சற்று முன்னர் கிடைத்த செய்தி: கவிஞர் தணிகை
சேலம் பொறியாளர் சி.மணி அவர்கள் சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த நிலையில் மாரடைப்பால் காலமானார் என்பதை எங்களது சகோதர நண்பர் சிற்பி. கொ. வேலாயுதம் அவர்கள் சற்று முன்னர் என்னிடம் தெரிவித்தார்.
அவரது உடலுக்கு உண்டான இறுதி மரியாதை இன்று மாலை நடைபெற்று இன்று மாலையே நல்லடக்கம் செய்யப்படும் என்றும் செய்திகள் உள்ளன.
சிறிய வயதுதான். வயதுக்கு வந்து மணமாகா ஒரு மகனும் மகளும் படித்து முடித்து பணியில் இருக்கிறார்கள் என்றும் நான் சந்தித்த காலத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நல்ல சுறு சுறுப்பான நண்பர்.
நான் தலைமை ஏற்க முடியாமல் இயக்கத்தை விட்டு பொறுப்பை இவர் கையில்தான் கொடுத்து வழிவிட்டேன்.
எல்லா பணியையும் இழுத்துப் போட்டு செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற மனிதர். இவரும் இவரது நண்பரும் கிளாஸிக் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தையும், இவர் சேலத்தில் மிகவும் பிரபலமான கிளாசிக் கன்ஷ்ட்ரக்சன்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவர் ஒரு காலத்தில் சேலம் பொறியாளர் சங்கத்துக்கும் தலைவராக இருந்து பணியாற்றி இருக்கிறார். மேலும் எப்போதும் சிறந்த அரிமாவாக அரிமா சங்கப் பொறுப்புகளில் வீற்றிருந்து செயல்பட்டவர்.
எங்கள் நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப்பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் ஆகியவற்றில் தோளோடு தோளாக நின்று பணியாற்றியவர்.
இராம மூர்த்தி நகரில் நடைபெற்ற தலைமை பொறுப்பு பயிற்சி முகாமில் அப்போதைய பாரதிய ஜனதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக சேலத்தில் மிளிர்ந்த ஆடிட்டர் ரமேஷ், பீட்டர் அல்போன்ஸ், கம்ப்யூனிஸ்ட் ராசகோபாலன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்ட பல நாள் முகாமில் நிறுவனர் வேலாயுதத்துக்கு அடுத்த தலைமைப்பொறுப்பில் தணி, மணி, முனி என எங்களைக் குறிப்பிட்டு அழைப்பிதழ் செய்திருந்தனர்.
அந்த முகாமில் கவிதையாக: நதி நீர் இணைப்பு பற்றி நான் கொடுத்த கவிதையை முடித்ததும் உணர்ச்சிப் பெருக்கில் என்னை வந்து முத்தமிட்டு என்னை இறுக்கி அணைத்தவர் இந்த மணி. அப்போது கலாம் வாஜ்பாயால் எப்போதும் குடியரசுத் தலைவராக முன் மொழியப்படுவார் என்றிருந்த நேரம். அந்தக் கவிதையில் நிறைய இடங்களில் கலாம் கலாம் என்றே முடிந்து இருக்கும்...
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி நீரைக் கர்நாடகாவிடம் கேட்டு நடத்திய அடையாள உண்ணோ நோன்பு போராட்டத்தின் போது நான் ஆற்றிய நதி நீர் இணைப்பு பற்றிய உரை வீச்சை, கங்கை காவிரி இணைப்பு காலத்தின் கட்டாயம் என்ற சிறு கையேடாக வெளியிடுவதில் பெரும் ஆர்வம் காட்டி அதை தமிழகம் ஏன் உலகெங்கும் தமிழ் கூறும் நல் உலகிற்கு எடுத்துச் செல்லக் காரணமாக இருந்தவர். அச்சாக்கி அதை அமரகுந்தி காந்திய இளைஞர் நற்பணி மன்றத்தில் வெளியிட்டோம். ரூ. 5ன் செலவில் அந்த அறிக்கை சிறு நூலை கொண்டு வந்திருந்தோம்...
இதைப் படிக்கும் சேலத்து அன்பர்கள் கிச்சிப்பாளையத்தில் உள்ள் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆழ்ந்த அனுதாபங்களுடனும் வருத்தத்துடனும்.
எங்களது இயக்கத்தின் சசிபெருமாள், அடுத்து சின்னபையன் இப்போது முக்கியமான மணி ஆகியோர் தங்களது இலட்சியத்திலிருந்து விலகாதிருந்து தங்களது உயிரை நீத்துள்ளனர்.
அவர்களை மறுபடியும் பூக்கும் தளம் என்றும் நீங்கா நினைவுகளுடன்
வாழ்வில் எடுத்துச் செல்கிறது...
மக்களுக்கு பணி புரியும் இது போன்ற உண்மையான சேவையாளர் எல்லாம் அடையாளமில்லாமலே மடியும்போது சுயநல நோக்கம் ஒன்றை மட்டுமே கொண்ட நபர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எந்த வித சேவையையும் மக்களுக்கு செய்யாமலேயே பெயர் பெருவது பெரும் அவலத்துக்குரிய இந்திய நாட்டின் நிலை...அது மாறும் வரை...தொடர்வோம் தொடர்வார்கள்... எங்கள் தியாக சிகா மணிகள்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment