நாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை
விடியல் நண்பர்கள் குழு கடந்த 24 ஜூன் 2018ல் என்னை அழைத்து நட்புச்சூரியன், வாழ்வியல் வழிகாட்டி என்ற நினைவுப்பரிசை வழங்கிய அதே நாளில் "புறம் கட உள் பார்க்க, புறம் கட கடவுள் பார்க்க" என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரை வீச்சுக்காக ஒரு நினைவுப்பரிசை வழங்கினார்கள் . அது எங்களது கல்லூரி நண்பர் மட்டுமல்ல எங்களது ஊர்க்கார நண்பர் நாகா எழுதி வெளியிட்டுள்ள "நூலிலிருந்து" கை ராட்டை காந்தி, பாரதி, பகத் சிங் புத்தக அடுக்கு அட்டைப்படத்துடன் 288 பக்க நூலை பரிசாக அளித்தார்கள். இது கோவை பி.எஸ்.ஜி கல்லூரி வளாகத்தில் எமது நண்பர்கள் முன்னிலையில் நாஞ்சில் நாடன் அவர்களை வைத்து வெளியிடும்போது இதன் விலை ரூ.150 என 20 நூல்களை வாங்கிய எனதருமை நண்பர் விடியல் குகன் என்னிடமும் கொண்டு வந்து ஒரு பிரதியை சேர்த்தி இருக்கிறார். இதன் விலை ரூ.200 ஆகும். முதல் பதிப்பு ஜூன் 2018.
இதை பாலமலை முகாமில் கிடைத்த நேர இடைவேளையில் படித்து முடித்துவிட்டேன்.
1992 என நினைக்கிறேன். எனது முதல் புத்தகம் "மறுபடியும் பூக்கும் " என்ற கவிதை நூலை முறைப்படி மேட்டூர் தமிழ் சங்கம் கோ.பெ.நாராயணசாமி, தமிழருவி மணியன், கோனூர் பெருமாள், சிந்தனையாளர் அர்த்தனாரி (இதில் பின் சொன்ன இருவரும் இப்போது இந்த மண்ணில் இல்லை.) ஆகியோர் முன்னிலையில் வெளியிடும்போது, எனக்கும் சொந்த மண்ணுக்கும் நிறைய பிடி விட்டுப் போயிருந்தது, இந்தியா எங்கும் சுற்றி மலை மலையாக காடு காடாக நாடு நாடாக சுற்றித் திரிந்து ஏராளமான அனுபவம் கற்று ஆனால் எல்லாத் தொடர்பையும் அற்று இருந்ததால், இதே நாகா அதாவது நாகச் சந்திரன் இந்த நண்பர், ஓ. தணிகை என்பது நீங்கள்தானா? என வியப்பெய்தினார். என்னுடன் தன் மேலுணர்வற்று வந்து பேசி மகிழ்ந்தார்.
அதன் பின் மறுபடியும் பல்லாண்டு ஓடிய பின் இவர் பெரிய மனிதராக மாறிய பின் தமது குடும்பத்தாருடன் கரூரில் விடியல் நண்பர்கள் முதல் சந்திப்பில் அதாவது கடந்த ஆண்டில் 11.06.2017ல் எனது உரை அப்போது: "நெட்டை மரங்களென நின்றார்" ...அன்று மற்றும் எனது 3 நூல்களை தமது பெண் ஸ்ருதி மூலம் வாங்கிக் கொண்டார்.
ஸ்ருதி அப்போதே மிகவும் பண்பட்ட நிலையில் இருந்தார். மிக அரிய பெண்களுள் அவர் ஒருவராக இருப்பார். அவர் பேரில் இப்போது ஒரு பதிப்பகத்தை கோவை 641 014ல் துவங்கி தமது முதல் நூலான "நூலிலிருந்து" என்ற ஒரு அனுபவச் செறிவான நூலை நூலிழை அறுந்து போகாமல் அழகான ஆடையாக வழங்கியிருக்கிறார்.இவருடைய அலைபேசி: 91 98422 06002 மற்றும் 91 98422 04002. இவருக்கும் எம் குடும்பத்தாருக்கும் இடையே உள்ள இன்னொரு ஒற்றுமை இரு சாரருமே நெசவு அல்லது நெசவாளிக் குடும்பம் சார்ந்தாரே. நான் சொல்வது ஒரே குலம் சாதி என்ற பொருளில் சொல்லப்படுவதல்ல என்பதை எனது ப
ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு புத்தகத்தையாவது இந்த சமூகத்தை நோக்கி வழங்கிச் செல்ல வேண்டும் எனச் சொல்வார் ஆன்றோர். இவர் இப்போது ஆரம்பித்திருக்கிறார்.இனிமேல் இவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
ஒரு புத்தகம் படிக்கும்போதும்,ஒரு திரைப்படம் பார்க்கும்போதும் நாமும் நாயக நாயகி பாவத்திலிருந்தே துய்ப்பதால் நமக்கு அது ஒரு இலயிப்பை ஏற்படுத்தி விடுகிறது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நிலை.
அப்படி இந்த நூலை நான் எந்த இடையூறும் இன்றி முழுதாக வீட்டில் இருந்தாலும் கூட படித்திருக்க மாட்டேன். அதற்கேற்ற சூழல் கால அளவு பாலமலை முகாமில் எனக்கு கிடைத்ததால் அனேகமாக ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன். மேலும் அதில் எனதுருவமும் அதிகமாகத் தெரிந்தது பகத் சிங், பாரதி, , காந்தி ஆகியோரைத் தொட்டுச் செல்லும்போது.
48 கட்டுரை அல்லது சிறு சிறு கட்டுகளாக இந்த நூலைக் கட்டி இருக்கிறார். அச்சுப்பிழையை கண்டுபிடிக்க இன்னொரு முறை படிக்கலாமா என யோசித்திருக்கிறேன்...அவ்வளவு நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கிறது.
அடியேனும், விடியல் குகனும், கல்லூரிப் பருவத்தில் விடியல் என்ற கையெழுத்துப் பிரதி எழுத ஆரம்பித்த போது இவரும் ஒரு பிரதியை ஆரம்பித்து நடத்தினார். மேலும் எமது கல்லூரியும் எங்களை எல்லாம் இணைத்து ஒரு அச்சுப்பத்திரிகை கொண்டு வந்ததாக நினைவு. அதற்காக ஒரு போட்டி வைத்து அதில் எனது "உழைப்பு" என்ற கவிதை முதல் பரிசுக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்தக் கவிதையை கல்லூரி நிர்வாக பத்திரிகை குழுவினர்க்கு விடியல் குகன் அவர்களே கொண்டு சேர்த்தார் என்பதையும் என்னால் இப்போதும் நினைவு கூர முடிகிறது.
தொழில் சார்ந்தும், இலக்கிய ஆர்வம், பொதுவெளிக்காகவும் நிறைய மனிதர்களுடன் சேர்ந்து பழகியிருப்பதும் அதில் ஒர் நாகரீகம் மிளிர்வதையும் நிறைய அதற்காக பயணங்கள் மேற்கொண்டிருப்பதையும் இவர் தமது எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
வாட்ஸ் ஆப்...கட்செவித் திரட்சி ....மூலம் நூல்களைப் பற்றி இவர் நிறைய ஆய்வு செய்து அனைவரிடமும் அந்த நூல்களின் அழகை கொண்டு சேர்ப்பதாக நண்பர்கள் கூறினர். படித்தேன் சில பலவற்றை. நன்றாகவே இருந்தது.
இது பற்றி, இவர் பற்றி தமிழ் இந்து நாளேடும், ஆனந்த விகடன் நூலும் சிறப்பு வெளியீடுகள் செய்திருக்கின்றன.
நிறைய நல்ல நடப்புகள், நல்ல நட்புகள், நல்ல குறிப்புகள், நல்ல மனிதர்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள்... நிறைய புத்தகம் பற்றியும் பிரபலங்கள் அவர் தம் உழைப்பு பற்றியும் பேசுகிறார்.
இந்த நூலை இவரின் துணைவிக்கு, மகளுக்கு, தாய்க்கு, பெற்றவர்க்கு இப்படி எல்லாம் சமர்ப்பணம் செய்வதன்றி இவருடன் படித்த அந்த மூன்றாண்டு கல்லூரியின் அனைத்து தோழர்களுக்கும் சமர்ப்பித்ததிலிருந்து இவரின் நட்பு பாராட்டுதல் எவ்வளவு என விளங்குகிறது . எனவே அதில் நானும் ஒருவனாகி இருக்கிறேன்.
நூல் நல்ல அடையாளப் பதிவாக விளங்க நண்பர் மேலும் மேலும் வெற்றிக் கனிகளை ஈட்ட மேலும் அரிய கவன ஈர்ப்பு கருத்துகளை மக்கள் மேன்மைக்காக பகிர்ந்து கொள்ள மனமுவந்து பாராட்டி வாழ்த்துகிறேன்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment