ஆய்த எழுத்து: கவிஞர் தணிகை
1. கந்தசாமி முட்டைக் கோழிப் பண்ணை அருகே அந்த இரு சக்கர வாகனம் நின்று போயிருக்க 20 வயது மதிக்கத் தக்க அந்த இளைஞனும் அவன் தாயும் தவித்தபடி இருந்தனர். அந்த இளைஞன் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த வண்டி கிளம்ப மறுத்தது. அங்கிருந்து கொஞ்சம் தூரமே இருந்ததால் ஒட்டுப் பள்ளம் சென்று எனது அரசாங்க எல்லையைத் தொட்டு விட்டுத் திரும்பினேன் அப்போது அந்த இளைஞர் விரக்தியில் செல்பேசிக் கொண்டிருந்தார் இடம் அடையாளம் எல்லாம் சொல்லி ...
இன்னுமா ஸ்டார்ட் ஆகவில்லை. என்று எனக்குத் தெரிந்த சில மந்திரங்களை ஓதினேன் சிறிது நேரப் போராட்டத்துக்குப் பின் வண்டி விர்ரென்று கிளம்பியது...தாயை ஏற்றிக் கொண்ட அந்த இளைஞன் பறந்து போனான்.
என்ன மந்திரம் என்று கேட்கிறீர்களா? உங்களுக்குத் தெரிந்ததுதான்
வண்டி இஞ்சினில் ஏதாவது அடைத்திருக்கும்
இன்னும் நன்றாக கிக்கர் போட்டு ஸ்டார்ட் செய்
கார்பன் அடைத்திருக்கலாம்
வண்டியில் போதிய அளவு எரிபொருள் இருக்கிறதா ?
சோக் போட்டு ஸ்டார்ட் செய்தாயா?
வண்டியை ஒரு முறை ஒருபக்கம் ஒருக்களித்து படுக்க வைத்து
அதன் பின் ஸ்டார்ட் செய்தாயா?
இப்படி சும்மா ஒரு சமஸ்கிருதத்தை சாமிக்கு ஓதுவது போல சமஸ்கிருதம் தெரியாதவர்க்கு ஓதுவது போல எனக்கும் வண்டியைப் பற்றி ஏதோ தெரியும் என்பது போல...ஆனால் அந்த உற்சாக தெம்பூட்டிய வார்த்தைகள் அந்த நேரத்தில் அவர்களுக்கு பெரு உதவியானது...அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வண்டி கிளம்பியதும் விட்டார்கள் சவாரி..
2. அந்த கழிவு நீர் ஓடையில் டில்லியில் கிடந்த உளவு அதிகாரி சாயிக் உடலில் 250 இடங்களில் கத்திக் குத்து அடையாளங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் குறிப்பிட்டுள்ளதாக செய்தி..ம(னி)தம்.
3. அந்த சரியான வளர்ச்சி அடையாத சிறுவனை ரக்பி விளையாட்டு வீரர்கள் போட்டியை துவக்கச் செய்து பெருமை சேர்த்துள்ளார்கள் என்றும் அவனுக்காக சுமார் 4.5 கோடி வசூல் ஆனதாகவும் அதை அவனும் அவனின் தாயும் அதை வாங்காமல் அதை அப்படியே அவன் போன்று இருக்கும் நபர்களுக்காக வளர்ச்சிப் பணிக்காக ஈடுபடுத்துவீர் என்று சொல்லி விட்டதாகவும் செய்தி...மதமல்ல மனிதம்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment