Sunday, April 28, 2019

அரசு அலுவலகங்கள் இயங்குகிறதா? கவிஞர் தணிகை

அரசு அலுவலகங்கள் இயங்குகிறதா? கவிஞர் தணிகை
Image result for govt offices are  not working in india


அரசு அலுவலகங்கள் இயங்குகிறதா? மக்களாட்சிதான் நடக்கிறதா? மத்திய மாநில அரசுகள் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கின்றனவா இது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதுதான்.

எடுத்துக் காட்டாக: எங்கள் ஊராட்சிப் பகுதியில் 50 ரூபாய் இருந்த குடி நீர்க் கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு 220 உயர்த்தி விட்டார்கள் எந்தவித ஆட்சேபணைக்குரலுக்கும் மதிப்பளிக்காமலே.

இது குறித்து நான் மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் மூலமும், தபால் மூலமும் , தமிழக முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவுக்கு மின்னஞ்சலோ, ஆன்லைனிலோ முயற்சி செய்தும் அவை ஏற்கும் நிலையில் இல்லாததால் தபால் வழியிலும், அதற்கு மேல் கால அளவுக்குப் பின் நுகர்வோர்நீதிமன்றத்திற்கும் கூட தபால் அனுப்பினேன்  அத்துடன் சேலம் மேட்டூர் ரயில் பற்றியும் நுகர்வோர் நீதிமன்றத்துக்கும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இதுவரை எந்த அரசு அலுவலகத்திலிருந்தும் இது குறித்து எந்தபதிலுமே இல்லை. தனி மனித குரலுக்கும் பிரதிநிதித்துவத்துக்கும்தான் இந்நிலை என்று நினைக்காதீர்

 ஒரு பதிவு பெற்ற அரசு ஊழியர்  அவர் கல்வி நிலையம் சார்ந்த பிரதிநிதித்துவத்துக்கும் நிலை இதுதான். அவர் கல்வி நிலையம் சார்ந்த ஒரு முக்கியமான அடிப்படைத் தேவையை நிறைவேற்றும் ஒரு மின்சாரப் பொருளை சீர் செய்ய அவர் மிகுந்த கால அளவை செலவிட்ட பின் அந்த உபகரணம் பயன்படாது எனச் சொல்வதற்கே 18 மாதங்கள் இத்தனைக்கும் அவர் மனு நீதி நாள், கிராம சபை  வார மாதாந்திர அரசு தொடர்பான கூட்டங்களில் எல்லாம் இது குறித்து எழுத்து வடிவில் பதிவு செய்ததற்கே இந்நிலை மேலும் அந்த குறை சரி செய்யப்படவே இல்லை என்று அவர் தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா முதல்வர்களாக இருக்கும் போது இரு முறை நான் முதல்வர் குறை தீர்க்கும் பிரிவுக்கு எழுதி அதற்கு பதில் பெற்று ஏன் சரியான நடவடிக்கை எடுத்ததையும்  கண்டிருக்கிறேன்.

ஆனால் இப்போது மாநில மாவட்ட ஏன் மத்திய நிலையும் அப்படியேதான் பிடித்துவைத்த கல்லாக இருக்கிறது.

அன்றைய காலக் கட்டத்தில் ஒரு கடிதம் எழுதியதற்கு பதிலை குடியரசுத் தலைவராக இருந்த மக்கள் குடியரசுத் தலைவரே எழுதினார்.

எல்லாமே ஆன்லைனில் விண்ணப்பித்து செய்து கொள்ளலாம் என பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் எந்த வித அசைவும் இல்லை. இலஞ்சம் இல்லாமல் எந்த வித பதிவும், சான்றிதழ்களும்  மக்களுக்கு கிடைப்பதில்லை.

மோடி அரசும், எடப்பாடி அரசும் தமது அரசை எப்படி தக்க வைத்துக் கொள்ளலாம் என குள்ள நரித்தந்திரம் செய்வது ஒன்றிலேதான் குறியாக இருக்கிறதே ஒழிய எந்த வித பணியிலும் கவனம் செலுத்துவதில்லை என்பது நான் மேல் சொன்ன இரண்டு உதாரணங்கள் வழியே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

எம்.எல்.ஏ, எம்.பி பற்றி சொல்லவே வேண்டாம் மிகவும் அருகே உள்ள காவிரியும் மேட்டூர் அணையும் இருக்கும்போதும், நாடு விடுதலை ஆகி சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலான பிறகும் குடி நீர் பிரச்சனையைக் கூட தீர்க்காத மக்கள் பிரதிநிதிகள்...
நல்ல அரசு, நல்ல மக்கள், நல்ல மக்கள் பிரதிநிதிகள், நல்ல அரசின் அலுவலகங்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment