மனித மாய்மாலங்கள்: கவிஞர் தணிகை
என்றோ இயற்கைச் சீற்றத்தால் இறந்த கோடிக்கணக்கான உயிர்களின் உடல்களின் இரசாயனக் கசிவெண்ணெயே மனிதராகிய நாம் அனைவரும் பயன்படுத்தி வரும் வாகன எரிபொருள்...
என்றோ இயற்கைச் சீற்றத்தால் பட்டு எரிந்து போன மாபெரும் மரங்களின் புதை நிலை நிலக்கரிகள் நமது மின்சாரத் தேவைக்கு அனல் மின் நிலையத்தை மின் சார உற்பத்தியின் கலயமாக்கி
என்றோ சேர்ந்து நிலத்து மேலே சேர்ந்து நிற்கும் நீரே நமக்கு பயன்பாட்டு நீராக
என்றோ பண்பட்ட நிலமே நமது உணவுத் தேவைகளை எல்லாம் நிவர்த்தி செய்யும் பூமியாக மண்ணாக
இப்படி எல்லாவிதத்திலும் இயற்கையிடமிருந்து பெற்றுவிட்டு மனிதம் எல்லா அதமங்களும் செய்யும்போது அக்கினியாய் கதிரவன் தகிக்க நிலத்தில் மரத்தினடியில் ஒதுங்க முடியாமல் நமது கூட்டம் மட்டுமல்ல விலங்கினங்களும் பறவையினங்களும்...
என்னதான் குளிரூட்டப்பட்ட அறையாய் இருந்தாலும் அன்றைய ஏற்காடு கோடைவிழா நடந்ததே அதற்கு இணையாகுமா இன்று ஏற்காட்டிலும் தீயாய் தகிக்கிற வெப்பம்
ஊட்டி கொடைக்கானலிலும் இந்த கானக வெப்பத்தில் பணம் படைத்த மனிதர்கள் ஒதுங்கி அடைக்கலம் தேடுவார்களே அதற்கும் வந்தது வேட்டு.... அங்கும் இங்கும் எங்கும் வெப்பக் காடாய்
ஊட்டியின் 20 கி.மீ ரயில் பயணத்துக்கு பெரும் கட்டணம் வசூலிப்பதாகவும் அன்று வெளிநாட்டுப்பயணிகள் நிறைய வருவார்கள் என்றும் செய்தி...
எனவே குடிநீரும்,பயணமும், உணவும், யாவும் பணம் படைத்தவர்களுக்கே என ஆகிவிட்ட நாட்களில் பணத்தின் பின்னே தேர்தல் ஆணையமும் ஓடிக் கொண்டிருக்கிறது மக்கள் பின்னே ஓடமாட்டார்களா என்ன....ஓடாமல் வீட்டில் இருப்போரையும் இந்த வெப்பசலனம் இருக்க விடாமல் யாவற்றையும் அழித்து விட்டார்கள் நாளையப் பற்றி எண்ணாத பாவிகள்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment