Sunday, December 22, 2019

முதலில் அரசுகள் ஆவணங்களைப் பிழையின்றி தர முயற்சி செய்யலாமே? கவிஞர் தணிகை

 முதலில் அரசுகள் ஆவணங்களைப் பிழையின்றி தர முயற்சி செய்யலாமே? கவிஞர் தணிகை

Image result for cab riots"

சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி இந்த அரசுகள் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடுருவல்காரர்களை கண்டுபிடிக்க சிறந்த யுத்திகளை கடைப்பிடிப்பதை விட்டு விட்டு இந்தியா என்ற மாபெரும் நாட்டில் உள்ள அத்தனை 136 கோடி மக்களுக்கும்  பொதுவான ஒரு சல்லடையை ஏன் உருவாக்க வேண்டும்?

கொடுத்துள்ள கொடுத்த கொடுக்கிற வாக்குரிமை அட்டை, ஆதார் அட்டை, குடும்ப ஸ்மார்ட் கார்ட், பாஸ்போர்ட் போன்றவற்றை கொடுக்கும் தகவல்களை பிழையின்றி அச்சடித்து தரும் யோக்யதை அடையாத நாடு இது. எனது மனைவிக்கு மட்டும் 5 முறை மாற்றி மாற்றி பிழை திருத்த வேண்டி வாக்குரிமைக்கு விண்ணப்பித்து அட்டை வாங்க வேண்டி வந்தது பிழை திருத்த என்று கடைசியில் நகல் வாக்குரிமைச் சீட்டு என்ற ஒன்றைத்தான் பெற்று வைத்திருக்கிறோம். அதற்குள் ஏகப்பட்ட அலைச்சல் . வீட்டில் உள் பூசல். குழப்பம்.
Image result for cab riots"
சரியான விலாசம் அரசு பதிவுகளில் ஏற்படுத்த எத்தனை முறை முயன்றாலும் சாதாரண ஒரு கீழ் மட்ட மக்கள் பிரதிநிதி தனது சாதிப்பிரிவுடன் அந்தப் பகுதியில் உள்ள மக்களின் அடையாள அட்டைகளில் வீதி பெயர் இடம் பெற்றிருந்ததை மாற்ற முயல்வதை தடுக்க முடிகிறது என்னும் இந்த நாட்டில் இந்த அரசு என்ன செய்ய முடியும் எனக் கேள்விகள் நிறைய உண்டு.

 அவர்கள் அச்சடித்துக் கொடுத்த அரசின் விவரம் அடங்கிய நமது அதே குறிப்பு அட்டைகளில் அது நொள்ளை இது சொள்ளை என்னும் அரசு மக்களுக்கு எந்தவித அலைச்சலும் இல்லாமல் சாலைகளில் பொது அரசு அலுவலகங்களில் எல்லாம் மக்களை காயவைத்து சாகடிக்காமல் இது போன்ற குடியுரிமை,பதிவேட்டுப்பணிகளை வீடு வந்தே பெற்றுச் செல்ல முடியுமா? பெற்றுச் செல்ல முடியாதா? நள்ளிரவில் இந்தியப்பணத்தை செல்லாது அதனால் டிஜிட்டல் மயம் ....மயம் என்று சொன்ன அரசால் ஒரு படியும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படுத்துவதில் தோல்வி மட்டுமின்றி பின்னடைவும் ஏற்படுத்தி விட்டது என்று வரலாறு நிரூபித்து விட்டது...இன்னும் இந்த அரசு திருந்தியபாடில்லை.
Image result for cab riots"
பாஸ்ட் டேக் என்னும் ஒரு சின்ன வெங்காயத்தை சொல்லி அறிவித்து விட்டு அறிவித்த தேதியில் அதை அமல் படுத்த யோக்யதை இல்லாத அரசு... டோல்கேட் தேவையில்லாமல் எத்தனையோ சாலைகள் இருக்க அத்தனையிலும் தனியாரும் அரசின் கூட்டில் அரசியல்  செய்தபடி இருக்கிற சூழல்கள்.

 ஔரங்க சீப்பால் செய்ய முடியாததை, ஆங்கிலேயரால் செய்ய முடியாததை  ஒரே இந்தியா,ஒரே ஆட்சி, ஒரே குடும்ப கார்ட்,  இப்போது குடியுரிமைச் சட்ட மசோதா என்றெல்லாம் ஏற்படுத்த முனைகிறார்கள்...அவர்கள் கட்சி அஜென்டா மட்டுமே அவர்கள் இலக்கு, குறிக்கோள் , நோக்கமாக இருக்கிறதே ஒழிய மக்களுக்கான அரசாக இல்லை இது. வீணாய்ப் போன மக்களும் காங்கிரஸ்ஸை தூக்கி எறிய மதரீதியான முனைப்பில் மட்டுமே யோசித்து மறுபடியும் இவர்களை வரவழைத்து விட்டார்கள். இப்போது மறுபடியும் உயிர்ப்பலிகள். நீங்கள் போராடிக் கொண்டே இருங்கள் நாங்கள் எங்கள் பணியை தொடர்கிறோம் என்கிறார் மத்திய உள் துறை அமைச்சர் சற்றும் மக்களைப் பற்றிய கவலை இல்லாமல்

மாநில அரசின் துறைகளில் பங்கு கொண்டு மத்திய அரசின் ஆட்சி நாட்டாண்மையை மாநிலத்தின் ஆள்வோரின் அவரவரின் பலஹீனம், குறைபாடு, ஊழல், வருவாய்க்கதிகமான சொத்து போன்றவற்றின் மூலம் காயடித்து மத்திய ஆட்சியின் வல்லமையை பிரயோகித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
Image result for cab riots"
 விலைவாசி ஏற்றம்,வேலைஇல்லாத் திண்டாட்டம், நதி நீர் இணைப்பு, மருத்துவம் கல்வி, உணவு விவசாயம் ஜிஎஸ்டி பொருளாதாரப் பின்னடைவு போன்ற நாடு தழுவிய பிரச்சனைகளை  எல்லாம் மறைத்து விட்டு இராமர் கோவில் கட்டுகிறோம் பாராளுமன்றம் கட்டுகிறோம்  எனச் சிட்டாள் வேலைகளில் எல்லாம் கவனம் செலுத்தி மக்களை திசை திருப்பி வருகிறது இந்தியா என்னும் மாபெரும் ஜனநாயகப் பேரரசு. உலகிலேயே மாபெரும் நாடு மற்ற நாடுகளுக்கு எல்லாம் இந்தியப்பணத்தைப் படி அளந்து விட்டு இந்திய உழைப்பாளிகளின் பணத்தை சுரண்டி பெருந்துன்பம் இழைத்துவருகிறது. இதற்கு ஊடகம் எல்லாம் துணையாய் நிற்கிறது.
Image result for cab riots"
சசிகலா மேடம் 500 1000 ரூபாய் பண நோட்டு செல்லாது எனச் சொன்ன போது வாங்கிய சொத்துகளையே இப்போதுதான் 3 ஆண்டு கழித்து இப்போதுதான் வெளிப்படுத்தி இருக்கிறது. மேலும் பதுக்கிய பதுக்க விட்ட அத்தனை பெருமுதலாளிகளும் அரசு தொடர்புடையவர்களாகவே இருந்தார்கள் என்னும் பெரு உண்மை எந்த விளைவையும் ஏற்படுத்தாத பணச் செல்லா செயலுடன் மறைக்கப்பட்டு விட்டது. ஏழைகள் தம் பணத்தை வங்கிகளில் செலுத்தவும் திரும்ப பெறவும் உயிரை விட்ட கதையும் நீண்ட க்யூ வரிசையில் நின்ற கதையும் தமது ஊதியத்தை எடுக்கவே உழைப்பை செலுத்தி வியர்வை வழியே எட்டிய பணத்தையும் எட்ட விடாமல் செய்த அரசு ஐபிஎல்  லலித் மோடி, நீரவ் மோடி, விஜய் மல்லையா, போன்ற பெரு முதலாளிகளிடம் அனைவரிடமும் திரட்டிய பணத்தைக் கொடுத்து விட்டு வங்கிகள் ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. அத்தனையும் அரசின் செல்லம். மக்களின் செல்வம்.
Image result for cab riots"
இந்த நாட்டின் ஜியோ முதலாளிகள், பெட்ரோலிய முதலாளிகள், பிளாஸ்டிக் முதலாளிகள் எல்லாம் ரிலையன்ஸ் என்னும் நாட்டின் முதல் பணக்காரர் கையில் கொண்டு சென்று முடக்கப்பட்டதாய் மாறி இருக்கிறது.

அரசு என்னும் பதவிக்கு வந்து விட்டால் இவர்கள் செய்வதை எல்லாம் மக்கள் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற கருத்துக்கு எதிரான மோதல்களில் தான் இத்தனை உயிர்கள் போயிருக்கின்றன. இன்னும் பிப்ரவரி பட்ஜெட்டில் என்ன என்ன  இருக்கின்றனவோ...நாட்டில் சாந்தி நிலவ ஆட்சி புரிவது ஒரு வகை...நாட்டில் மக்களை நிம்மதி இல்லாமல் எப்போதும் நெருப்பைக் கட்டிக் கொள்ள மிரட்டியே ஆள்வது மறு முறை. இந்த ஆட்சி இரண்டாம் முறை என சொல்லத் தேவையில்லை. பணம் படைத்தவ‌ர்களுக்கான கார்ப்ரேட் அரசு அப்படித்தான் இருக்கும்.இருக்கிற ஜி.எஸ்.டி போதாமல் இன்னும் கூட ஏற்றிப் போவதாகவும் பேச்சு இருக்கிறது.நடக்கட்டும் நடக்கட்டும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை






No comments:

Post a Comment