அன்பின் வழியது உயிர் நிலை: கவிஞர் தணிகை
காலை 6.45 மணி பேருந்து ஒர் இளைஞன் என்னைத் தொட நான் அந்த மூவர் இருக்கையில் நகர்ந்து ஜன்னலோர இருக்கைக்கு சென்றமர்ந்தேன். பையையும் நகர்த்திக் கொண்டேன். அந்த இளைஞரைப் பார்த்தேன் முகக் கவசம் அணியாதிருந்தான். முகக் கவசம் அணிய வில்லையா என நான் கேட்பதற்கும் நடத்துனர் வந்து அவர் பங்குக்கு அவரும் கேட்க பாக்கெட் உள்ளே வைத்திருந்த முகக் கவசத்தை எடுத்து மாட்டும் போதே கொரானா வந்திடுமா என்று கேட்டான்.
உடனே செல்பேசியை எடுத்து பேசுவது போல ஒருத்தன் கண்ணாடி போட்டிருக்கிறான் அவனை என பேசி விட்டு கையை ஓங்கி முன்னிருக்கையின் பின் அடித்தான்...
ஒரு கட்டிங் கொடுங்கள் போதும் அதற்கும் மேல் கொடுக்கவே வேண்டாம் என்றான்
அடுத்து எவரிடமோ பேசுவது போல அண்ணா அண்ணா ரீஜார்ஜ் பண்ணி விடுங்கள் அண்ணா காசு தீர்ந்து விட்டது என்றான்
மறுபடியும் இன்னொருவரிடம் பேசுவது போல 30 ஆயிரம் தானே உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது உடனே ட்ரான்ஸ்வர் செய்துவிடுகிறேன் என்றான்...
அப்படியே என்னையும் பார்த்துக் கொண்டிருந்தான் நல்ல வலுவான உடல் தான் அனேகமாக கொத்து வேலை செய்வது போல இருந்தான்...ஆனால் உடனுக்குடன் நிமிடத்திற்கு ஒரு நிறம் என்று மாற்றி மாற்றி உரக்கவும் தாழ்த்தியும் குரலை பயன்படுத்தி பேசினான் என்னையும் அப்படியே பார்த்து வந்தான். நான் அவனை கவனிக்காதது போல கவனித்து வந்தேன் எனது கறுப்புக் குளிர் கண்ணாடிக்குள் இருந்து எனது பார்வை எங்கு இருக்கும் என அறியாதபடி...
இது கடுமையான நிகழ்வாக மாறும் என தென்னாப்பிரிக்காவில் காந்தியை அடித்து பல்லை எல்லாம் உடைத்து அவர் கீழே விழுந்து கிடந்த சம்பவம் நினைவில் வந்தது...ஐந்து வழிச் சாலையில் இறங்கி நண்பராக இருக்கும் ஆட்டோ கண்ணனை எலாம் அழைக்க வேண்டி வருமோ,நடத்துனரை அழைத்து பேருந்தை காவல் நிலையத்துக்கு விடச் சொல்ல வேண்டி வருமோ, ஐந்து வழிச் சாலையில் போக்குவரத்துக் காவலரை அழைக்க வழக்கமாக இருப்பார் இப்போது கொரானா என்பதால் போக்குவரத்து குறைவானபடியால் இருப்பதில்லையே என்றெலாம் நினைவு ஓட்டம்...
அவன் அளவுக்கு நான் உடல் பலம் உள்ளவனாக இல்லை, என்றாலும் நான் சுய நினைவுடன் அவன் ஒரு நினைவின்றி என் மனப் போர் முடிவதற்குள் அவனாக என்ன நினைத்தானோ இவன் எதற்குமே அசர மாட்டேன் என்கிறானே என நினைத்தானோ என்னவோ வேறு இருக்கை காலியான பிறகு அங்கே பின்னால் சென்று அமரப் போய்விட்டான். காலையிலேயே சூடு தலைக்கேறியது இந்த அதிகாலையிலேயே நிலை இப்படி எனில் இவன் வாகனம் எல்லாம் எப்படி ஓட்டுவான் என எண்ணியபடி ஐந்து வழிச் சாலையில் இறங்கி அவன் எனைப் பின் தொடர்கிறானா என பார்த்தபடி நடந்தேன்...
நேற்று கும்பகோணத்திலிருந்து நட்பின் அடிப்படையில் ஒரு குடும்பம் காரில் எங்கள் வீட்டுக்கு வர நேர்ந்தது அவர்களுக்கு வழி தெரியாதே என பேருந்து நிறுத்தத்தில் நின்று ரோஸ் கலர் டீ சர்ட், தலையில் ஒரு நீல நிற தொப்பி, வழக்கத்துக்கு மாறாக வெண்ணிற வேட்டி என அடையாளம் சொல்லி விட்டு காத்திருந்தேன். அவர்கள் வந்து சேர்வதற்குள் ஒரு பைக் வந்து அருகே நின்றது அதில் விடலைகளாக 3 இளைஞர்கள்...வைன் சாப் எங்கே என்று கேட்டார்கள்...சுடுகாட்டில் என்றேன். விழித்தார்கள் மறுபடியும் கேட்டார்கள் அட சுடுகாட்டில் தான் என்றேன் என்னை நம்பவில்ல்லை சற்று தொலைவு சென்று தெரிந்தால் சொல்லணும் தெரியவில்லை என்றால் தெரியலை என்று சொல்லணும் என்று திரும்பி பார்த்தபடி சொல்லிக் கொண்டே சென்றார்கள்
அந்த காய்கறிக்கடையை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் என்னப்பா இது உண்மையைச் சொன்னால் இந்தக் காலத்தில் நம்ப மாட்டேன் என்கிறார்கள்...என சிரித்துக் கொண்டோம். உண்மையிலேயே எங்கள் ஊரில் அரசு மதுபானக் கடை சுடுகாட்டில் தான் இருக்கிறது.
அந்த சுடுகாட்டருகே வேறு திசையில் சற்றுத் தள்ளி மேட்டில் நாங்கள் கட்டி உள்ள கபாலீஸ்வரர் கோயில் நிலமும் அவர்களுக்கு அடைக்கலாமாயிருக்கும் நல்ல வேளை கிருஷ்ணனும் நாங்களும் சேர்ந்து கோவிலாக்கிவிட்டோம். ஆனால் எல்லாப் பெயரையும் போடு என்றதற்கு அதில் சிக்கல் இருக்கிறது என்ற கிருஷ்ணன் அவர் பேர் ஒன்று மட்டும் விளங்கவேண்டும் என்று அந்தக் கதையையும் முடித்து விட்டு, எல்லோரும் சேர்ந்து கட்டிய கோவிலுக்கு யாரும் கர்ப்பக் கிருஹத்துள் நுழையக் கூடாது என பென்னாகரம்
பக்கமிருந்து ஒரு அர்ச்சகர் குடும்பத்தை அழைத்து வந்து பூசை நடத்தி வருகிறார். கஷ்டப் படுவது பலர். சுகம் அனுபவிக்க எனச் சிலர்.
இன்று சொல்ல நினைத்த மற்ற ஒன்று: தலைமை என்பதற்கு முடிவெடுக்கும் திறனும்,தொலை நோக்கும் அவசியம் சில நேரம் காமராசர் கணித்த கணிப்பான இந்திராவே இந்தியா என்று எமர்ஜென்சி ரூல் என்று அனைத்து தலைவர்களையும் பிடித்து உள்ளே போட்ட போது காமராசர் கூனிக்க் குறுகி அந்த விசனத்திலேயே பாதி செத்து விட்டார்.
நாளை அறிஞர் அண்ணா பிறந்த நாள். இவர் செல்லம் கொடுத்த ஒருவர் முன் உள்ளவரை எல்லாம் தாண்டிச் சென்று தந்திர அறிவுடன் ஆண்டதும் ஒரு குடும்ப பாராம்பரிய முறையை கட்சிக்கே கொண்டு சென்றதும் அங்கேயும் தொலை நோக்கு குறுகி விட...
அதன் பின் தமிழக ஆட்சிமை மாட்சிமை பற்றிச் சொல்லவே வேண்டாம்...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதில்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு...
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment