Wednesday, December 4, 2019

தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையையும் செய்தால் டாஸ்மாக் போல வருவாய் வருமே: கவிஞர் தணிகை

தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையையும் செய்தால் டாஸ்மாக் போல வருவாய் வருமே: கவிஞர் தணிகை


Image result for kerala lottery result 30.11.19"
கேள்விப்படும் மேட்டூர், சின்னப்பம்பட்டி, அரியானூர் போன்ற இடங்களில் எல்லாம் 3 எண் லாட்டரி சீட்டு பரபரப்பாக விற்கப்படுகிறது. ஒரே நாளில் 11 மணிக்கு, 1 மணிக்கு 3 மணிக்கு என பல முறை குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. தமிழக அரசு லாட்டரி சீட்டு நடத்துவதில்லை தடைப்படுத்தி இருக்கிறது என்பதற்கு மாறாக.

கேரள மாநிலத்தில் இருந்து இது புறப்பட்டு இருக்கிறது. எந்தவித பேரோ ஆதாரமோ இல்லாமல் சீட்டு கொடுக்கப்படுகிறது. கணினி வழியில் ஒரு காகிதத்தில் ஒரு ப்ரிண்ட் கிடைத்தது அதில் நவம்பர் வரை எந்த நேரத்தில் குலுக்கப்படுகிறது எவை பரிசுக்குரிய எண்கள் என்றெல்லாம் தேர்ந்தெடுக்க வசதியாக பல எண்களும் அதில் இருக்கின்றன.

ஒரு சிறிய சீட்டில் வரிசை எண் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது, அதில் தேதி, எத்தனை மணிக்கு குலுக்கல் என எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன் எண் குறிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆர்வமாய் இருப்பார் எல்லாம் படிப்பறிவு குறைந்த ஏழைகள்...

இது அரசுக்கு தெரியாமல் விற்பனை செய்ய வழியே இல்லை. ஏன் எனில் அதற்கு ஒரு அலுவலகமே அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. உடனே எழுதிய என்னிடம் சாட்சி இருக்கிறதா ருசுப்பிக்க முடியுமா என மட்டைக் கேள்விகள் கேட்டு பயனில்லை.

செய்யும் தொழிலே தெய்வம் திறமைதான் அதில்  நமது செல்வம்
கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைதான் நமக்கு பதவி என்னும் பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள் நமதுபதவி  நாற்காலியின் ஒரு கால் என்ற தலைவர்கள் ஆண்ட தமிழக வரலாற்றில் உழைப்பை கேவலப்படுத்தி வெறும் அதிர்ஷ்டம் என நம்பி இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு இழந்து போவது சாதாரண ஏழை மக்களின் பணமே என்ற ஆதங்கத்தில் மட்டுமே இதை பதிவு செய்ய வேண்டியதாகிறது.

மற்றபடி இது போன்ற முட்டாள்தனங்களில் எல்லாம் எப்போதுமே என் போன்றோர் ஈடுபடமாட்டார்.

மேலும் அரசுக்கு வருவாய் வரும் வண்ணம் இந்த திருட்டு லாட்டரியை முறைப்படுத்தி அரசே எடுத்து நடத்தினாலும் டாஸ்மாக் போல இதுவும் அரசின் கஜானாவுக்கு வருவாய் ஊட்டிடும் ஒரு செயலாகிவிடும் ஏன் எனில் ஒவ்வொரு ஊரிலும் குறைந்த பட்சம் ஏறத்தாழ 500 பேர் ஈடுபட்டு பாழாகி வருகிறார்கள் என்பதையும் அதில் ஈடுபடும் பத்துக்கும் மேற்பட்ட நபர்களை நான் சந்தித்ததன் விளைவே இந்தப் பதிவு என்றும் இதன் மூலம்  தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

அறிஞர் அண்ணா பரிசு விழுந்தால் வீட்டுக்கு இல்லையேல் நாட்டுக்கு என்று லாட்டரி சீட்டை தமிழக அரசு லாட்டரி சீட்டு நடத்த கூறினார். லாட்டரி சீட்டு நடத்துவது குற்றம் என தடை செய்யப்பட்ட நிலையில் இப்படி திருட்டு லாட்டரி எல்லா பொருளாதாரத்தையும் எடுத்துக் கொண்டு வேறு மாநிலத்துக்கு செல்வதற்கு மாறாக தமிழகத்துக்கே கிடைக்கட்டுமே...

மேலும் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது பற்றி எமது கொள்கை எல்லாம் தேவையில்லை என்பதே. அது வேறு.

கேரளாவின் சபரிமலை அய்யப்பன் நாள் ஒன்றுக்கு தமிழக பக்தர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் வசூல் செய்துவருவதும், திருப்பதி வெங்கடாஜலபதியும் தமிழக பக்தர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கொண்டு போவதையும் அடுத்து இந்த லாட்டரியும், பான்பராக்கும், மதுவும் தமிழக மக்கள் நிலை அதோகதியாகிக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசு லாட்டரி சீட்டு நடத்த வேண்டும் அல்லது இவற்றை எல்லாம் உண்மையாகவே தடை செய்ய வேண்டும்...பொது இடத்தில் மதுவும், புகையும் அனுமதிப்பது போல இதை கண்டுங்காணாமல் அனுமதிப்பது என்பது எல்லா அட்டூழியங்களுக்கும் வழி வகுத்து ஏமாற்று செய்வதாகவே இருக்கிறது. கஞ்சாவும் போதை வஸ்துக்களும் இளையோரை விட்டு வைப்பதாக இல்லை என செய்திகளும் வருகின்றன. அதற்கு மேல் நமது நித்தியானந்தா கைலாஸா.உலகமும் இப்போது தனித் தீவில் புறப்பட்டிருப்பதை எல்லாம் கவனிக்க வேண்டும்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment