Monday, March 30, 2020

எழுதிக் கொண்டே இருப்பேன் உயிர்(ப்பு) உள்ள வரை: கவிஞர் தணிகை

எழுதிக் கொண்டே இருப்பேன் உயிர்(ப்பு) உள்ள வரை: கவிஞர் தணிகை


10 Life Quotes That (If Applied) Will Change the Way You See The ...

விடை கொடுக்கிறேன் விசுவுக்கு என்ற எனது பதிவுக்கும் பின் ஒரு வாரம் ஆகிவிட்டது. பூமியின் மனிதர்கள் யாவருமே ஒரு கால மாற்றத்தில் பீதி அடைந்து கொண்டிருக்கும் போது எனது தீனமான குரலுக்கு என்ன மதிப்பிருக்கப் போகிறது என சற்று எண்ண மறுகல் என்னிடமுமிருந்தது.

ஆனால் எனது வலைப்பூவை மறுபடியும் யதேச்சையாக வேறு வேலையாகப் பார்த்த போது சுமார் நூறு பேருக்கும் மேல் அதைப் படித்துக் கொண்டிருப்பதாக நான் எழுதாத போதும் தெரிந்தது.

எனவே பயன்படுகிறதோ இல்லையோ எப்போதும் போல எழுதுவதை கைவிடக் கூடாது என மறுபடியும் பூக்கிறேன்

கடந்த ஒரு வார காலமாக அல்லது சரியாகச் சொல்ல வேண்டுமானால் கடந்த 20.03.2020 முதல் கடந்த 10 நாட்களாக நாட்கள் உலகெலாம் வேறானது. எனது வாழ்விலும் அப்படித்தான் திடீரென வாழ்வு முறை மாறாகப் போனாதால் எனது உடல் ஒத்துழைக்காமல் வயிற்றுப் போக்கு ஆரம்பித்து விட்டது.

அதன் காரணம் கடும் வெயில். மேலும் கல்லூரி செல்லும் போது இருந்த உணவு முறை மாறி தூக்க முறை மாறி நீர் அருந்துவது குறைவாக இருந்ததும் காரணங்கள்...

உடல் சூடாகி சிறு நீர் கழிப்பதில் எரிச்சலும், மஞ்சளுமாக நன்றாக தெரிந்து உடல் சூட்டை நன்றாகவே வெளித் தெரியுமாறு நன்றாகவே காண்பித்தது.

உடனே நீரைக் குடிப்பதை அதிகம் செய்து சரி செய்து விடலாம் என அதிகம் கவனம் எடுத்துக் கொள்ளவில்லை
Want to be a Great Writer? Then Don't Focus on Writing. (Do This ...
58 ஆண்டை முடித்து விட்டு 23.03.2020 after that day  59ல் அடி எடுத்து வைக்கும் நாள் முதலே  அதாவது 24 ஆம் தேதி முதல் கடுமையான வயிற்றுப் போக்கு....ஆரம்பித்தது. எனக்கு ஏற்கெனவே நிறைய உடல் பிணிகள் இருப்பதால் சடாரென ஆங்கில மருத்துவத்துக்கு போகவே மாட்டேன் என்பதால்...

பிஸ்மத், தொப்பூள் மையத்தில் சிறு தொந்தரவு என்பதற்கான டிஸ்கோரியா வில், போன்ற ஹோமியோபதி மாத்திரைகள், உடன் சப்போட்டா பிஞ்சை இரண்டைப் பறித்து மிக்ஸியில் அரைத்து தயிரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வைத்தேன் அத்துடன் எலக்ட்ரால் பவுடரை நீரில் கரைத்தும் குடித்து வர ஆரம்பித்தேன்.

பொதுவாக இந்த செயல்கள் எனக்கு ஒரு நாளில் அல்லது ஒரே காலை நேரத்தில் ஆரம்பித்தால் மதியத்துள் சரியாகிவிடும். ஆனால் இந்த அணுகுமுறை இரண்டு நாளாகியும் சரியாகவில்லை. சரியான மாதிரி இருந்ததால்  மறுநாள் கூழுடன் சிறிது பாலையும் கலந்து குடித்து விட்டதே மறுபடியும் நீரை விட அடர்த்தி குறைந்த நிலையில் எந்த  நீர் வடிவிலான சப்போட்டா பிஞ்சுக் கரைசலானாலும் எலக்ட்ரால் பவுடர் கரைசலானாலும் சிறிது நீரை பருகினாலும் அப்படியே வெளித் தள்ள ஆரம்பித்தது.

ஏற்கெனவே செய்த வழக்கப் படி மதியம் சிறிது சோற்றுடன் தயிர் பிசைந்து உண்டு பார்த்தேன் சில சுண்டைக்காய்களை உணவு விஷ முறிவுகளாக அது பயன்படும் என்று நம்பினோம். மேலும் காலையிலும் சில இட்லிகளை தயிர் பிசைந்தே உண்டு வர ஆரம்பித்தேன் . நாக்கு வெறுத்தது. உணவே பிடிக்கவில்லை.
17 Inspirational quotes to help you achieve your goals ...
சரியாக ஆரம்பித்து விட்டது என்ற நிலையில் 27 ஆம் தேதி இரவு மறுபடியும் ஆரம்பித்துவிட்டது. உட்கார்ந்து படித்ததும் எழுதியதும் தான் காரணம்  சூட்டை மறுபடியும் கிளப்பி விட்டது என எங்கள் வீட்டில் என் மேல் மறுபடியும் பாய்ச்சல்...

இத்தனை முறை எத்தனை முறை எனச் சொல்லாமல் அது பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்க சகோதரிகள் முட்டையின் மஞ்சள் கரு சரியாக இருக்கும் என்றும், அதை ஒரு முறை உட்கொண்டு பார்த்தேன் அதை மற்றொரு சகோதரி அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பழரசங்களும் பழங்களும், ரொட்டியும் கடுங்காபியில் தொட்டு உண்பதுமே சரியாக இருக்கும் எனச் சொல்ல, அதைத் தேடினார்கள்.

உடனே எந்த தேடலுக்கான பொருட்களும் பழங்களோ, ரொட்டியோ உடனடியாக கிடைக்காத சூழல். கடைகளே சரியாக இல்லாத சூழல்....எப்படியோ வீட்டுத் துணைவி இரண்டு சிறு ரொட்டிகளை வாங்கி வந்தார். அதை இரண்டு நாளுக்கு காலையில் வைத்துக் கொண்டோம்.

அப்படியும் இப்படியும் எல்லாம் செய்து பார்த்து விட்டு, எலக்ட்ரால் பவுடர்களையே வாங்கி வாங்கி எத்தனை நாளுக்கு குடிக்க முடியும் வெறும்  தண்ணீர் எப்போது குடிக்க ஆரம்பிப்பது இப்படி நிறைய போராட்டம்...அந்த வெள்ளிக் கிழமை 27 மார்ச் அன்று சரியான கோபம் .  பல முறை சென்று வந்த பின் ஒரு அறைக்கு சென்று மகனும், மனைவியும் உறங்க ஆரம்பித்த பின் எகிறி எகிறி எம்பி எம்பிக் குதித்தேன். பல முறை...
150 Good Morning Quotes — Inspirational Good Morning Quotes
அடுத்த நாள் சனிக்கிழமை...எண்ண்யெக் குளியல். அன்றும் எச்சரிக்கயான உணவு. 28, 29 .03.2020 வரை உணவில் எச்சரிக்கையுடன் மற்றும் பழங்களை வாங்கிக் கொண்டோம்...சுமார் 700 ரூபாய்க்கு பழங்கள் வாங்கினோம். இதெல்லாம் ஏழைக்காகும் நிலையா என்ற கேள்விகளுடன்...எல்லாமே பயம் உலகெங்கும் உயிர் பயம் எனவே பணம் செலவாவதைப் பற்றி கவலை கொள்ள ஒன்றுமில்லை.
Quotes About Not Giving Up & Staying Strong
 ஆக ஒரு வழியாக எதிலும் அடங்காதிருந்த வயிற்றுப் போக்கு எகிறி எகிறிக் குதித்ததால் அடங்கிப் போயிற்று. குடல் ஏற்றம் என்பார்கள் முன்பெல்லாம் அதை சொல்லும் வார்த்தையில் கொள்ளாத்தம்  என்பார்கள்...அதை சரி செய்ய முன்பெல்லாம் வயதான சில பெண்மணிகள் இருப்பார்கள். சாதாரண தண்ணீர் அல்லது சிறிது நல்லெண்ணெய், அல்லது விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டு சென்றால் சரி செய்து விடுவார்கள். அதெல்லாம் இப்போது இல்லை, அவர்கள் எல்லாம் இப்போது இல்லை.

மொத்தத்தில் உடல் சூடா, நீர்க் குறைபாடா, அல்லது குடல் ஏற்றமா எது எப்படியாக இருந்த போதிலும் நல்ல வேளை இப்போது மீண்டு விட்டேன். சரியாக உண்டு ஒரு வாரத்துக்கும் மேலாகி விட்டது.இனியும் நிதானமாகவே உணவு முறையை உட்கொள்வதில் முன்னேற வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இருக்க ஆரம்பித்துள்ளேன். 3 வது சுற்று ஆரம்பித்து விட்டது...மறுபடியும் சந்திப்போம்...
50 Best Personal Growth Quotes for the New Year | SNHU
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

2 comments: