Thursday, December 5, 2019

ஏன் இந்த மனிதர்களுக்கு இப்படி துணிச்சலற்றுப் போயிற்று? கவிஞர் தணிகை

ஏன் இந்த மனிதர்களுக்கு இப்படி துணிச்சலற்றுப் போயிற்று? கவிஞர் தணிகை

Image result for brainless human beings

ஏன் இந்த மனிதர்க்கு இப்படி உணர்ச்சியற்றுப் போயிற்று?
ஏன் இந்த மனிதர் இப்படி மரத்துப் போனார்கள்?

மனிதகுல வரலாற்றை சற்று திரும்பி திருப்பிப் பார்த்தோமானால் மனிதர்கள் நெருப்புக்கு இடிக்கு மின்னலுக்கு மழைக்கு வெள்ளத்துக்கு மிருகங்களுக்கு இப்படி எல்லாம் பயந்து பாதுகாப்பு தேடிக் கொண்டார்கள் மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் குகைகளிலும் என்பதை அறிந்திருக்கிறோம்.

அது போன்ற இன்னல்கள் பலவற்றிலிமிருந்து கற்றுக் கொண்டு இன்று உயிர்களிலேயே தலைமை ஏற்றிருக்கும் மனிதம் உலகுக்கும் எல்லா உயிர்களுக்கும் பூமிக்கும் நன்மை செய்வதற்கு மாறாக இப்படி பொய், புனைசுருட்டு, அட்டூழியங்களில் அழிந்து வருவதைக் கண்கூடாக காண முடிகிறது.

அதிலும் பல மனிதர்களும் முகத்துக்கு நேராக ஒன்றும், நாம் அவ்விடத்தில் இல்லாதபோது நமைப்பற்றி அவர்களை நாமும் நம்மை அவர்களும் அணுகிய விதம் பற்றி பல வாறாக அவதூறாகப் பேசுவதை ஒவ்வொரு நாளிலும் காண முடிகிறது.

அப்படி ஒரு நபரின் உண்மை வடிவத்தை இன்று பார்த்ததன் வியப்பே இந்த பதிவும். ஆனால் இந்தப் பதிவின் நோக்கம் மாபெரும் ஆற்றலை தன்னுள்ளே கொண்டுள்ள மனிதம் ஏன் கட்சி, சாதி, மதம், இனம் மொழி என்பதில் எல்லாம் பிரிந்து தீயவை தீய பயத்தலால் தீயவை தீயுனும் அஞ்சப்படும் என்ற குறள் நெறிக்கு மாறாகவே சென்று கொண்டிருக்கிறது...

ஒரு குடும்ப அரசியல் செய்யும் கட்சி ஒரு புறம்,
ஒரு கொள்கை நெறியற்ற கட்சி ஒரு புறம்
மதம் சார்ந்த கட்சி ஒரு புறம்
நடிகர்கள் மட்டுமே நாடள தகுதி படைத்தவர் என்ற அலைகள் ஒரு புறம்...

இப்படி எப்படி அதன் பின் மக்கள் அலை அலையாய் மாபெரும் கூட்டமாய் போகமுடிகிறது. அப்படி எனில் அது எப்படிப் பட்ட அறிவு மிக்க கூட்டமாக இருக்க முடியும் என்பதைப் பாருங்கள். இது போன்ற மக்களால் அமையப்பெற்ற அரசு எப்படி இருக்கும்?

மது ஆலையில் தயாரிப்பை நிறுத்தாமல் மது நுகர்வோரை மது விலக்கச் சொல்கிறோம்
புகை தயாரிக்கும் ஆலையை அரசு தடை செய்யாமல் புகைப்பது உடல் நலத் தீங்கு என புத்தி சொல்கிறோம்
பான் பராக் குத்கா தயாரிப்பை நிறுத்தாமல் அது புற்று நோய் தரும் என நெறி பேசுகிறோம்
குடிநீரை அடைத்து விற்கும் ஆலைகளை தடை செய்யாமல், அவர்களுக்கு உரிமம் கொடுத்து விட்டு குடிநீர் விற்பனை கொடுமை எனக் கட்டியம் பேசுகிறோம்

ஒரு முறை தயாரிக்கும் நெகிழி என்பதே இல்லையாம். பொதுவாக அதைத் தயாரித்த அறிவியலாளர் அதை பன்முறை பயன்படுத்தவும் அதை எப்போதும் கிழியாதிருக்க அப்படி செய்தாராம். ஆனால் அது காலப்போக்கில் அதன் பொருள் மாற்றம் பெற்று ஒரு முறை பயன்படுத்திய பிறகு தூக்கி எறிவதால் புவியின் மேனியில் நீரை கீழ் இறக்க விடாமல் பூமியை மலடாக்கி விடுகிறது என்று  செய்திகள்

சரி அது எப்படி இருந்தாலும் தீமை செய்யும் ஆலையை அப்படியே தடுத்துவிடாமல்
தயாரிப்பை முடுக்கி விட்டு பயன்பாட்டை முடக்கி வைப்பது எந்த நியாயம்...

அது போல இந்த 3 எண் லாட்டரியை யார் செய்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதை அங்கேயே தடுக்காமல் அதை மக்களை விளையாட வைத்து குற்றவாளியாய் அவர்கள் சட்டத்துக்கு புறம்பானவர்கள் என காட்சிப்படுத்துவது எப்படி நியாயமாக இருக்க முடியும்...

பொருள் முதல் வாதம் என்ற அடிப்படையில் ஒர் பொருள் இருந்தால் தான் அது எதற்கு வேண்டும் எப்படி பயன்படும் எப்போது தேவை என்பது போன்ற கேள்விகள் எழும் அது இல்லையென்றால் அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை. அது போல அரசே தடுத்துவிட்டால் மக்களால் எப்படி நுகர முடியும். அதற்கு சீனா ஜப்பான் போன்ற நாடுகள் முன்னுதராணம்.

சிறு குழந்தையாய் இருக்கும்போது பள்ளிச் செல்லும் குழந்தைகள் வழியில் உள்ள மிட்டாய்க் கடையைப் பார்த்த உடன் அம்மா மிட்டாய் என அடம் பிடித்து அழுவதை நாம் கண்டிருக்கலாம். பள்ளி செல்லும் வழியில் மிட்டாய்க் கடையே இல்லையெனில் அந்தக் குழந்தைக்கு அதைக் கேட்க தோன்றியிருக்காது. விளையாட்டுச் சாமான் கேட்பதும் அப்படித்தான்.

மதுவைக் குடிப்பதும், புகைப்பதும் எல்லா தீயபழக்கங்களும் அப்படித்தான்.

இப்போது அது சரியானதுதான் என்றாலும் கேள்விகள் எழுகின்றன...கடந்த இரண்டு நாளாக சிறுமி வன்புணர்ச்சி, ஆபாசப் படங்கள் டவுன்லோட் செய்தவரும் ஷேர் செய்தவரும் 1500 பேரும் அருகிருக்கும் காவல்நிலையத்துக்கு பட்டியல் அனுப்பப் பட்டு அவர்களுக்கு தண்டனையும் கவுன்சிலிங்கும் அளிக்கப்படும் என்ற செய்திகள்.

நாம் இந்த செயல்பாட்டை எதிர்க்கவில்லை. அந்த செயல்பாட்டை ஆதரிக்கவும் இல்லை. ஆனால் இதை டவுன்லோட் செய்வாரை கவனிப்பதற்கும் முன் ஏன் அப்லோட் செய்வாரைக் கண்டறிந்து அப்போதே முளையிலேயே கிள்ளி அதை வரவிடாமல் செய்தால் அது சரியானதாக இருக்காதா? அதை எப்படி அதன் பின் அவர்கள் ஷேர் செய்ய முடியும்? அதற்கான திட்டவட்டமான நடவடிக்கையை அரசு கடுமையான கண்டிப்புடன் நடைமுறைப் படுத்தி ஒரே போக்குடன் தடைப்படுத்தி விடலாமே. எல்லாவற்றுக்கும் ஒர் முடிவாகிவிடுமே அதற்கு மாறாக நுகர்வோரைக் கண்டு பிடித்து செய்வது எல்லாம் அவர்களிடம் இருந்து கையூட்டு பெற வழி வகையே செய்யுமேயன்றி  உண்மையிலேயே காவல்துறையும் அரசு நடவடிக்கைகளை அமல்படுத்தும் துறைகளும் சரியாக இதை செய்ய வேண்டுமே என்ற கேள்விகள் எழாமல் இல்லை. ஏன் எனில் சில நிதி நிறுவனங்கள் மோசம் செய்வதாக வந்து  அள்ளிச் சென்ற கோடிக்கணக்கான‌ ரொக்கமும், கணக்கிலடங்கா சொத்துகளும் பற்றி மறுபடியும் தகவலே இல்லை என்ற செய்திகள் இருக்கின்றன.
Image result for ramalinga vallalar
நள்ளிரவில் இந்தியப்பணத்தை செல்லாக் காசாக்கி நாடெங்கும் ஒரே இரவில் பெரும் அவலத்தை ஏற்படுத்திய துணிச்சல் உள்ள அரசுகளால் எதையுமே செய்ய முடியும் இவர்கள் இதை இப்படி செய்யட்டுமே பாராட்டலாம். ஏழைக்கொரு நீதி பணத்துக்கு மறு நீதி என்று அம்பேத்கரின் சாசன நீதியையும் சாதாரண நீதியாக்கி நாட்டை ஆளுக்கு தகுந்த மாதிரி வாய்ப்பை நடத்திக் கொண்டிருக்கும் அரசை எஸ்.வி சேகரை , ஹெச் ராஜாவை சிதம்பரம் கோவில் அர்ச்சகரை எல்லாம் காவல்துறை தீண்டாமல் சாதரண மனிதராக இருந்தால் கேவலப்படுத்திடும் அரசல்லவா இது...

பொன்மாணிக்க வேல் , சகாயம், ட்ராபிக் ராமசாமி, போன்றோர் காயடிக்கப்பட்ட கதை எல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை...

கொள்வார் இல்லையேல் கொடுப்பார் இல்லை என்பது அறம். ஆனால் அதற்கு ....அனைவரும் திருந்த வேண்டுமெனில் அவர்களாகப் பார்த்து அவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு பல நூறாண்டு ஆகுமே...அப்படி ஆனாலும் நடக்காதே...அதற்கு மாறாக மக்களின் அரசு என்பதே அதற்குத்தானே அது மக்கள் நலம் வேண்டுமெனில் தடைப்படுத்தலாமே...

கடை விரித்தேன் கொள்வாரில்லை....இராமலிங்க வள்ளல்.
Image result for ramalinga vallalar
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை



No comments:

Post a Comment