ஒரு கவிதையாய் நுழைந்தேன்: கவிஞர் தணிகை
கடந்த 01.10.2020 அன்று வினாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் ஆசிரிய வார விழாவின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வாய் சுகாதாரம் + ஆசிரியர் + பல் மருத்துவர்கள் சமுதாயப் பங்கீடு என்ற இலக்குடன் பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு கவிதைப் போட்டியை நடத்தியது.
Dean Prof.Dr. Baby John VMSDC
கவிதை என்பது உணர்ச்சியை சொல்வது, மேலும் வார்த்தைகளை அழகுறச் சொல்வது என்ற அடிப்படையில் என்ன தான் இருந்தாலும் கவிதை கவிதைதான் க=சிறந்த விதை...விதைதான். கருத்தை விதைப்பதுதான்.
என்னை பொது உறவு அலுவலர் என்ற முறையிலும் ஒரு கவிஞர் என்ற முறையிலும் சிறுவர் பல் மருத்துவத் துறையின் தலைவர் மற்றும் அசோசியேட் டீனாக இருக்கும் பேராசிரியர் சுரேஷ் குமார் அவர்கள் கவிதைப் போட்டியின் முடிவை அறிவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் செய்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக வந்திருந்த கவிதைகளை எழுதிய கவிஞர்களின் வரிகளை நினைவு கூரும் விதமாக பரிசு அளிப்பு விழா நடைபெறும் அன்று ஜூம் காணொலி வழிக் காட்சி சந்திப்பில் எனது கருத்துகளை இடம் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்காக எனது பகிர்தல்கள் அன்று ஜூம் காணொலி வழிக் காட்சி வழியே பல பேராசிரியர்களையும் ஆசிரியப் பெருமக்களையும் மற்றும் மருத்துவர்களையும் சென்றடைந்தது.
முடியவே முடியாது என்ற களங்களில் தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது
காலக் காற்றில் பூக்கள் உதிரிந்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும் என்று
முப்பதாண்டுக்கும் முன்பே எழுதியிருந்தேன்
அதன் இலக்கணமாக கடந்த ஐந்தாண்டாக
எங்கள் கல்லூரியின் முதல்வரைப் பார்க்கிறேன்
மிகையில்லை பொய்யில்லை வெறும் புகழ்ச்சியுமில்லை
இந்த வாய்ப்பு தந்த எங்கள் கல்லூரி டீன் பேராசிரியர் பேபிஜான் அவர்களுக்கும்
எனை நண்பராகவே அணுகி, நட்பு பாராட்டி வரும்
இணை டீன்( டீன் என்ற சொல்லுக்கு சரியான தமிழ் சொல் கிடைத்தால் கூறுங்கள்)
அசோசியேட் டீன் துறைத் தலைவர் பேராசிரியர் சுரேஷ்குமார் அவர்களுக்கும்
பேராசிரியர் வினோலா, ஆசிரியர்கள் கிருத்திகா, நந்தினி, பிரதீப் டேனியல் கைன்னஸ், சாந்தரூபன் ஆகியோர்க்கும் முதுநிலை பயின்று வரும் மருத்துவர்கள் ஒரிஸ்ஸா கார்கி, ஸ்டேசி ஆகியோர்க்கும்
முன் களப் பணியாளர்களுக்கும்
இந்தப் போட்டிகளில் பங்கு பெற்ற ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வணக்கங்கள்
ஒரு நல்ல கவிதையின் படிக வரிகள்
மனதை விட்டகலாது
ஒரு சிறந்த விதை மண்ணுக்குள்ளேயே மக்காது அது போல
இந்த போட்டிக்கு வந்திருந்த கவிதைகள் யாவுமே
சிறப்பாக இருந்ததுடன் முடிவை சொல்வது சவாலான பணியாகவே
இருந்தது போட்டியின் பரிசுக்குரிய இட நிர்ணயம் என்பது எளிதாக இல்லை.
கற்களின் வழியே உருவங்கள் தெரிகின்றது
சிலைகளுள் கடவுள் உருவங்கள் தெரிகின்றது
சொற்களின் வழியே அருவங்கள் தெரிகின்றது
பற்களின் வழியே உடல் நலம் பொழிகின்றது
நற்கலைகளுக்கு வழிகாட்டியாய் கல்லூரி பணி விரிகின்றது
விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார்
பல் மருத்துவக் கல்லூரியின் நற்பணி விரிகின்றது
அது ஆசிரியர்களையும் மாணவச் சிறார்களையும்
அன்பால் பிணைக்கின்றது ஆவலுறச் செய்கின்றது
இந்த ஆறாம் எண் சிறுவர் பல் மருத்துவத் துறை
அரும் பணியாற்றி பல் பிணி போக்கி
பொங்கி அழும் குழந்தைக்கும் ஆறுதல் மொழியால் தேற்றி
நோய் வரு முன் காக்கும் சிறப்புடன்
சேய்களைக் காக்கும் தாய் வழிப் பொறுப்புடன்
இந்தக் கருணை மழையின் ஒரு துளியாய் நானும்
இன்று
இங்கு
சில கவிதைச் சாரல்களை கவி ஊறிய தேறல்களை
உங்களுடன் சேர்ந்து தெளித்துக் கொள்கிறேன்
தெளிந்து பகிர்ந்து கொள்கிறேன்
ஒரு கவிஞர்: சிரிப்பின் பின்னே சிதறிக் கிடக்கும் பற்களின் அருமை
யாருக்கும் புரிவதில்லை என்கிறார்.
உண்மைதான் பல்லுக்கு பத்து துறை பற்றுதலைக் கண்டேன் கல்லூரியில்
ஆலங்குச்சி வாழ்வைத் தொடங்கி விஞ்ஞானத்துடன் விதவிதமான
தூரிகைகள் 3 நிமிடம் மட்டுமே என அறிவியலையும்
வாழ்வின் நெறியையும் இணைக்கிறார் இன்னொருவர்
( காலையும் இரவும் 3 நிமிடம் மட்டுமே பல் துலக்க வேண்டும்)
செடியில் பூக்கும் மலரை விட நொடியில் பூக்கும்
உன் சிரிப்புக்கு விலைதான் உண்டோ?
பொக்கை வாயில் வெட்கம் கலந்த புன்னகை
என மற்றொருவர் மழைக்கும் மழலைக்கும்
மகுடம் சூட்டுகிறார் மலரை விட மழலை அழகு என
இது எனக்கு காந்தியையும் குழந்தையையும் ஒரு சேர வைக்கும்
பார்வையைத் தந்து நிற்கிறது.
பல்லை கூழாங்கல் அழகுவமை செய்கிறார் ஒருவர்
பல் சிந்தனை எனும் தீபமேற்றி வாய் சுகாதாரம்
விழிப்புறச் செய்கிறார் மற்றொரு ஆசிரியர் அல்ல அல்ல கவிஞர்
முகத்துக்கு அழகு பல் என்றவர்
சொல்லையும் பல்லையும் இணைக்கிறார்
தம் வைரச் சொல்லாலே!
எப்படி எனில் சுவத்து ருசிக்க நா(க்கு) பேசவும் அவசியம்
கடித்து அரைக்கப் பல் அவசியம் பேசவும் அவசியம்
ஆனால் நா மென்மை பல் வன்மை
மென்மையும் வன்மையும் இணைத்து
உண்மை செய்திருக்கிறார் பெண்மைக்கும் ஆண்மைக்கும்
பாலமிடுவது போல ஆனால் பல்லின் பலம் சொல்லி
பலனையும் பலத்தையும் பெருமை பாடி இருக்கிறார்
வாய்த் தாய் பெற்றெடுத்த வளமிகு குழந்தைகள் 32
யாவும் இறைவன் தந்த இயற்கைத் தந்தங்கள் எனும் ஒருவர்
பல் தேய்த்தலிலும் அழகை காணும் ஒருவரோ
சொத்தை இல்லா பல்லே அழகு என்கிறார்
எல்லாவற்றையும் விட ஒரே வரியில் உன்னதப் படி ஏறுகிறார்
ஆசிரியர் தாய் அன்பிற்கும் கண்டிப்புக்கும் அவளே தாய்
அவளே ஆசிரியர் என்று...தாய் வேறு ஆசிரியர் வேறல்ல
என்று கற்பிதம் செய்கிறவர் ஒன்றாகி நிற்கிறார் கவிஞரும் ஆசிரியருமாய்
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் கற்றுத் தந்த ஆசான்
உயிருள்ள மெய்யைப் பற்றி கற்றுத் தந்த ஆசான்
கற்றுக் கொண்ட மெய்யுறுப்பில் பற்கள் முக்கியம் தானே
என்கிறார் என்னே ஒரு கருத்துச் செறிவான உயிரோட்ட ஒப்புமை
உங்கள் யாவரையும் வணங்குகிறோம்
பள்ளி விட்டதும் வீடு நோக்கி பிள்ளைகள் ஓடுவது மாறி இனி
வீட்டை விட்டு பள்ளிக்கு பிள்ளைகள் விரைந்தோடி வரும்
உங்கள் தாய்மை கண்டு ஆசிரியப் பணி மேன்மை கண்டு
அந்தக் காலம் விரைவில் வரும் என்ற நம்புதலோடு
HERE ARE SOME HONEY DROPS IN ENGLISH:
1. Sensitive teacher is like a sensitive teeth
Be smile to every one be sensitive to every one
2. Without talent we can't teach
With out teeth we can't teach
3. Face is the index of the mind
But a Smile is the index of the face
Dental care by the words tutors
Decides the destiny of the modern makers
what a vision and Future out look!
4. One Rhyme says:
Taking too many choclates
Will give you cavities
Jaani jaani yes ma
Telling lies no ma
It remembers the popular Rhymes
5. A teachers planting seeds of knowledge
I like to plant of yours teeth
In this sense teacher acting as a Dentist
Dentists acting as Teachers
6. When my parent tell me to do my home work
My teacher taught me importance of hard work
Education can give me success
I cannot achieve this with out my teachers
As I Grow older, I will be get teachers new
So; learning never ends.
Here through this Golden words we are clearly understood
The importance of Education for ever
7. Your Teeth are unique to you
Just like your fingerprint...
Yes it is very truthful scientific coined words
even Forensic Department is considering
Finger prints, Teeth (bites and presses symptoms) and
Retina are proofs even to Twins to differentiate
in criminal procedures.
8. Twice in a day in the morning and at the night
Brush: up and down up and down
It symbolically refers to me To remembering
Up and down of our life journey
9. I do have a cavity this candy has their own Gravity
What a Rhyming...cavity and Gravity...
10. Don't often eat chocolate, don't don't don't with mothers care
Here I conclude this happiest occasion with memories.
கவிஞர் தணிகை
நன்றி சொல்வது நாட்டுக்கு மரபு
மரபை வெல்வது எங்களின் புதிய வரவு
வார்த்தைகளை இதயத்தில் பதித்துக் கொள்வோம்
வெறும் ஏடுகளிலும் சொற்களிலும்
புதைத்துவிடாமல்...
புதைத்தாலும் அது செடியாய் வளர்ந்து
மறுபடியும் பூக்கும்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment