Sunday, March 22, 2020

கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஏன் பரிசோதனைகள் குறைவாக இருக்கின்றன?

``எல்லா நாடுகளுக்கும் நாங்கள் ஒரு சாதாரண தகவலை தெரிவிக்க விரும்புகிறோம் - பரிசோதியுங்கள், பரிசோதியுங்கள், பரிசோதியுங்கள்'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ் இந்த வாரத் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
170 நாடுகளில் 13 ஆயிரம் பேருக்கும் மேல் உயிர்ப்பலி வாங்கிய, 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைத் தாக்கிய கொரோனா வைரஸ் பற்றி அவர் குறிப்பிட்டார்.
``சந்தேகத்துக்குரிய அனைவரையும் அனைத்து நாடுகளும் பரிசோதிக்க வேண்டும். இந்தத் தொற்று நோய்க்கு கண்ணை மூடிக் கொண்டு சிகிச்சை அளித்துவிட முடியாது'' என்று அவர் கூறியிருந்தார்.
இதுவரையில் 341 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டு, 5 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், இந்த ஆலோசனையை இந்தியா காத்திரமாக எடுத்துக் கொண்டிருக்கிறதா? மக்கள் தொகையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு, போதிய அளவுக்குப் பரிசோதனைகள் செய்கிறதா?
இதற்கான விடைகள் வெளியில் கிடைக்கின்றன. வியாழக்கிழமை வரையில், அரசுக்குச் சொந்தமான 72 பரிசோதனை நிலையங்களில் 14,175 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. உலக அளவில் பிற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகக் குறைந்த எண்ணிக்கை. பரிசோதனைகளை குறைவாக வைத்திருப்பதற்கான காரணம் என்ன? அதிக ஆபத்து வாய்ப்புள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் அல்லது தொற்று பரவியவருடன் தொடுதல் அளவில் தொடர்பு கொண்டவர் அல்லது தீவிர மூச்சுக் கோளாறு உள்ள நோயாளிகளை பராமரிக்கும் சுகாதார அலுவலர்கள் ஆகியோருக்கு மட்டும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், கோவிட - 19 அறிகுறிகள் தென்படுபவர்கள் மட்டுமே பரிசோதனைக்குத் தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள நாட்டில், ஏன் இவ்வளவு குறைந்த அளவில் மட்டும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? இந்தத் தொற்று மக்கள் மத்தியில் இன்னும் பரவவில்லை என்பதுதான் அரசின் கருத்தாக உள்ளது. இந்தியா முழுக்க மார்ச் 1 முதல் 15 தேதி வரையில் அரசு மருத்துவமனைகளில், தீவிர மூச்சுக் கோளாறு பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த 826 பேரிடம் மருத்துவ ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த ``ஆதாரம்'' கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இருந்துள்ளது. மேலும் சுவாசக் கோளாறு பிரச்சினைக்காக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவமனைகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
``சமுதாய அளவில் இது பரவுவதற்கு ஆதாரம் எதுவும் இப்போது இல்லை என்பதை மீண்டும் உறுதியாகக் கூற முடியும்'' என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழக (ஐ.சி.எம்.ஆர்.) இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார். இந்தியாவைப் பொருத்த வரையில், டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ் கூறியது ``இப்போதைக்குத் தேவையற்றது'' என்றும், அவ்வாறு செய்வது ``அதிக அச்சத்தை ஏற்படுத்தும், மன உறுதியைக் குலைத்துவிடும், விஷயத்தை பூதாகரமாக்கிக் காட்டிவிடும்'' என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால் நிபுணர்கள் உறுதியாக எதுவும் கூறவில்லை.
Banner image reading 'more about coronavirus'
Banner
தேவையான அளவுக்கும் கீழ்தான் இந்தியாவில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஏனெனில், போதிய ஆள்பலம் இல்லாத, போதிய அளவு வசதி இல்லாத சுகாதார மையங்களில் மக்கள் குவிந்துவிடுவார்கள் என்று இந்தியா அஞ்சுகிறது.
பரிசோதனை உபகரணங்களை வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்ளவும், தனிமைப்படுத்தல் சிகிச்சை வசதிகளை மருத்துவமனைகளில் அதிகரித்துக் கொள்ளவும் இந்தியா அவகாசம் எடுத்துக் கொள்கிறது. ``பெருமளவில் பரிசோதனை செய்வது தீர்வாக இருக்காது என்று நான் அறிவேன். ஆனால் நம்முடைய பரிசோதனை எண்ணிக்கைகள் குறைவாகவே உள்ளன. நாம் இதை தீவிரமாக்கி, சமுதாய அளவில் பரவாமல் தடுத்தாக வேண்டும்'' என்று மத்திய சுகாதாரத் துறை முன்னாள் செயலாளரும் ``But Do We Care: India's Health System''-ன் ஆசிரியருமான கே. சுஜாதா ராவ் என்னிடம் கூறினார்.
அதேசமயத்தில், தற்செயலாகவும் மற்றும் கேட்பவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் நடத்துவது பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும், குறைவாக உள்ள சுகாதாரத் துறை வளங்களை காலி செய்துவிடும் என்றும் நச்சுயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சளி காய்ச்சல் நோய்க்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மட்டும் ``பாதுகாப்பான பரிசோதனை'' செய்வதை அதிகரித்தால், சமுதாய அளவில் இந்தத் தொற்று பரவியுள்ளதா என்பதை அறிவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். ``குறிப்பிட்டு கவனம் செலுத்திய பரிசோதனை நமக்குத் தேவைப்படுகிறது. சீனா அல்லது கொரியா போல நாம் செய்ய முடியாது. நம்மிடம் அதற்கான திறன் கிடையாது'' என்று மூத்த நச்சுயிரியல் நிபுணர் என்னிடம் தெரிவித்தார்.
பல வழிகளில், குறைந்த அளவிலான ஆதாரவளங்களை வைத்துக் கொண்டு, தொற்றுநோய்க்கு எதிராகப் போரிட இந்தியா முயற்சி செய்து வருகிறது. போலியோ, தட்டம்மையை ஒழித்தது, எச்.ஐ.வி. எய்ட்ஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது, மிக சமீபத்தில் தீவிர கண்காணிப்பு, பாதிப்பு வாய்ப்புள்ளவர்களை சரியாக அடையாளம் கண்டு, உரிய நேரத்தில் குறுக்கீடு செய்வதன் மூலம் H1N! - ஐ கட்டுப்படுத்தியது, அதைக் கட்டுப்படுத்த தனியார் துறையினருடன் இணைந்து செயல்பட்டது பற்றி நிபுணர்கள் பேசுகின்றனர்.
இருந்தாலும், சமீப கால வரலாற்றில், மிக மோசமான உயிர்ப்பலி வாங்கும் தொற்றுநோய்களில் ஒன்றாக கொரோனா வைரஸ் இருக்கிறது. நடவடிக்கை எடுப்பதற்குக் கிடைத்த வாய்ப்பில் ஒவ்வொரு நாளை இழப்பதும், தொற்று பரவுதல் அதிகரிப்புக்கான வாய்ப்பை உருவாக்குவதாக அமைந்துவிடும். இந்தியாவின் ஜிடிபியில் 1.28% என்ற மிகக் குறைந்த அளவில் தான் சுகாதாரத் துறைக்காக செலவிடப்படுகிறது. பெரிய அளவில் இந்தத் தொற்று பரவ நேரிட்டால், இந்தத் தொகை போதுமானதாக இருக்காது. பல நகரங்களில் பாதி செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன - பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது - இதில் இருந்து, சமுதாய அளவில் நோயின் தாக்கம் பரவத் தொடங்கிவிட்டதாக அரசுக்கு அச்சம் ஏற்பட்டிருப்பதை இவை காட்டுகின்றன.
சமுதாய அளவில் நோய் பரவத் தொடங்கவில்லை என்று அரசு கருதுகிறது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionசமுதாய அளவில் நோய் பரவத் தொடங்கவில்லை என்று அரசு கருதுகிறது.
தவிர்க்க முடியாத ஒரு போருக்கு ஆயத்தமாகும் நிலையில், பரிசோதனைகளின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள பரிசோதனை நிலையங்களில் 6 மணி நேரத்தில் முடிவுகள் தெரிவிக்கப்பட்டுவிடும் என்றும், ஒவ்வொரு பரிசோதனை நிலையத்திலும் தினமும் 90 பரிசோதனைகளை செய்ய முடியும் என்றும், இதை இரட்டிப்பாக ஆக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வார இறுதிக்குள் மேலும் 50 பரிசோதனை நிலையங்கள் உருவாக்கப்பட்டுவிடும். இதன் மூலம் மொத்த பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை 122 ஆக உயரும். இந்த அனைத்து பரிசோதனை நிலையங்களிலும் சேர்த்து தினமும் 8000 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய முடியும். இது கணிசமான அளவிலான எண்ணிக்கை உயர்வு ஆகும். இதுதவிர 50 தனியார் பரிசோதனை நிலையங்களும், இந்தப் பரிசோதனையை நடத்த அனுமதிக்க அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் அதற்கான உபகரணங்களைப் பெற அவற்றுக்கு 10 நாள்கள் வரை ஆகும். (அரசு பரிசோதனை நிலையங்களில் இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் பரிசோதனை நிலையங்களில் கட்டணம் வசூலிக்கப்படுமா என்று தெளிவாகத் தெரியவில்லை.)
இரண்டு அதிவிரைவு பரிசோதனை நிலையங்கள், தினமும் 400 பரிசோதனைகள் செய்யும் திறன் கொண்டவை, அடுத்த வார இறுதியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மில்லியன் பரிசோதனை உபகரணங்கள் வாங்குவதற்கு இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. மேலும் ஒரு மில்லியன் உபகரணங்களைத் தருமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் இந்தியா கோரிக்கை வைக்கக் கூடும்.
``பரிசோதனை நிலையில், அரசின் செயல்பாடு பொருத்தமான விகிதத்தில் இருக்கும், தேவை மற்றும் திறன்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால் அப்படி இருக்கும்'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதி ஹென்க் பெகெடம் என்னிடம் தெரிவித்துள்ளார். ``பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது,பரிசோதனை திறன்கள் அதிகரித்து வருகின்றன என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
தீவிர மூச்சுக்கோளாறு, சளிக்காய்ச்சல் போன்ற நலக் கேடுகள் கண்காணிப்பு நடைமுறை மூலம் கண்டறியப்படுகின்றன. `நிமோனியா போன்ற' பாதிப்புகளையும் கண்டறிய வேண்டியதும் முக்கியமானது. ஏதும் காரணம் இல்லாமல் இந்தக் கோளாறுகள் தென்பட்டால், அவர்களுக்குப் பரிசோதனை நடத்துவது பற்றிப் பரிசீலிக்க வேண்டும்'' என்று அவர் கூறுகிறார்.
பரிசோதனை உபகரணங்கள் வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்ளவும், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதிகள், மருத்துவமனை வசதிகளை உருவாக்கிக் கொள்ளவும் இந்தியா அவகாசம் எடுத்துக் கொள்ளக்கூடும்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionபரிசோதனை உபகரணங்கள் வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்ளவும், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதிகள், மருத்துவமனை வசதிகளை உருவாக்கிக் கொள்ளவும் இந்தியா அவகாசம் எடுத்துக் கொள்ளக்கூடும்.
இந்த நடவடிக்கைகள் போதுமானவையாக இருக்குமா என்பதை வரக் கூடிய வாரங்கள் மற்றும் மாதங்கள் தான் சொல்லும். ``சமுதாய அளவில் பரவாமல் இந்தியா தப்பிவிட்டது என்று நம்மால் சொல்லிவிட முடியாது'' என்று பார்கவா வெளிப்படையாகக் கூறுகிறார். ஒருவேளை எதிர்பாராத அளவில் தொற்று நோய் பரவி, நோயுற்ற அதிகமானோருக்கு மருத்துவமனை சிகிச்சை வசதி தேவைப்படும் நிலை ஏற்பட்டால், இந்தியா பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவில் 10,000 பேருக்கு 8 டாக்டர்கள் உள்ளனர். இத்தாலியில் இந்த எண்ணிக்கை 41 ஆகவும், கொரியாவில் 71 ஆகவும் உள்ளது. 55,000 மக்கள் தொகைக்கு ஓர் அரசு மருத்துவமனை இந்தியாவில் உள்ளது (பெரும்பாலான மக்களால் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்குச் செல்ல முடியாது.) மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ளும் போக்கு நாட்டில் மிக மோசமாக உள்ளது. ஏதும் அறிகுறிகள் தென்பட்டால் டாக்டர்களிடம் செல்வதில்லை. மாறாக வீட்டு மருத்துவம் செய்து கொள்கிறார்கள் அல்லது நேரடியாக மருந்துக் கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்கிக் கொள்கிறார்கள். தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகள், பயிற்சி பெற்ற நர்சிங் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் தீவிர கண்காணிப்பு படுக்கை வசதிகளுக்குப் பற்றாக்குறை உள்ளது.
Banner image reading 'more about coronavirus'
பருவமழைக் காலத்தில் இந்தியாவில் சளிக்காய்ச்சல் பாதிப்பு அதிகபட்சமாக இருக்கும். எனவே இந்த கொரோனா வைரஸ் இரண்டாவது முறையாக மீண்டும் தாக்காது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று நச்சுயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
``இந்தியாவில் இதுகுறித்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாலும், ஸ்பெயினைவிட 2 வாரங்களும், இத்தாலியைவிட 3 வாரங்களும் இந்தியா பின்தங்கியுள்ளது. ஆனால், அறியப்பட்ட நேர்வுகளின் எண்ணிக்கைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். போதிய பரிசோதனை வசதிகள் அளிக்காமல், பெரிய எண்ணிக்கையில் முடக்கி வைப்பதால், எண்ணிக்கைகள் இன்னும் மோசமாகும்'' என்று ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் மெர்கட்டஸ் மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்ருதி ராஜகோபாலன் தெரிவித்தார்.
சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இந்த நோய் பரவத் தொடங்கினால், மெத்தனமாக இந்தியாவின் சுகாதாரத் துறை கட்டமைப்பின் செயல்பாடு சிக்கலாகிவிடும். ``இது மிகவும் தனித்துவமான மற்றும் உண்மையான பொது சுகாதார சவால்'' என்று ராவ் கூறுகிறார். இப்போதும் இது ஆரம்ப கட்டம்தான்.
நன்றி: பிபிசி தமிழ்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment