலாமெனும் கால ஒளி
கவிதை மொழி அறிவொளி நம்மிடமிருந்தெலாம் உதிர்ந்தது
செய்தி கேட்ட அகிலமெ அதிர்ந்தது
ஆட்டோ ஸ்டேன்ட்களிலும் ஆங்காங்கே மூலை முடுக்குகளிலும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகெங்கும் ஒலித்த குரல்
அவருக்குப் பிடித்தமான திருக்குறள் போல எங்கெங்கும்....
யாரையுமே வெறுத்து ஒதுக்கி ஏசாத குணம்
எதிர்த்துப் பேசாத இனம்.
பெற்றோர் ஆசிரியர் மாணவர் சேர்ந்த தங்க முக்கோணமே
நற்சமுதாயக் கட்டமைக்க வழி என்ற பாதை அமைத்தவர்
யாரையும் குறை சொல்வதை விட இருள் காட்டிலும்
ஒரு விளக்காக இருங்கள் ஒளி விளக்கு ஒரு விளக்கு
திருவிளக்கு எண்ணற்றா தீபங்களாகி
அறிவொளியாக சுடர் விட்டு நாடெங்கும் பரவட்டும்
நல்லோர் மணம் பரப்பட்டும் அல்லவை தேய அறம் பெருகட்டும்
மாணவர்களின் முக்கிய இலக்கணம் கேள்வி கேட்பதே என்றவர்
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் அதுவே அடித்தளம் என்று வென்றவர்.
வாரத்தின் 5 நாட்களை சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்காக உழையுங்கள்
மற்ற 2 நாட்களையும் நாட்டு முன்னேற்றத்திற்காக விதையுங்கள்
என்ற இலக்கணம் வகுத்தவர் தம் சீடர்களுக்கு
ஓய்வு என்பதற்கு மாற்றாக வேறு ஓர் ஆக்கபூர்வ உழைப்பை
விதைத்து மடை மாற்றம் செய்து பாருங்கள் என விழிகாட்டி
வழி காட்டியவர்
சுருங்கச் சொல்கிறேன்:
கலாம் ஒரு நல்ல மாணவர், கலாம் ஒரு உயர்ந்த ஆசிரியர்
கலாம் ஒரு உன்னதத் தலைவர், கலாம் ஒரு மனிதச் சிகரம்
கலாம் ஒரு பிழையிலா மொழி கலாம் ஒரு விலையிலா வழி
கலாம் நமது வாழ்வில் என்றும் சுடர் விடும் அறிவொளி...
என்றென்றும்
அன்புடன்
தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்திற்காக
கவிஞர் சு. தணிகை....
No comments:
Post a Comment