அதிக பட்ச ஆர்வம் கூட ஆபத்தானதே: கவிஞர் தணிகை
நேற்று வாழ்க்கை என்பதே அப்படித்தான் என்ற எனது பதிவில் மதியழகன் சங்கமேஸ்வரா நடத்துனர் எதிர்பாரா விபத்தில் மரணம் என்பது பற்றி பதிந்திருந்தேன்.
அவருக்கு 54 வயது. தம் இரண்டு பெண்களையுமே நல்ல முறையில் மணம் செய்து கொடுத்தார் என்பது நாமறிந்ததே. அந்த இரண்டு பெண்களுமே முழுகாதிருக்கிறார்கள் என்பதும் அவரின் மறைவு நாளுக்கடுத்த சில நாட்களில் அதாவது நேற்று அல்லது இன்று அந்தப் பெண்கள் இருவருக்குமே வளைகாப்பு நிகழ்வு குடும்பத்தில் சிறப்பாக செய்ய ஏற்பாடு என்பதும் இன்று நான் அந்த பேருந்தின் ஓட்டுனர் கண்ணனிடம் என்னதான் நடந்தது எனக் கேட்டறிந்தேன்.
இவர் அந்த வளைக்காப்பு நிகழ்வுக்காக மளிகைப் பொருட்கள் வாங்க புதுசாம்பள்ளியில் உள்ள எஸ்.இ.எஸ் (சுப்ரமணியம் மளிகை) கடையில் சென்றதாகவே இவரது மனைவி நினைத்திருக்க இவரோ தனது புதுப் பழக்கமுடைய ஸ்கூட்டியில் செவ்வாய்ப் பேட்டையில் வந்து மளிகை வாங்கியிருக்கிறார்
வீட்டை விட்டு பணிக்கு வந்தாலும் சுமார் 10 முறையாவது செல்பேசி தொடர்புடன் இருப்பவர் இன்று தொடர்பில் இல்லையே என மகள்களும் மனைவியும் வீட்டில் தவித்திருக்கின்றனர்.
இவர் வண்டிக்கு வந்த நாள் போக ஓய்வு நாட்களில் இருப்பதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கூடத் தெரியாது அவ்வளவு அடக்க ஒடுக்கம். வீட்டிலேயே தானும் தனது வாழ்க்கைத் துணைவியுமாகவே நாட்களை கழிப்பவர் எங்கு சென்றாலும் இருவருமாகவே செல்வார்களாம். இவரை துணைவி தனியாகவே அனுப்ப மாட்டாராம்.
மதி மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு தாம் பணி புரியும் பேருந்து மூலம் கூட அந்தப் பொருளை கொண்டு வந்து சேர்த்திருக்கலாம். அல்லது உள்ளூர் சரக்கு போக்குவரத்து கார்த்திகேயன், அருணா, எம்.கே.எஸ் போன்ற ரெகுலர் சர்வீஸ் வழியே புக் செய்து விட்டால் வீட்டில் வந்து சேர்த்திருப்பார்கள்.
என்ன என்ன பொருட்கள் எவ்வளவு வாங்கினாரோ அவரது எண்ணம் ஸ்கூட்டி வழியே செல்ல செலுத்த மாமாங்கம் அருகே வரும்போது ஒரு மண்ணை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரி இவர் அருகே வந்து செல்ல இவர் பயந்து நடுங்கியபடி சாலையின் இடது பக்கம் விழுவதற்கு மாறாக சாலையின் உள் பக்கம் அந்த டிப்பர் லாரியில் சக்கரத்தில் விழ போட்டிருந்த தலைக் கவசம் ஹெல்மெட் உடைந்து தலை உடைந்து இடது கண் தெறித்து ஆள் அந்த இடத்திலேயே காலி.
கொஞ்சம் செலவைக் கட்டுப் படுத்த வேண்டி உள்ளூரில் மளிகையை வாங்காமல் செவ்வாய்ப் பேட்டை வரை வந்து அதையும் இரு சக்கர வாகனத்திலேயே எடுத்துச் செல்ல முயன்ற அவரின் முயற்சியை நாம் என்ன சொல்ல....
அப்படி எல்லாம் சேமித்து செலவைக் குறைத்து என்ன சாதித்து விடப் போகிறோம் இப்போது தந்தையை , கணவனை இழந்த அந்தக் குடும்பம் இன்பமாக வளைகாப்பு நடத்துவதற்கு மாறாக தலைவனை இழந்து தவிக்கிறது பிறக்கும் குழந்தைகளுக்கும் ஓர் அவப் பேரை இந்த காரண காரியம் இல்லா உலகம் வைக்கப் போகிறதா இவர்கள் வயிற்றில் இருந்த போதே தாத்தாவை விழுங்கி விட்டார்கள் என்று...
பிணமான மதி சூரமங்களம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு 10.42 மணி வாக்கில் செய்தியாகப் போய் 4.30 மணி அளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வீட்டருகே உள்ள தோட்டத்தில் சுமார் இரவு 8.30 மணியளவில் எல்லாம் முடிந்து போனது.
அதிக படியான ஆர்வம் அல்லது ஆர்வக் கோளாறு இப்படிப் பட்ட அபாயத்தை எல்லாம் கொண்டு வந்து தந்து விடுகிறது எனவே
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை... குறள்...
மெல்லச் செய்ய வேண்டியதை மெல்லவே செய்க
விரைந்து செய்ய வேண்டியதை வேகமாகச் செய்க
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:
Post a Comment