வாழ்வு என்பதே அப்படித்தான்: கவிஞர் தணிகை
இரவு 9 மணி சுமார் இருக்கும் வினோத் செல்பேசினான்.
சார் மதி கண்டக்டர் இறந்து விட்டாராம்.
அப்புறம்தான் பார்த்தேன் கே 7 வாட்ஸ் அப்பியிருந்தான் அதே செய்தியை ஆங்கிலத்தில் .
மதியழகன் நடுத்தர வயதுள்ள மனிதர், நாகரீகமாக பழகும் தன்மையாளர், தமது இரண்டாம் பெண்ணுக்கும் திருமணம் செய்துவிட்டார். அந்த திருமணத்தின் போது அழைத்தார். செல்ல முடியவில்லை. எனது வழக்கமான நடைமுறைப்படி புத்தகத்துடன் வாழ்த்துடன் ஒரு பரிசு அளித்தேன்.
அந்த சங்கமேஸ்வரா பேருந்தில் மூன்று ஜி என்றும் சொல்வார்கள் ,முன்னால் அப்படித்தான் போட்டிருக்கும் சிறிய ஆங்கில வடிவ எழுத்துகளில். கல்லூரிப் பணிக்கு சேர்ந்தது முதலே காலையில் முதல் சேலம் செல்லும் பயணிகளில் நான் முக்கியமானவன் என என்னுடன் பேருந்தில் காமனேரியில் ஏறி டொயாட்டாவில் பணி புரியும் கேசவனும், (நான் அவரை கே 7 என்றே அழைப்பேன்) சேலம் கடையில் பணி புரியும் 22 வயது கள்ளமில்லா இளைஞர் வினோத் போன்றவரும் நினைத்து வருகின்றனர்.
மதியழகன், கறுப்பு துரை, அருண்( பயிற்சி நடத்துனராக இருந்து நடத்துனராக பணி வாய்ப்பு பெற்றவர்) போன்றவரே அதிகம் அந்த பேருந்தில் நடத்துனராக வருவார்கள். இன்னொருவர் திருவிழாவுக்கு திருவிழா எட்டி பார்ப்பார்
என்னைப் பற்றி தெரிந்து கொண்டு எனது ஒரு புத்தகத்தை பெற்ற அந்த பேருந்தின் உரிமையாளர் ஒராண்டு காலம் எனக்கு மட்டும் ஒரு ரூபாய் தினசரிக் கட்டணத்தில் தள்ளுபடி செய்து கொடுத்தார். அதன் பின் எல்லோரையும் போலவே எனக்கும் கட்டணம். எனவே அந்த மீதி வரும் ஒரு ரூபாயை தவறாமல் வாங்கிக் கொள்வேன் கொடுத்து விடுவார்கள். ஆனால் அதற்காக எல்லாம் எமது தொடர்போ நட்போ கெட வில்லை. காலப் போக்கில் இடையில் மாலையில் வரும் தொடர் வண்டியும் இந்த தனியார் போக்குவரத்து பேருந்து முதலாளிகள் கவனித்ததால் நிறுத்தப் பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. எனவே பேருந்து தவிர வேறு வழி இல்லை எங்களுக்கு.
ஒரு முறை மதியும் கே 7 ம் வினோத் இரவு திரும்பி வரும்போது உறங்க விளையாட்டுப் போக்கில் அவனுடைய செல்பேசியை எடுத்துக் கொள்ள அதை திரும்பிக் கொடுத்து விட்ட போதும் அன்று பயம், கோபம் கொண்ட வினோத் பல நாட்கள் வரவில்லை. சமாதானப்படுத்தி அது வெறும் விளையாட்டுதான். கோபித்துக் கொள்ளாதே என மறுபடியும் வரவழைத்தேன்.
மதி கே 7 அதன் பின் அது போன்ற விளையாட்டுகளில் எல்லாம் ஈடுபடுவதே இல்லை
மதி ஒரு நல்ல நபர். எப்போதும் இருவரும் வணக்கம் பரிமாறிக் கொள்வோம். இன்றைய விசேடச் செய்தி என்ன சார் எனக் கேட்பார். மேலும் அருகே யாருமில்லை எனில் பேருந்தில் கூட்டம் இல்லை எனில் எனது இருக்கை அருகே வந்து அமர்ந்து கொண்டு சில நிமிடம் பேச ஆர்வப் படுவார்.
சத்தமாக பாடல் ஒலிபரப்பி வரும் நிலையில் நான் வழக்கமாக காதில் பஞ்சை வைத்துக் கொள்வது வழக்கம். அதைப்போலவே என்னிடம் இருந்து பஞ்சை வாங்கி அவரும் வைத்துக் கொண்டார்.
அந்த மனிதர் எப்படி எப்போது இறந்தார் என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை
வந்திருந்த புது நடத்துனரிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டு விசாரித்தேன். மாமங்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மதியை சரக்கு லாரி மோதி ஏறி கொன்றதாக செய்தி. அன்றே எல்லாம் முடிந்து விட்டதாம். முடிந்த பின் தான் செய்திகள் கிடைக்கின்றன... வாழ்வு என்பதே அப்படித்தான்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
சங்கமேஸ்வரா பேருந்து நடத்துனர் மதியழகனின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பம் இந்த மீள முடியா விபத்திலிருந்து மீண்டு சாதாரண வாழ்வுக்குத் திரும்ப இயற்கை உதவட்டும்.

No comments:
Post a Comment