Friday, December 6, 2019

ஒன்றை மறந்து விடக் கூடாது: கவிஞர் தணிகை

ஒன்றை மறந்து விடக் கூடாது: கவிஞர் தணிகை



ஹைதராபாத் அருகே நடந்த கால் நடைப் பெண் மருத்துவர் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் நால்வரையும் என்கவுன்டரில் காவல்துறையினர் போட்டுத் தள்ளி இருப்பதைப் பாராட்டி பொதுமக்கள் இனிப்பு ஊட்டி, தூக்கி வைத்துக் கொண்டாடி ,மலர் தூவி வாழ்த்து தெரிவித்தவாறு இருக்கிறார்கள் என்பதெல்லாம் செய்தி.காவலர்களுக்கு ராக்கி கட்டி பெண்கள் நடத்துக் காட்சிகளும்

அதே பெண்ணின் பெற்றோர் இப்போது அந்தப் பெண்ணின் ஆன்மா சாந்தி அடையும் என்றெல்லாம் சொல்லி இருப்பதாகவும் செய்தி...சரி...அதே பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என புகார் தெரிவித்த போது அந்தப் புகாரை பதிவு செய்து உரிய நேரத்தில் தேடி அந்தக் குற்ற வன்முறையை தடுக்க முயற்சி எடுக்காமல் காலம் தாழ்த்தினர்...   அசட்டையாக இருந்தனர் என்பதையும் அந்தப் பெற்றவர்களே பதிவு செய்திருப்பதை, முன்னர் ஊடகங்கள் வெளியிட்டதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.

எனவே மக்கள் ஒன்று ஒரே கூட்டமாக எதை வேண்டுமானாலும் உணர்ச்சி பூர்வமாக செய்வர் ஆனால் அறிவு பூர்வமாக சிந்திக்க மாட்டார் என்பதற்கு இந்த சம்பவத்தை நாம் எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.
Image result for encounter celebrations in hyderabad"
அதை அடுத்து வருவதே எப்படி அந்தப் பெண் உயிரும் உடலும் உருக்குலைக்கப் பட்டதோ அது எப்படி மாபெரும் குற்றமோ அதேபோல் ஒரு ஜனநாயக நாட்டில் அது போன்ற ஒரு மாபெரும் குற்றம் நடப்பதுமே ஒரு ஜனநாயகப் படுகொலைதான். அதை அடுத்து இப்படி கேள்வி முறையின்றி அது சட்டம் நீதி வழி சென்றால் நாளாகுமே என காவல் துறையும் சுட்டுத் தள்ளுவதும் கூட மனித மாண்புகளுக்கும் இறையாண்மை உள்ள ஒரு ஜனநாயக நாடு எனச் சொல்வதற்கும் இழுக்குதான்.
Image result for encounter celebrations in hyderabad"
கடுமையான விரைவான சட்ட நீதி மாண்புகள் மக்களைப் பாதுகாக்க  அவசியம் தேவைதான். ஆனால் அது இதுவல்ல...
 அந்த மாக்கா பசங்க மூஞ்சுகளைப்  பார்த்தீர்களா அதில் ஒருவன் மட்டுமே வயது வந்தது போல இருக்கிறான். மற்ற மூவரும் தறுதலையான சிறுவயது பதர்கள்.. இவர்களை முறைப்படுத்தாத நெறிப்படுத்தாத கல்வி முறை பெற்றோர் சமூகம் நாடு ஆட்சி, அரசு, மக்கள் யாவருமே தண்டனைக்குரியர்தாம். நல்ல பிள்ளையைப் பெறாத பெற்றோர் என்ன பெற்றோர்? நல்லபடியாக வளர்க்காத பெற்றோர் என்ன பெற்றோர்? என்ன கல்வி என்ன பள்ளி? என்ன சமூகம் சுற்று வட்டம், என்ன அரசு என்ன நாடு, என்ன ஆட்சி...எல்லாம் பண்படுத்தப்பட வேண்டும்.

நல்லாட்சி தர வேண்டிய மக்களும், நல்லரசியலை தரவேண்டிய கட்சிகளும் ஆட்சி முறைகளுமே இது போன்ற குற்றங்களை நடைபெறாமல் தடுக்கும். முன் நடவடிக்கை அவசியம் நடந்து முடிந்த பின்னே செய்யப்படும் இது போன்ற என்கவுன்டர்கள் ஒரு சாதனயே அல்ல. அதை அது போன்ற ஒரு சாதனையை நல்லாட்சி என்பதே தரும்  அப்போது காவல் நிலையம் புகாரை வாங்கி நிமிட நேரங்களில் குற்றவாளியை குற்றம் செய்வதிலிருந்து தடுக்கும் அப்பாவிகளைக் காக்கும். அது ஒரு கனவா கானலா...இல்லை அது போன்ற ஒரு தலைமையும் நாடும் ஆட்சியும் அரசும் ஒரு நாள் வரவேண்டும் வந்தே தீரும்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment