Wednesday, October 7, 2020

முகக் கவசம்: கவிஞர் தணிகை

 முகக் கவசம்: கவிஞர் தணிகை






ஒருவர் தனது முகக் கவசத்தை எடுத்து முகத்தின் வேர்வை அனைத்தையும் துடைத்துக் கொண்டார் மறுபடியும் போட்டுக் கொண்டார் கழட்டி கால்சட்டை பையில் சுருட்டி வைத்துக் கொண்டார். மறுபடியும் சிறிது நேரம் கழித்து அணிந்து கொண்டார் மறுபடியும் கழட்டி முகத்தை அதனால் துடைத்தார். மறுபடியும் போட்டுக் கொண்டார். இது பேருந்தில் பயணத்தின் போது காண நேர்ந்தது. எனக்கு இரத்த அழுத்தம் சற்று கூடியது.


மற்றும் சிலர் முகக் கவசம் அணியச் சொல்கிறார்களே என காதில் மாட்டிக்  கொண்டு வாயை, முகத்தை , நாசியை மூடாமல் தாடையை மட்டும் மூடியபடி இருக்கின்றனர். எதற்காக அணியச் சொல்கிறார்கள் என்ற பொருள் தெரியாமல்..


இன்னும் சிலர் ஒரு முறை பயன்படுத்திய முகக் கவசத்தையே தூக்கி எறியும் வகையில் பயன்பாடு உள்ளதை மறுபடியும் சில நாட்கள் அதையே அணிந்திருக்கிறார்கள் இத்தனைக்கும் அவர்களைப் பார்த்தால் படிப்பறிவு உள்ளவர் போலும் தெரிகிறது.


இன்னும் சிலர் அழுக்கான துணியால் ஆன முகக் கவசத்தை நீரால் சுத்தம் செய்யாமல் அப்படியே போட்டுக் கொண்டு வருகிறார்கள் பொது இடங்களில் ...இது போன்ற பாதிப்புகள் மட்டுமே இந்த பதிவுக்கு காரணமாகின்றது


இன்னும் சிலர் அதை அணியாமல் யாராவது சொன்னால் அல்லது பொது இடங்களில் பேருந்து நடத்துனர் அல்லது அக்கம் பக்கம் யாராவது சொன்னால் அதற்காக அல்லது சொல்லி விடுகிறார்களே என அதற்காக அணிகிறார்கள்...ஆனால் அருகே வந்து தனது உரிமையை நிலை நாட்டி தாமும் அமர பேருந்துக் கட்டணம் கொடுத்துள்ளோம் ஏன் நின்று கொண்டு வரவேண்டும் என்ற ஆளுமை செய்ய மட்டும் மறப்பதில்லை.


சிலரோ துண்டைக்  கட்டியும் கட்டாமலும், சிலரோ கைக்குட்டையை கட்டியும் கட்டாமலும் சிலரோ சேலை முந்தானையை எடுத்து வாயை யாராவது பார்க்கும் போது பொத்தியும் பொத்தாமலும்....


அதிலும் சில பெண்கள் அதைப் பற்றி கவலை இன்றி இருக்கிறார்கள்.


இவை இப்படி ஒரு பக்கம் என்றால் சிலர் நடைப் பயிற்சி செய்யும் போதும் மெல்லோட்டம் ஓடும் போதும், உடற்பயிற்சியும் செய்யும் போதும் அணிந்து மிகவும் பயந்து போய் புரியாமல் இருக்கிறார்கள். 


அதை எப்போது எப்படி அணிய வேண்டும் என ஒரு வகுப்பு எடுத்து அதன் பின் இந்த மக்களைப் பயிற்றுவித்து தயார் செய்தால் தேவலாம். சில தொடர்பு வழி சாதனங்களிலும், ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் சொல்கிறார்கள் ஆனால் நமது மக்கள் கேட்பதாக இல்லை.


உலக சுகாதார நிறுவனம் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அணியத் தேவையில்லை எனப் படித்த நினைவு...மேலும் உடற்பயிற்சி செய்யும் போதும் நடைப்பயிற்சி செய்யும் போதும் அணிய அவசியமில்லை. அது தேவையற்ற ஆபத்துகளை பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். அப்படி  ஓடிக் கொண்டே ஒருவர் முகக் கவசத்தை அணிந்து இறந்ததாக செய்தி இருக்கிறது. 


நேற்று கூட அறிவியல் சார்ந்து அனைத்து நாடுகளையும் இணைத்து ஒரு அடிப்படையான செய்தி வந்திருந்தது. ஏரோசெல் என்று காற்றிலேயே இந்த வைரஸ் பரவுவது என்று சொல்வது உண்மைதான் என உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது 34 விஞ்ஞானிகள் 234 புள்ளி விவரங்கள் அடிப்படையில் அதை இந்த உண்மைசெய்தி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது அவை சில மணி நேரங்கள் கூட உயிர்ப்போடு இருந்து பரவ வாய்ப்பிருக்கிறது என்றும் செய்தி இருக்கிறது


எனவே முகக் கவசம் அணிவது எப்படி அணிவது எப்போதெல்லாம் அணிவது இவை எல்லாம் மிகவும் அறிந்து கொள்ளப் பட வேண்டியதுதான். பொது இடங்களில் முகக் கவசம் இன்றி சென்று வருதல் மிகவும் ஆபத்தானது இன்றையக் காலக் கட்டத்தில் மேலும் கிருமி நாசினியை சானிட்டைசர் கொண்டு உள்ளங்கைகளை அடிக்கடி தூய்மைப் படுத்திக் கொள்வதும் வெளியே சென்று வீடு திரும்பும் போது குளியல் எடுப்பதும் அவசியமே. இதை எல்லாம் நமது தமிழ் மரபில் சொல்லி வந்தார்கள் அதை எல்லாம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய காலம் இது. மேலும் மூச்சுப் பயிற்சி, நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கும் உணவு வகை, வாழ்வு முறை அவசியம்...


முகக் கவசம் அணியாது வருவார்க்கு அபராதம் என அரசு சொல்லியது...பொது இடங்களில் உமிழ் நீர் துப்புவது அபராதம் என்றெல்லாம் சொல்லிய அரசு அது பற்றி ஏதும் கண்டு கொள்ளவே இல்லை.  பொது இடங்களில் புகை பிடிப்பது தவறு அபராதம் விதிப்போம் என்றகதைதான். மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர் மேல் எடுக்கும் நடவடிக்கை போலவே இந்த உயிர் ஆபத்துக் காலத்திலும் அரசு ஏனோ தானோ என மக்கள் கைகளிலேயே அவர்கள் பொறுப்பைக் கொடுத்து இருக்கிறது அவர்களும் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இருக்கும் காலக் கட்டத்தின் பாதுகாப்பற்ற நிலையை உணராமலேயே...


மாஸ்க் என்ற ஆங்கில திரைப் படத்தில் ஜிம் கேரி அசத்தி இருப்பார். மாஸ்க் என்றால் முகக் கவசம்....சரி முகக் கவசம் அணியாமலே முகத்திற்கு கவசம் அணிந்து கொண்டு உணர்வலைகளை வெளிக்காட்டாமல் இருப்பது மனித இனத்துக்கு கைவந்த கலையாகிவிட்ட்டது. அதன் பேர் நாகரீகம் என்றும் அந்த மனிதரே விலங்கினத்திலிருந்து மாறுபட்டவர் என்கிறோம்...


அதுபோன்ற மாஸ்க் பற்றி நாம் பேசவில்லை. சில முகங்கள் முகக் கவசம் அணிந்தபோதுதான் பார்க்க நன்றாக இருக்கிறது முகக் கவசம் உண்மையிலேயே அவர்களை அழகாக்கி விடுகிறது

சில முகங்கள் முகக் கவசத்திற்கு உள் இருக்கும் முகத்தை காணத் தூண்டி விடுகிறது.

சில முகங்கள் முகக் கவசம் ஏன் அணிந்துள்ளார்கள் இல்லையென்றால் அவர்களை நன்றாக பார்க்க முடியுமே என்று ஆவலைத் தூண்டியும் விடுகிறது.


கிராமங்களின் இடைவெளி இன்னும் அந்த அளவு கொடுமையாக மாறவில்லை...



தூயக் காற்றை சுவாசிப்போம்

எச்சரிக்கை உணர்வைக் கடைப்பிடிப்போம்

நீண்ட நாள் வாழ்வோம் கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பை நழுவ விடாமல் என்று சொல்லி முகக் கவசத்துடன்  இந்தப் பதிவுடன் முடிக்கிறேன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

1 comment:

  1. Thank you for your comment on this post.Elumalai.vanakkam.please keep contact

    ReplyDelete