தமிழ் நாடு அன்பு வழி அறப் பணி மன்றம் காந்தி 151 வது பிறந்த நாள் விழா: கவிஞர் தணிகை
02.10.2020 இன்று தமிழ் நாடு அன்பு வழி அறப் பணி மன்ற காந்தி 151 வது விழா சிறப்பாக காணொலி காட்சி ஜூம் வழியே நடைபெற்றது காலை 10 மணி முதல் மதியம் 1.45 மணி வரை.
இதன் நிறுவனர் கொ.வேலாயுதம் குரல் வழி ஆசியுடன் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னியின் செல்வன் முத்து ஐ.ஏ.எஸ் தேசிய பாதுகாப்புத் துறை தகவல் அலுவலர் தமிழ் நாடு மற்றும் புதுவை மாநிலம் கலந்து கொண்டு அறம் செய விரும்பு என்ற தலைப்பில் தமது சிறப்புரையை செய்தார்.
கடந்த சில மாதங்களாகவே பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப் பட்டன. அதன் முடிவுகள் அறிவிக்கப் பட்டு பரிசுக்குரியவர்களை நிகழ்வில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறுவர்கள் பேசினார்கள், பாடினார்கள். அத்துடன் பால் போஸ் தமது வழக்கமான பாடல்களை பாடி உற்சாகப் படுத்தினார்.
நிகழ்ச்சியை அன்னபூரணி லெனின் கண்ணன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார் அதற்கு ஒரு துணையாக அமெரிக்க ஏழுமலை தொழில் நுட்ப இயக்குனராக இருந்து ஜூம் காணொலிக் காட்சியை சிறப்பாக நடத்தினார். அமரக்குந்தி விஸ்வநாதன் நிகழ்வை கோர்வைப் படுத்தினார்.
துவக்க உரையாற்றினார் இதன் கொள்கை நெறி வழிகாட்டியும் சிறப்பு ஆலோசகருமான விடியல் குகன்,மாநிலத்தலைவர் அறிவியல் அறிஞர் சுகுமாறன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்
நிம்ஸ் ராமலிங்கம் செயலாளர் அவர்கள் மன்றங்களை திறந்து வைத்து அத்துடன் வரவேற்புரையாற்றினார்.
இன்ன பிற மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் சுமார் 80 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். பங்கு பெற்றனர்.பிரதிநிதித்துவம் செய்தனர். வாழ்த்துரை வழங்கினர்.
எனக்கு அன்பு வழி ஆக்க உரை வழங்கப் பட்டிருந்தது:
ஹத்ராஸ், பல்ராம்பூர், திருப்பூர் ஆகிய இடங்களில் பெண்களின் உரிமை களவாடப் பட்டு பிணக்குழியில் தள்ளும் பட்டுக் கொண்டு இருக்கும் போது கிராம சபைக் கூட்டங்கள் கோவிட் 19 என்ற காரணத்தால் நடத்தப் படாத காலக் கட்டத்தில் இந்த 151 வது காந்தி பிறந்த நாளை தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றம் சார்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம்
இந்த நான் அணிந்திருக்கும் மேல் சட்டை40 ஆண்டுகள் பழமையானது அது போல இந்த மன்றம் புதியதல்ல இதன் பின் 40 ஆண்டுகளின் விழுப்புண் ஒளிந்து கிடக்கிறது எப்படி ஒரு குழந்தை கருவுற்ற காலத்தில் இருந்து அதன் ஆயுள் துவங்குகிறது என அறிவியல் சொல்கிறதோ அப்படிப் பட்ட ஒரு கரு உருவான காலம் இந்த மன்றத்தின் பின்னும் இருக்கிறது.
இதன் இலக்கு: கூச்சப் பட வேண்டியதில்லை சொல்வதற்கு ஒன்று: மனித மல மேலாண்மை அதாவது மனிதக் கழிவு மேலாண்மை இரண்டு எல்லா உயிர்களின் பசி தீர்த்தல் அல்லது எல்லா உயிர்க்கும் உணவளித்தல் என திருவள்ளுவர், காந்தி ,அம்பேத்கர், காமராஜ், பாரதி வள்ளலார், தெரஸா, கலாம் போன்றோரின் நற்பணிகளை தொடர வைக்கும் ஒரு ஒளி விளக்காக இருக்கும் என பொருள் படும்படி தெரஸாவின் ஆகாய விமானத்தின் போது நோபெல் பரிசு பெறச் செல்லும் போது இலவச பயணத்திற்கு அனுமதி அளித்ததற்கு பிரதியாக விமானத்தின் ஓய்வறைகளை அதாவது கழிவறைகளை சுத்தம் செய்கிறேன் என்று கேட்டதும், மனிதக் கழிவை அப்புறப் படுத்தும் கரங்களையே கடவுளின் கரங்களை விட அதிகம் நேசிப்பேன் என்றதும்
காந்தியின் ஸ்மேட்ஸ் என்ற ஜெயிலர் இவரை மலம் கழிக்க விடாமல் தமது காலணியால் எட்டி உதைத்து சீக்கிரம் சீக்கிரம் என்றவர்க்கு சிறை வாழ்வில் சுய தொழில் கற்றுக் கொண்டு அதிலும் காலணி தைக்க கற்றுக் கொண்டு முதல் காலணியை அந்த ஸ்மேட்ஸ் என்ற வெள்ளைக்காரருக்கு அன்பளிப்பு செய்த நிகழ்வால் அவர் மனம் மாறி இங்கிலாந்து சென்று அந்தக் காலணிகளை அணியாது தமது பூஜையறையில் வைத்து பூஜித்த நிகழ்வையும்
காமராசரின் விருதுப் பட்டி வீட்டின் முன் போடப்பட்ட பொதுக் குடி நீர்க் குழாய் தாய்க்கு எதிராக அப்புறப் படுத்தி முதல்வரான காமராசர் உத்திரவிட்ட நிகழ்வையும்,...
திருப்பூர் குமரன் சென்னிமலையிலிருந்து இரவோடு இரவாக திருப்பூர் ஏன் குடியேறினார் அதன் பின் சரித்திரமானார் என்ற நிகழ்வையும்...அவர் திருமணத்திற்கு ஒரே நாளில் 8 ரூபாய் மொய் வைக்க அவமானப் பட்டுக் கொண்டு வந்த ஒரு நெசவுக் குடும்பம் சார்ந்தவர் என்ற செய்தி குறிப்பிட்டு
இந்த 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை காந்தி, சாஸ்திரி , காமராசர், திருப்பூர் குமரன் வள்ளலார் என்ற மாமனிதங்களை ஏன் காலக் குறிப்பில் ஏற்றி இருக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டி...
இன்றைய இளைஞர்கள் புகை , மது, போதை , இலஞ்ச ஊழல் சாதி மத இன மொழி நிற நாடு என் பிரிந்து சக்தி தெரியாமல் கிடக்கிறார்கள் அவர்களை இந்த மன்றம் பயன்படுத்த இணைக்கட்டும்...
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
ஆகாறு அளவிட்டிதாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை என்று
வருவாய் குறைவாக இருந்தாலும் அதற்கேற்ப செலவை செய்தால் மனிதம் மேம்படும், இன்றைய இளைஞர்களை வரதட்சிணை மற்றும் மொய் போன்ற பிணிகளிலிருந்து முதலில் வெளி வர விழிப்புணர்வு கொடுக்க இந்த மன்றம் உதவட்டும் என்றும்
அனைவரும் தனிப்பட்ட பெயருக்கே அவரவர் பெயர் இடம் பெற வேண்டுமென்றே பொதுச் சேவைக்கு வருவோர் எல்லாம் ஆசைப்படுகிறோம். ஆனால் இயக்கம் அதை விட தனி மனித மகத்துவங்களை எல்லாம் விடப் பெரியது அப்படி இயக்கப் பணிகளை எடுத்துக் கொள்ளும் போதுதான் இயக்கமானது செழித்து வளரும் மேலும் நல் இலக்கு நோக்கி இலகுவாக பீடு நடை போடும் என்றும் குறிப்பிட்டேன்
மேலும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல நீங்கள் யார் என்றால் பெயரிலேயே சாதி, மத, மொழி, நிற அடையாளங்கள் நாடு பிரிவினை போன்ற எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு மனிதம் என்ற மொழி மலரும் போது மட்டுமே மனிதம் மேம்படும் என்றும் எனவேதான் எனது மகன் மணியம் என்ற பேரை ஆங்கிலத்தில் மேன் ஐ எம் என்று வருவதாக வைத்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டேன்.
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு
என்ற குறள்களையும் கோர்த்து காலம் கணக்கை வைத்து மிகவும் சுருக்கமாக மிக நிறைவாக முடித்து சிறப்பு பேச்சாளருக்கு வழி விட்டேன்...
இந்த காந்தி பிறந்த நாள் நிகழ்வை முன் வைத்து குறும் பட போட்டியை விடியல் குகன் நடத்தி முதல் பரிசு ஆயிரம் இரண்டாம் பரிசு 750 என்றும் மூன்றாம் பரிசை 500 என்றும் வழங்கி இருந்தது மிகவும் மறக்க வொண்ண குறிப்பிட வேண்டிய நிகழ்வாகும்....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
நன்று!
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletethanks vanakkam.
ReplyDelete