யாருக்கு வாக்களிக்க வேண்டும்? கவிஞர் தணிகை
சுமார் 2450 ஆண்டுகள் முன்பு சாக்ரடீஸ் :ஏதென்ஸ் நகரத்து மக்கள் இடையே 501 பேரில் சாக்ரடீஸுக்கு மரணமா விடுதலையா என்ற வாக்கெடுப்பில் 220 பேர் சாக்ரடீஸை விட்டு விடச் சொல்ல 281 வாக்குகள் அவர் கொல்லப்பட வேண்டும் விஷக்கோப்பை ஏந்தி விஷமருந்தி என்று முடிவு இருந்ததால் தற்கொலையை தாமே ஏற்றுக் கொண்டார் என்பது உலக வரலாறு.
இவரே உலகின் முதல் தத்துவ ஞானி என்றும் இவரை சந்தேகம் கேட்பாரை இவர் கேள்வி மூலமே எதிர் கேள்வி கேட்டு தெளிவு பெறச் செய்து இவரைச் சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் பட்டாளமே இருந்ததும் செய்திகள்...இவரை தீர்த்துக் கட்டியது மற்ற சில கலைஞர்கள் இவர் மேல் கொண்ட பொறாமையும் வாக்கெடுப்பும்.பகலிலும் விளக்கேந்தி மனிதரைத் தேடுகிறேன் என்பார் என்பதெல்லாம் செய்திகள்
சுமார் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை முதலாம் பராந்தக சோழன் ஏற்படுத்திய கிராம சபையின் குடவோலை முறை தங்களது பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய காரணமாக இருந்தது என்று நமது தமிழர் கால வரலாறு சொல்கிறது அது மட்டுமில்லாமல் ஒரு தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு அதாவது ஓலையில் பேர் எழுதி குடத்தில் போடப்படுவதற்கே தகுதிகள் இவை இவை என்றும், தகுதியற்றவர் இவர் என்றும் சில விதிகள் இருந்ததாகவும் பட்டியல் இருக்கின்றன இந்தக் கல்வெட்டை இப்போதும் உத்திர மேருர் கல்வெட்டு வாயிலாக அறியலாம்.
இப்போது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று எங்கு பார்த்தாலும் அறிவிப்புகள் அப்படி இருக்கும்போது நோட்டா மற்றும் 49 ஓ வும் இருப்பது எதனால்... இது இருந்தால் அது இருக்கக் கூடாது அது இருந்தால் இது இருக்கக்கூடாதல்லவா?
உலகிலேயே மிக முன்னேறிய நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், போன்ற நாடுகளில் எல்லாம் கூட வாக்குச் சீட்டு முறை இருக்கும்போது இந்திய மாபெரும் உலக ஜனநாயகத்தில் மின் பொருளியல் வாக்கு எந்திரம் வந்து பல தேர்தல் ஆகிவிட்டது.இப்போது அந்த வாக்கு யாருக்கு விழுந்தது என்பதையும் காட்சிப்படுத்திட...
செயற்கைக்கோளை ஏவுகணை வீசி அழிக்கும் நாடுகள் உலகிலேயே நான்கு மட்டுமே அவற்றில் இந்தியா ஒன்று...ஆனால் குடி நீர் கழிப்பறைகள் கூட குடிமக்களுக்கு இல்லாமல் கிடைக்காமல்...
சுதந்திரமும் குடியரசும் பெற்று சுமார் அறுபது முதல் எழுபது ஆண்டுகள் போனபின்னும் இன்னும் வெள்ளை ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா விடுபடவே இல்லை ஒரு வரையறுக்கப்பட்ட இனம் சார்ந்த கனிஷ்கா ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கிறார் இந்த படிக்காத மந்திரிமார்களுக்கு சல்யூட் அடிக்க
ஆங்கிலம், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கில வைத்தியம், ஆங்கில மொழியறிவு, கோடை விடுமுறை, அவர்கள் என்ன செய்தார்களோ என்ன தந்தார்களோ என்ன என்ன நடைமுறைப்படுத்தினார்களோ அவையே இன்றும் தொடர பேர் மட்டும் இந்திய ஜனநாயகம்...
காலனி ஆதிக்கம் போய் பணக்காரக் காலனி ஆதிக்கமாகிவிட்டது. உண்மையில் கீழ் தட்டு மக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கொண்டு சேர்க்கப்படவே இல்லை...
இந்நிலையில் மத்தியில் தேர்தல் மோடியின் பாரதிய ஜனதாவா காங்கிரஸ் கட்சியின் ராகுலா, மாயவதியா, மமதாவா, அரவிந்த் கெஜ்ரிவாலா மாநிலக்கட்சிகளின் எவற்றுக்கு வாக்களிக்கப் போகிறோம்.
மாநிலத்தில் : அ.இ.அ.தி.மு.க அணியும் திமுக அணியும் அதில் ஆளும் கட்சியின் கைப்பாவையாக ஆம்புலன்ஸ் சேவையும், காவல்துறை வாகனங்களும் தேர்தல் பணப்பட்டுவடாவில் ஈடுபடுத்தப்பட எதிர்க்கட்சிகளின் பணப் பட்டுவடாவை மட்டும் சுழன்று சுழற்றி தேர்தல் ஆணையமும் ஆட்சியும் அதிகாரமும் பிடித்து வருவதாக கோடிகளாக தங்கக் கட்டிகளாக புதுக் கருக்கழியா கரன்ஸி நோட்டுகளுமாய்...என எதிர்க்கட்சிகள் குற்றம் சாற்றிட ஊடகம் அதன் பங்குக்கு ஒருபக்கம் தி.மு.க கூட்டணி வெல்லும், என்றும் மோடிக்கு அறுபது சதத்திற்கும் மேல் மவுசு கூடி விட்டது என்றும் செய்திகளை இடைவிடாமல் சொல்லி வருகின்றன.
இந்நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்று எப்படி சொல்வது இவர்களுக்கு எல்லாம் வாக்களிக்கக் கூடாதுதான். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால், கமல் போன்றோர்க்கு சீமான் போன்றோர்க்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா என்ன எப்படி இருந்தாலும் பழைய நுழை நரிகளுக்குப் போடுவதற்கு பதிலாக புதிய முகங்களை அமர்த்துவதும் ஏற்கெனவே பதவியில் இருந்தவரை தூக்கி எறிந்து மறுபடியும் வேறு நபர்களைக் கொண்டுவருவதும்தான் சரியான வாக்களிக்கும் முறையின் யுக்திகளாய் இருக்க வேண்டும்...எனவே வாக்களிப்பது அப்படி இருந்தால் தான் நல்லது...அப்படித்தான் வாக்களிக்க வேண்டும் அப்படி நடக்குமா மக்கள் செய்வார்களா?
இங்கு தான் குற்றவாளிகளின் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடக்கத் தயாராகி இருக்கிறார்களே...இந்தியாவின் ஒரு சதவீத மக்களிடம் எழுபத்து மூன்று விழுக்காடு செல்வ வளம் குவிந்திருக்கிற ஒரு நாட்டில் ஏழை தம் பணத்தை வங்கியில் போட்டு எடுக்க விடாது எடுக்க முடியாது பணம்படைத்த முதலைகளுக்கு அது வாராக் கடனாய் பயன்பட வேண்டும் என இருக்கிற நாட்டில் அதைப்பற்றி அரசு எந்த வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியா நாட்டில்
சிறுமிகளை வன்புணர்ச்சி செய்த காட்டுமிராண்டிகளை விடக் கேவல
மான குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கும் பதிலாக ஆயுள் தண்டனை என உயர்நீதிமன்றங்கள் நீதி செய்து வருகிற நாட்டில்...
ஆள் ஆளுக்கு சட்டமும் நீதியும் மாறிக் கொண்டிருக்க
இங்கு நாம் நினைப்பதற்கா இவர்கள் வாக்களிப்பர், எல்லாம் சாக்ரடீஸ் கதைதான் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆன போதும்...நியாயம் நீதி நேர்மை எல்லாம் வெல்லப்போவதில்லை...
மாறுபட்ட சிந்தனை இருந்தாலே அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனித சமுதாயம் கலிலியோவை ஆயுள் சிறை வைத்ததும், கோபர்நிகஸ் நாவைத் துண்டாடியதும்...சரித்திரம் எப்போதுமே மூடத்தனம் செய்வாரையே விரும்புகிறது நல் அறிஞரை ஏற்றுக்கொள்வதே இல்லை...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment