ஓசூர் திருப்பூர் ஆகிறதா? கவிஞர் தணிகை
திருப்பூர் ஒரு பனியன் தயாரிப்பு பின்னலாடையில் உலகளாவிய புகழ் பெற்ற நகராக இருந்தது மட்டுமல்ல குற்றப் பின்னணியிலும் தமிழகத்திலேயே முன்னணியில் இருந்தது. ஒரு காலம்.
அது போல ஓசூரும் இருக்கிறது தொழில் வளர்ச்சிப் பின்னணியில் முன்னேறும் நகரில் எல்லாம் குற்றமும் பெருகி வருகிறது என்பதை செய்திகள் மற்றும் நடைமுறை வாழ்வுகள் தெரிவிக்கின்றன.
புதிதாக அங்கு பணிக்குச் செல்லும் இளைஞர்களை வழிமறித்து தனியாகச் செல்பவர்களிடம் உள்ள பொருட்களை பிடுங்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் இயல்பாகி விட்டன.
ஒரு உண்மைச் சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்:
வெளியூரிலிருந்து ஒரு தற்காலிக பணியாளராக சில இளைஞர்கள் ஒரு தொழிற்சாலையில் சேர்க்கப் படுகின்றனர். அதற்காக அந்த இளைஞர்கள் அளவை மீறிய வாடகையையும் முன் தொகையையும் கொடுத்து வீட்டை ஏற்பாடு செய்து தங்கி பணிக்குச் செல்ல ஆரம்பிக்கின்றனர்.
வந்தியத் தேவன் நம்ம கதாநாயகனும் அப்படித்தான் சபரியுடன் அங்கு சென்ற புதிது.
இச்சூழ்நிலையில் ஒரு நாள் அதிகாலை வந்தியத் தேவன் அதிகாலை 5 மணி சுமாருக்கு எழுந்து கதவைத் திறந்து சற்று காற்று வாங்கி விட்டு மாடி முதல் தளத்தில் அவருடைய அறை இருந்ததால் சற்றே கதவைத் தாளிடாமல் சாத்தி விட்டு கழிப்பறைக்குச் செல்லலாம் என சற்று நடக்கிறார்.
இவரின் இன்னொரு அறைப் பங்காளரும் நண்பருமான சபரி தூங்கிக் கொண்டிருக்க, கதவு சற்று திறக்கப் படுகிறது...நாம் நமது ஆவியுலக நடப்பை எடுத்துக் கொண்டு ஆவிகள் வந்து கதவைத் திறந்ததோ என கற்பனைக்குச் செல்ல வேண்டாம்...ஏன் எனில் இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டபோது கதவு சற்று திறந்தது என்னும் போது ஒரு வேளை காற்று வேகமாக அடித்து திறந்திருக்கலோமே என்றும் சிந்தித்தேன்...
ஆனால் கதவைத் திறந்தது ஒரு சிவப்பு பொட்டு எல்லாம் வைத்துக் கொண்டிருந்த ஒரு நபர்...அறையில் கழிப்பறைக்குச் செல்லலாம் என சென்ற வந்தியத் தேவன் திரும்பி வந்து என்ன யார் என கேட்க...அந்த விடியற்காலை ஐந்தரை மணியளவில்: தண்ணீர் கேன் போட வந்தேன் என அந்த நபர் சொல்லித் தடுமாற, என்ன இந்நேரத்தில் தண்ணீர் கேனா, எனக் கேட்க நாங்கள் கேட்கவில்லையே என்று சொல்ல வந்த அந்த விடியல் கால அழையா விருந்தாளி திணறியபடி உளறிக் கொண்டே இவர் ஒவ்வொரு அடியாய் கேட்டுக் கொண்டே முன்னே வர அவர் பேசிக் கொண்டே பின் செல்ல...இவர் நிலையை உணர்ந்து கொண்டு அவரைப் பிடிக்க ஆவலுற்ற வண்ணம் விரைவாக நடக்க அவரோ ஓட ஆரம்பிக்க,
உடனே வந்தியத் தேவன் திருடன், திருடன் எனக் கூச்சலிட அந்நேரத்தில் கீழ் தரைத் தளத்தில் பணிக்குச் செல்ல தயாராகி தனது இரு சக்கர வாகனத்தை இறக்கிக் கொண்டிருந்தவர் இந்த திருடன் ஓடி வருவதைப் பார்த்து காலை விட அவன் குப்புற விழுந்தடித்து முகமெல்லாம் காயம் பட்டதாக அந்நேரத்தில் தேநீர்க்கடையில் வெளியே தேநீர் அருந்த அமர்ந்திருந்தவர் சொல்லி இருக்குமளவு எழுந்தோடி தப்பித்து சென்றிருக்கிறான்...
ஆனால் அவனுக்கு நல்ல அடி முகமெல்லாம் என பார்த்தவர்கள் சொல்கிறார்கள்...
;;;;;வந்தியத் தேவன். சொல்லக் கேட்டது
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment