நானும் நட்பாகவே இருக்க விரும்புகிறேன்: கவிஞர் தணிகை
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி/மீதி
தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் அது நாட்பட நாட்படப் புரியும்...கண்ண தாசன்.
சுமார் 30 ஆயிரமளவுக்கு ஊதியம் பெறும் போக்குவரத்து ஊழியர் எனது ஒரு ரூபாயை வைத்துக் கொள்ளப் பார்க்கிறார் சில்லறை அவரிடம் இருந்த போதும் எனக்கு 29 ரூபாய் கட்டணத்துக்கும் போக மீதம் தரவேண்டிய ஒரு ரூபாயை..அரசும் அதை கட்டணத்தை ரூ 30 என மாற்றிக் கொள்ளலாம் அது நாட்டுக்காகவது போகும்...நாடு எனது ஒரு ரூபாயை எனக்கு எனது ஏழமை பார்த்து போய்ச் சேரவேண்டும் என எண்ணும் போது இவர்கள் இடையில் நான் அவர்களை எல்லாம் விட ஏழமையில் இருப்பது தெரிந்தும் தெரியாமலோ எனது உழைப்பை அவர்கள் சேர்த்துக் கொள்ள முனைகிறார்கள்....கேட்டு வாங்குகிறேன் எனவே நான் அவர்களிடம் நட்பாக இருக்க நினைத்தாலும் வாய்ப்பில்லை.
பேருந்தில் கொரானா காலம் ஒதுங்கி ஜன்னலோரம் அமரலாம் என்றால் அங்கும் ஒரு பிச்சைக்காரர் அவருக்கு நான் என்னைக் கொடுத்தால் தான் உண்டு...எனவே அவருக்கும் நான் எதுவும் கொடுக்கவில்லை என ஏமாற்றம்.
சுகாதாரப் பணியாளர்கள் முன்பெல்லாம் ஊதியக் குறைவில் ஊரெல்லாம் திருவிழாவின் போது எல்லாம் வீட்டு வீட்டுக்கு கையேந்துவார்கள் ஒன்று பணமோ அல்லது பட்சணங்களோ உணவுப் பண்டங்களோ கிடைக்கும் ஊரெல்லாம். இப்போது அரசுப் பணியில் உறுதியான போதும் என்னை விட ஊதியம் அதிகமாக கிட்டும் போதும் பெறும் போதும் பழக்கத்தைக் கைவிடாமல் வசூல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதைச் சுட்டிக் காட்டினால் அவர்களிடம் நட்பு பாராட்டும் வழி இல்லை.
வீட்டுக்கு சமையல் எரிவாயு கொண்டு வந்து கொடுக்கும் இளைஞர்க்கு கொடுக்கும் ஒவ்வொரு முறையும் கட்டணத்தை மீறி சுமார் 50 முதல் 70 வரை ரூபாய் சேர்த்து கொடுக்க வேண்டும் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து கொடுப்பதால் மேலும் இவர்களுக்கும் வருடம் ஒரு முறை திருவிழா நன்கொடை வேண்டுமாம் சுட்டிக் காட்டும்போது அங்கே நட்பின் மொழி அற்றுப் போகிறது.
அடிக்கடி மின் வெட்டு நடந்து இணயும் எங்கள் மின் இலாகாவின் மின்வடப் பணியாள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அழைப்புக்கும் மக்களிடையே எதிர்பார்க்கிறார் அதை முறையுமாக்கிக் கொண்டார். நான் தருவதே இல்லை...எனவே அங்கும் நட்பு இடைவிரிசல் ஆகி விடுகிறது...
நீர்க்கட்டண விநியோகம் முறையில்லை எதற்கு மாதம் ஒன்றுக்கு 220 வாங்குகிறீர் இரு நாளைக்கு என்கிறீர் குழாய் பழுது என பல நாள் நிறுத்திக் கொள்கிறீர் நீர் வரத்தும் நிறைவாயில்லை விமர்சிக்கிறேன் அங்கும் நட்பு நடைமுறை இல்லை.
ஏன் தெருவிளக்கு எரிவதேயில்லை அதை பேரூராட்சி பணியில் வருகிறது...மின்சார பணியில் இருந்து மாற்றி தலைமுறை தலைமுறை ஆகிறது...பழைய மக்கள் பிரதிநிதிகளை நன்றாக செய்ய நிழல் போரிடும்போது அங்கும் நட்பு கொஞ்சம் தள்ளிப் போகிறது..
மின் கட்டணத்தை மாதாமாதம் ஏன் எடுப்பதில்லை? ஏன் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீள்கிறது? ஏன் மின் அழுத்தம் குறைவாய் இருக்கிறது...நட்பு தொடருமா? நல்லவேளை மின் கட்டணம் அதிகமாக வருமளவு நடந்து கொள்வதில்லை...
பொது இடங்களில் புகை பிடிக்காதீர் என காண்போரிடையே சொல்வதும், மது அருந்தாதீர் எனச் சொல்வதும், வாகனங்களை கண்ட இடத்தில் நிறுத்தாதீர் என்பதும், வாகனங்களை விதிமுறைப்படி ஓட்டுங்கள் என்பதும் மேலும் பொது இடங்களில் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள் எனச் சொல்வதும் எனக்கு நட்பை முறித்து விடும் நடப்பாகிவிடுகிறது.பொதுக் கழிப்பிடத்தை எப்படி இந்தியா பயன்படுத்தி வருகிறது அது போதுமான அளவு இருக்கிறதா அதற்கு நீர் வசதி போதுமான அளவு இருக்கிறதா என்பதெல்லாம் நான் உள் புகா செய்தி.
சரி வீட்டில் தாம் சகோதர சகோதரி இடையே எதையாவது வெளிப்படையாக சொல்லலாம் என்று விமர்சனம் செய்து தட்டிக் கேட்டாலோ அங்கும் நட்பும் உறவையும் பெரிதாக எதிர்பார்ப்பதற்கில்லை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..ஊருக்கு உழைத்தாண்டி உதை பட்டு செத்தாண்டி...பொது நல வாதி வெகு ஜன விரோதி..
அரசுக்கும் அரசு துறைக்கும் அரசு நிறுவனத்திற்கும் எழுதுகிறேன் சரியான பதில் ஒன்றும் இல்லை பரிசீலனையும் இல்லை எனவே நட்பு பூக்கவே வழி இல்லையே....
இதெல்லாம் அன்றாடம் தேவையான நிகழ்வுகளில் இதல்லாமல் வாகனப் பதிவு, பத்திரப் பதிவு, பட்டா மாறுதல் இப்படி எல்லாம் சொல்லப் போனால்...எனவேதான் ... மத்தியப் பிரதேசத்தில் 1.75lahk வீடு குடி மனைப் புகுவிழாவும் மன்னார்குடியில் வீடே கட்டாமல் பிரதமரின் வாழ்த்துக் கடிதம் வீடு கட்டியதற்கு வந்ததாகவே முடியும்..அதனால் நிறைய முரண்பாடுகளில் உட்புகுவதேயில்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி : முரண்பாடு சிறு உண்மையைக் கூட சவாலாக்கி விடுகிறது என இதை மேஷன் கூலி என்பவர் சொன்னதாக...மேஷன் கூலி எல்லாம் கொடுத்து என்னால் எதுவுமே செய்யவும் முடியாது... இங்கு நிலமற்றார் எல்லாம் கூட பிரதமரின் 6 ஆயிரம் நிதி உதவி பெற்றதான 130 கோடி ரூபாய் ஊழல் மயத்தில் தண்டோரா போட்டு தவறாகப் பெற்ற பணத்தை கட்டச் சொல்லி கேட்டு வருவது இன்றைய நடப்பு... நான் அப்படி ஏதும் செய்ய வில்லை. சரி சொல்ல வந்ததைச் சொல்கிறேன்...
சமூக மேம்பாட்டுப் பணிக்கு வருவார் எல்லாமே காமராசராகவோ அன்னை தெரஸாவாகவோ மாறிவிட முடிவதில்லை. சமூக மேம்பாட்டுச் சிந்தனையாளர்களுக்கும் வாயும், வயிறும், குடும்பமும் வீடும் இருக்கக் கூடாது என்பதில்லையே...
திருப்பூர் குமரன் சென்னிமலையில் இருந்து இரவோடு இரவாக எட்டு திருமணம் ஒன்று சேர்ந்து வந்து ரூபாய் எட்டு திருமண மொய் வைக்க வழியில்லையே என்று ஊரை விட்டு ஓடி வந்து திருப்பூரில் குடியேறிய நெசவுத்தொழிலாளி என்பதை அவரது சரித்திரம் சொல்கிறது.
பாரதியார் போன்றோர் வறுமையால் வாடி இறந்ததும் செக்கிழுத்த கப்பலோட்டிய சிதம்பரனார் தமது செல்வத்தை உழைப்பின் ஊதியத்தை எல்லாம் இழந்த பெரும் வழக்கறிஞர் கடைசியில் வறுமையில் வாடி இறந்ததும் அதற்கு முன் ஒரு வாலே பிரபு என்னும் ஆங்கிலேய பிரபுவே இவரது வழக்கறிஞர் தொழிலுக்கான உரிமத்தை மீட்டுக் கொடுத்தார் என்பதும் அதனாலேதான் தமது மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டதும் அவரது வாரிசுகள் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை சந்தித்து உதவிக்காக கையேந்தி நின்றதெல்லாம் உங்கள் அனைவர்க்கும் தெரியும்.
இப்போது நான் என் கதைக்கு வருகிறேன்:
எப்படியோ சேவை தான் எனது வாழ்வின் போக்கு என ஆண்டுகள் 58 ஓடி விட்டது. மகனை படிக்க வழி என்ன என துணைவியின் இடர் போக்க விவரம் அறிந்த மகனும் வழி கேட்க ஒரு தனியார் கல்லூரியில் பணிக்கு சேர்ந்து வாகன போக்கு வரத்து செலவெல்லாம் போக ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவுக்கு வழி செய்து கொண்டு ஆண்டுகள் சுமார் 5 ஆகி வருகிறது...இதெல்லாம் எங்கிருந்து போதும்? எனவே உற்ற ஒரிரு சகோதரிகளும், ஓரிரு நண்பர்களும் உதவி செய்ய மகனது படிப்பை ஒரு வாறு முடிக்கும் தருவாய்க்கு வந்து நின்று விட்டேன்.
பெரும்பாலும் உடை கூட வாங்குவதில்லை. சகோதரி எடுத்து கொடுப்பதே இப்போதெல்லாம் போதுமானதாயிருக்கிறது மேலும் மகனுக்கு பொருந்தாமல் போன மேல் சட்டை எல்லாம் டிசைன் டிசைனாக கன கச்சிதமாக பொருந்தி போட வசதியாக இருக்கிறது. மேலும் அதிலும் லேசான வெண்ணிற வேட்டித் துணியில் மகன் கேட்டான் என எனது துணைவியார் தைத்துக் கொடுத்த ஜிப்பா அவனது தோள் பட்டைக்கு பொருந்தாமல் போக அது எனக்கே என தைத்த மாதிரி போட அவ்வளவு மகிழ்வாகி நடைப்பயிற்சிக்கு மட்டுமல்ல இனி இது போன்ற பல வேட்டியால் தைக்க வேண்டும் ஜிப்பாக்கள் அதையே போட வேண்டும் என ஆர்வப்படுமளவு துணி தேவை தீர்ந்து போனது...
மேலும் என்னிடம் உள்ள பழைய காலத் துணிகளே புதிதாக இன்னும் இருக்கிறது சுமார் 35 ஆண்டுகள் ஆன போதிலும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னிடம் அது போன்ற துணி ஒன்றை தொலைக்காட்சியில் பேசும்போது போட்டிருந்ததை இன்றும் கூட ரோசா வண்ணத்தில் ஒரு டி சர்ட் இருக்கிறது. எனது மனைவி ஊருக்குள் வந்த வடநாட்டுப் பையன்களிடம் வேடிக்கையாக எடுத்த ஒரு மிகவும் விலை குறைவான துணி சபாரி சூட் ஆக ரிச் ஆன தோற்றம் காண்பிக்கிறது. அதை நான் பெரும்பாலும் சிறப்பான விழாக்களுக்கும், நிகழ்வுகளுக்கும் அணிவது வழக்கம்...மேலும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் எனது தோற்றத்தைக் கண்டு தொலைந்து போவதைப் பற்றி... இப்போது கல்லூரிக்குப் போவதால் ட்ரஸ் கோட் உண்டு. எனவே மேல் சட்டை அதைக் கூட ஒரு சர்ட்டை ரூ 100 என 3 சட்டை எடுத்தோம்...அது போடும் போது கூட மிக நன்றாக இருக்கிறதே புதிதா என்று கேட்கிறார்கள்...அதை மின் சலவை எல்லாம் செய்வது சுயமாகவே.. மறுபடியும் அது போன்று எடுங்கள் சார் அந்த வியாபாரி வருகிறார் என்றார் தொழில் முனை நண்பர் எதற்கு வேண்டாமே எனக்கு தேவைக்கும் மேல் சட்டை சேர்ந்து விட்டது என்று சொல்லி விட்டேன். .மேலும் முகச் சவரம் முடி வெட்டிக் கொள்ளுதல் எல்லாமே சுயமாகவே. எனக்கு தீய வழக்கம் இல்லை எனவே செலவு இல்லை...
மேலும் தாய் தந்தையர் கட்டிய அதே கூரை தொங்கிக் கொண்டிருக்கும் அதே ஓட்டு வீடு ...வாடகை இல்லை. ஆக இருப்பிடம் தேவையும் நிறைவாகவே ... இணையத்துக்கும் இதர திடீர் செலவெல்லாம் வராமலிருந்தால் கண்ணாடி மின் இழை இணையத்துக்கு ரூ. 577 கட்ட வேண்டி இருக்கிறது...
ஆக இப்படி எல்லாம் இருக்கும் போது அரசுப் பணியாளர்கள் என்னை நிர்பந்தித்து இலஞ்சம் தந்தால் தான் முடியும் என்னும் கோட்டை தொடும் போது எனது நட்பு கை நழுவிப் போய் விடுகிறது.
மற்ற படி நான் இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிப்பவன் தான். என்றாலும் களை எடுத்தால் தான் பயிர் வளரும் என்பதும் இராமலிங்க வள்ளலாரின் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் மனம் மிக வாடினேன் என்பதுவும் என்னுள்ளும்...
அரசுப் பணியாளர் பற்றி எனது உற்ற நண்பர் ஒருவர் உங்கள் பார்வை ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வி கேட்டதன் அதிர்வலைகள் இன்னும் கூட அடங்கிய பாடில்லை...என்றாலும் இன்று எனத் தேடி வெகு தொலைவிருந்து சில நண்பர்கள் வீடு நோக்கித் தேடி வருகிறார்கள் எனவே அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டி இத்துடன் இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்.
உள்ளதைச் சொன்னால் உடன் எரிச்சல்...என்ற பழமொழி...நாம் மனிதரை எல்லாரையுமே நேசிக்கிறோம் அவர்தம் செயல்பாடுகளையே விமர்சிக்கிறோம்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபராமே...தாயுமானவர். பராபரக் கண்ணி..
யாதும் ஊரே யாவரும் கேளிர்...கணியன் பூங்குன்றனார்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment