தேர்தலை நம்பி ஏமாந்ததும் ஏமாற்றியதும் போதும்: கவிஞர் தணிகை
பாராளுமன்றத் தேர்தல்,சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றை ஒரே கட்டமாக நடத்துவதும்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களை மக்கள் சேவையாளர் என நிரூபிக்காமல் தவறுகளையும் குற்றங்களையும் செய்ய நேரிடுகையில் அவர்களை பிரதிநிதிகளாக அல்லாதார் என்று திருப்பி திரும்ப அழைக்கும் உரிமை வாக்காளர்க்கு வரவழைப்பதும்
30 சதவீதம் வாக்கு வாங்கி பெருமளவில் வென்று விட்டதாக ஆள்வோர் இருக்க மீதம் 70 சதவீதம் போட்ட வாக்குகள் விரயமாகிடும் நிலை தவிர்த்து வாக்கு விகிதாசார முறைப்படி அட்சி அதிகாரப் பங்கீடுகள் இருக்கும் வண்ணம் அனைவரும் அனைத்து தரப்பு கட்சிகளும் 100 சதவீத மக்களின் பிரதிநிதிகளுமே நிர்வாகத்தில் பங்கு பெறும் பதவிகள் தரப்பட வேண்டும்.
நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கும் மேலான பிறகும் குடிநீருக்கும், கல்விக்கும் மருத்துவத்துக்கும் எல்லா மக்களுக்கும் உத்தரவாதமில்லா தேர்தல் முறைகளில் இருந்து மீள வேண்டும் அல்லது அந்த முறையை மாற்றித் திருத்திக் கொள்ள வேண்டும்.
கட்சிகளின் வழியே வருவார் மட்டுமே ஆள முடியும் என்ற நிலை இருப்பதால்தான் கமல், சீமான் போன்றோர் கூட கட்சி ஆரம்பிக்காமல் இங்கே ஒன்றும் செய்ய வழி இல்லை என்ற முடிவுக்கு வந்து அல்லலுறுகிறார்கள். சசிபெருமாளையும் சின்ன பையனையும் சேவைவழியில் இழந்த எங்களது சிறு அமைப்புகளான நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம்,தமிழக இலட்சியக் குடும்பங்கள் போன்ற இலட்சிய அமைப்புகள் எல்லாம் காணாமல் போயிருக்கின்றன.
எனவே கல்வியாளர்கள், அறிவியல் அறிஞர்கள், மக்கள் சேவையாளர்கள்,அறிஞர்கள் கட்சி சார்பில் அல்லாமல் ஒருங்கிணைந்து நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு தொண்டு செய்திட ஆட்சி முறை அதிகார வரம்புகள் கைக்கொள்ளப்பட வேண்டும். அதற்கான சட்ட வரைவுகளை நீதிமன்றங்களும், பாராளுமன்றமும், சட்டசபைகளும், ஊராட்சி அமைப்புகளும் குடியரசுத் தலைமயும், தேர்தல் ஆணையமும் முன் மொழிந்து கடமையாற்றிட வேண்டும். அப்போதுதான் இந்திய ஜனநாயகமானது தனது அமைப்பு முறையில் மாறி மக்களுக்கான அமைப்பாக மாறி அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லதை செய்திட முடியும்.
இல்லாவிட்டால் பணநாயகமே காலமெல்லாம் தொடரும்.
நோட்டா அதற்கு வழி வகுக்கும் எனச் சொல்லப்படுவது எல்லாம் கானல் நீரே..
இப்படி தேர்தல் வழியில் வரும் பல்வேறுபட்ட நபர்களுக்கும் படித்தார் படிக்காதார் நல்லார் கெட்டார் குற்றம் செய்தார் செய்யாதார் என்ற வேறுபாடின்றி இவர்கள் பதவிகளில் வந்தமர்ந்து விட்டால் ஏனைய அறிவு சார்ந்த வர்க்கப் பதவியில் உள்ளாரும் அனைத்துப் பொறுப்பு பணிப் பதவிகளில் உள்ளாரும் சலாமிட்டு அவர்கள் சொன்னதை செய்வதும், அவர்கள் சொல்வதைக் கேட்பதுமான முறைமைகள் ஆட்சி அமைப்புகளில் இல்லாது ஒழித்திடல் வேண்டும்.
இதை எல்லாம் செய்யும்போதுதான் இந்தியாவின் குடியாட்சி இந்தியாவின் குடியரசு உண்மையிலேயே பணநாயகத்திலிருந்தும் அரசியல் சுரண்டலிலிருந்தும் உண்மையிலேயே வெளி வந்து மக்களுக்கான அமைப்பு முறைகளாக மாற முடியும் அதற்காகவும் இயங்க முடியும். இல்லையேல் இதே சுழற்சிதான் தொடரும்.
மோடி இல்லையேல் ராகுல், ராகுல் இல்லையேல் மோடி இல்லையேல் யாரவது ஒரு மமதா, மாயா, என்றெல்லாம், ஸ்டாலின் இல்லையேல் ஈ.பி.எஸ், ஓபிஎஸ் என்றே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான்... ஆனால் எந்திரம் மாறப்போவதில்லை...தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜாக்களின் அடிமையாகவே தேர்வு செய்வார் இருக்க வேண்டியதும் அவர்கள் வாக்கெல்லாம் விரயமாகவும் வேண்டியதுதான்...அதில் வேறு ஜனநாயகக் கடமை யாற்ற வில்லை என்றால் அவர்கள் எல்லாம் துரோகி விரோதி என்றேல்லாம் சொல்லப்பட வேண்டியதுதான்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment