Wednesday, December 18, 2019

என் இலக்கியப் பிணி: கவிஞர் தணிகை

என் இலக்கியப் பிணி: கவிஞர் தணிகை

Image result for country home and literature and culture with personal welfare"

குடியுரிமை திருத்த மசோதா...இருபக்கம் 1955க்கும் பின் இந்த அரசுதான் கையில் வெற்றிகரமாக எடுத்திருக்கிறது என ஒருப் பக்கம் மற்றொரு பக்கம் இலங்கை தமிழ் மக்கள், முகமதிய மக்கள் இரண்டு மதம் சார்ந்த இனமும் வேண்டுமென்றே புறம் தள்ளி அவர்களுக்கு பாதகம் செய்யும் மசோதா என்ற மறுபக்கம்... இன்னும் இது பற்றி நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. ஆமாம் இதெல்லாம் தான் மக்களின் பிரதான பிரச்சனைகள் என அரசும் கட்சிகளும் ஊடகமும் சொல்கின்றன...என் வீட்டில் வெங்காயம் வாங்க 100 ரூபாய்..நீ யெல்லாம் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்திருக்கலாம், என்ன சுகத்தைக் கண்டோம் இந்தக் குடும்பத்தில் என காலை கடவுளான எனக்கு அர்ச்சனை..ஊராட்சி தேர்தல் , பொதுமக்கள் காவல் துறையால் ஒதுக்கி நிறுத்தப்பட மக்களை சந்திக்க வரும் நிலையில் இருக்கும் மந்திரிமார்களின் கார் சர் சர் என 100 கி.மீ வேகத்துக்கும் அதிகமான வேகத்துடன் சாலைப்பயணம்... சாலையெங்கும் காவல் தலைகள்... இதனிடையே..

எனக்கு எழுத்து ஒரு தவம், வேள்வி, உண்மைச் சுடர் , ஊனமிலாப் பெரு வாழ்வு.ஆனால் இப்போதோ அது எட்டாக் கனி.ஏன் எனில் கடந்த காலத்தில் வாழ்வின் போக்கில் எழுதுவதை பேசுவதையே பெரும்பணியாய்க் கொண்டிருந்தேன். நிறைய எனது வலைப்பூக்களுக்கான வாசமும் இருந்தது ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் அந்த நாட்டிலிருந்து படித்தார்கள் இந்த நாட்டிலிருந்து படித்தார்கள் என உலகெலாம் புவியெலாம் பூகோளமெல்லாம் படித்ததைப் பிடித்து மாறிவிட நானும் ஒரு கருவியானேன் என்று எண்ண காரணமெலாம் இருந்தது. அது எத்துணை போலியானது என்பது அறிந்தபோதும்.

சுய வாழ்வு தேகம், ஆரோகியம், சுவர் இருந்தால் தான் சித்திரம், உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே திருமூலர் ஒரு பக்கம். குடும்ப நலம் மறுபக்கம் நாட்டுச் சேவை 3 பக்கம் நெற்றிக் கண் போல. இரண்டு கண்ணில் ஒரு கண் இருண்டிருந்தாலும் சரியாகப் பார்க்க முடியவில்லை.

முதலில் உடல் நலம் போயிற்று. அதைக் காக்க என்றும் குடும்ப நலம் காக்க என்றும் பணி எதையுமே அதாவது ஊதியம் என்று எதையும் நாடாமலேயே வாழ்வு போயிற்று...அப்போதும் உடல் நலம் கெடும் அதிவிரைவில் தேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு விடும்.

2016ல் புத்தரின் மகனைத் தாய் புத்தர் செல்லும் வழியில் எல்லாம் நிறுத்தி பெற்றாயே இந்த மகனுக்கு என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டது போல குடும்பம் கேட்டது. மாத ஊதியத்துக்கு கல்வி மருத்துவத் துறை என சென்றமைந்து விட அதில் எத்தனையோ போராட்டத்திற்கும் பின் அமைந்தது என்றாலும் அதற்காக அதிகாலையில் 4 மணிக்கே துணைவியும் துயில் எழுந்து உணவு தயாரித்து அளிக்க காலை  2 மணி நேரம் என்றும் மாலை 2 மணி நேரம் என்றும் 4 மணி நேரம் பிரயாணம்.

இதனிடையே வந்து விழும் வாராந்திர அல்லது விடுமுறை நாட்களில் வீட்டில் தேங்கி நிற்கும் பணியை முடுக்கி விட ...நாள் போனது மாதம் போனது ஆண்டுகளும் போனது எழுத்தும் போனது...

எப்படி எனில் பணிச் சுமை அல்ல பணி நெருக்கம் அதன் பின் பயணம், அதன் பின் உடல் பேண நடைப்பயிற்சி அது முடிந்தால் குளித்து இரவு  உணவருந்த உறக்கம் அதன் பின் 4 மணிக்கு செல்கோழி கூவும் முன்னே விழிப்பு இப்படியாக சுழற்சி...

இதிலும் வந்து விழுந்தது ஒரு கல் என...

ஒரு சனிக்கிழமை சாய்ந்திருந்த சப்போட்டா மரக் கிளைகளையும், அடர்ந்து ப‌டர்ந்திருந்த தாவரப் புதர்களையும் அப்புறப்படுத்த வேண்டிய பணி...வழக்கம்போல தலையில் நல்லெண்ணெய், உடல் எங்கும் தேங்காய் எண்ணெய் .... காலை மதியமாகும் நேரம் 11.45 மணிக்கு குளித்து முடிக்கும் வரை அந்த தோட்டப்பணி அயராமல்.

ஞாயிறு முடிந்தது, திங்களும் முடிந்தது...செவ்வாயில் அதன் பாதிப்பு குளிர் காய்ச்சலுடன் கல்லூரியில் இருக்க முடியவில்லை தலையில் உடலில் எல்லாம் வலி
புதன் கிழமை விடுமுறை எடுக்க வேண்டிய நிர்பந்தம். காலை கடும் குளிரில் இப்படி பயணத்துடன் வாழ்வை உடல் கெட்டாலும் செலுத்த வேண்டியிருக்கிறதே என துணைவியின் பாடலுடன் ஒரு முழு வாரமும் ஓட இடையே 3 முறை நிலவேம்புக் கஷாயம், தொண்டைப் புண் உள் வலிக்கு திரிபலா அதன் பின் கொஞ்சம் ஹோமியோபதி பாடியகா, பல்சேட்டிலா இப்படி என்றாலும் பிணி விட்டபாடில்லை.

உடலை, உயிரை வாங்கும் நச்சு இருமல் திடீரென எப்போதாவது , மூக்கில் இருந்து நீராகவும், நெஞ்சுப் பகுதியிலிருந்து மஞ்சள் கட்டியாகவும் சிறிதளவு மட்டுமே வந்து கொண்டிருந்தது. இனி அதிகாலையில் ஊற வைத்த வெந்தயம், கருஞ்சீரகம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் அதுவும் சளிக்கு பெரும் காரணம் என்றார் இடையே...நடைப்பயிற்சி நிறுத்தப்பட்டது அத்துடன் சாப்பிடும் சில வில்வ இலைகள், 10 ஆவாரம்பூ மொட்டுகள், 3 ஆடுதொடா இலை ஆகியனவும் நிறுத்தப்பட்டன. அதனிடையே தொடையில் ஏற்பட்ட நமைச்சலுக்கு சிறிய வெங்காய தேங்காய் எண்ணெய் காயவைக்கப்பட்ட ஊறலுடன், பார்லிக் கஞ்சியும் இயற்கை  மருத்துவர் சொன்னார் என்று எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்ப்ட்டிருந்தது.
Image result for country home and literature and culture with personal welfare"
எது எதனாலோ உடல் நிலைமத்துக்கு வரவில்லை.

அதிகபட்ச விலையுடன் என் துணைவி 4 தினுசான மாத்திரைகள் வாங்கி வர 2 வேலைக்கு உட்கொள்ள யாவும் அப்படியே இறுக்கப்பட்டது. தெரியும் கெடுதல் என்று என்ன செய்வது உடல் உபாதை உயிரை எடுத்து விடும் போலிருக்கிறதே...

அதன் பின் 24 மணி நேரத்தில் 6 முறை மலக்கழிவு திரவ நிலைக்கு செல்லும்படியாக அதற்கு எலக்ட்ரால் பவுடரை வாங்கி ஒரு லிட்டர் நீரில் கரைத்து  குடித்து விட்டாகி விட்டது. சற்று பரவாயில்லை . என்றாலும் உடல் சூடு அப்படியே இருப்பதும், மலக்கழிவு சரியாக நின்றுவிடுமா என்ற பதற்றமும் அப்படியே இருக்க...மலம் அது போன்றே கழியட்டும் அது நல்லது என விட்டுப் பிடிக்கலாம் இல்லை எனில் இருக்க வே இருக்கிறது சப்போட்டா பிஞ்சுகள் அதை அரைத்து தயிரில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் வயிற்றுப் போக்கும் நின்று விடும் என தெம்பாகிவிட்டேன்

எனவே மறுபடியும் எழுத்துப் பிணியுடன் எனது இலக்கியச் சேவையை செய்ய  ஆரம்பித்திருக்கிறேன். சகித்துக் கொள்ளுங்கள்...நீ எங்கள் வலைப்பூவுக்கு வந்து எங்களது எழுத்தை படித்தால் தான் நான் உங்கள் எழுத்தைப் படிக்க வருவோம் எனச் சிலர், நீ என்ன பெரிய இவனா...உனது எழுத்து என்ன பெரிய இதா...என..இது என்ன கிழித்து விடப்போகிறது என‌ச் சிலர். இப்போதெல்லாம் இதெல்லாம் ஒன்னுமில்ல...எவர் படிக்கிறார் எல்லாம் வீடியோவில் பார்த்து விட்டு சாட் செய்து விட்டுப் போய் விடுகிறார் என பலர்.

இருந்தாலும் நான் எழுதுவதை விடப் போவதில்லை...இன்னும் நான் பயணம் புக வேண்டியதில் எனது ஹைக்கூ, டான் பேஜஸ் போன்ற தளங்கள் இருக்கின்றன. வருகிறேன். மறுபடியும்....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments: